ரசிகர்களின் இதய சிம்மாசனத்தில் குடியிருக்கும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள்

சென்னை : திரையுலகிலும் அரசியலிலும் சிறப்பாக செயல்பட்டு தனியிடம் பிடித்தவர் முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதா.

15 ஆண்டுகள் முதலமைச்சராக இருந்த இவர் அதிமுகவின் பொதுச் செயலாளராகவும் இருந்து கட்சியை வழிநடத்தியவர்.

முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் வழிகாட்டுதலின்பேரில் அரசியலில் நுழைந்த இவர் இரும்பு பெண்மணியாக தன்னை நிலைநாட்டிக் கொண்டார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா

முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதா நடிகை, முதல்வர் மற்றும் அதிமுக பொதுச் செயலாளர் என பன்முகத் திறமையுடன் வலம்வந்தவர். நடிகையாகவும் முன்னணியில் இருந்த இவர், எம்ஜிஆரின் வழிகாட்டுதலில் அதிமுகவில் இணைந்து எம்ஜிஆருக்கு பின்பு முதல்வராக மாறினார்.

15 ஆண்டுகள் முதலமைச்சர்

15 ஆண்டுகள் முதலமைச்சர்

தொடர்ந்து 15 ஆண்டுகள் தமிழக முதல்வராக இவர் இருந்துள்ளார். இரும்பு பெண்மணியாக கட்சியை வழிநடத்திய இவர், முதல்வராக பொறுப்பேற்று தமிழகத்திற்கும் பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தினார். இதுமட்டுமின்றி படிப்பிலும் சிறந்து விளங்கினார். பள்ளியிறுதி தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் பெற்றுள்ளார்.

பன்முகத் திறமை

பன்முகத் திறமை

இதுமட்டுமின்றி பரதநாட்டியம், கர்நாடக இசை ஆகியவற்றையும் திறம்பட கற்றுத் தேர்ந்துள்ளார். வெண்ணிற ஆடை படத்தில் நடிகையாக அறிமுகமான ஜெயலலிதா, அந்தப் படத்தில் தனது தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தினார். தொடர்ந்து எம்ஜிஆருடன் இவர் ஜோடி சேர்ந்து நடித்த ஆயிரத்தில் ஒருவன் இவருக்கு நல்ல பாராட்டுக்களையும் தொடர்ந்து சினிமா வாய்ப்புகளையும் வெற்றுத்தந்தது.

127 படங்களில் நடிப்பு

127 படங்களில் நடிப்பு

எம்ஜிஆருடன் மட்டுமே 28 வெற்றிப் படங்களில் இவர் இணைந்து நடித்துள்ளார். இவற்றில் பெரும்பான்மையானவை வெற்றிப் படங்களாக அமைந்தவை. தென்னிந்திய மொழிகளில் மட்டுமின்றி இந்தியிலும் சேர்த்து மொத்தம் 127 படங்களில் நடித்துள்ள இவர், அம்மா என்றால் அன்பு என்ற பாடலை பாடி ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

7 மொழிகளில் பேச்சுத்திறமை

7 மொழிகளில் பேச்சுத்திறமை

இவருக்கு 7 மொழிகளில் பேசத்தெரியும் என்பது கூடுதல் சிறப்பு. கடந்த 1980ல் எம்ஜிஆர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த ஜெயலலிதா, கொள்கை பரப்பு செயலாளர் மற்றும் சத்துணவு திட்ட உயர்மட்டக் குழுவின் உறுப்பினர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் என தன்னை உயர்த்திக் கொண்டார்.

பல்வேறு திட்டங்கள்

பல்வேறு திட்டங்கள்

எம்ஜிஆர் மறைவிற்கு பிறகு பிளவுப்பட்ட அதிமுகவை வலிமைப்படுத்தி, கடந்த 2001, 2011 மற்றும் 2016 சட்டமன்ற தேர்தல்களில் அபார வெற்றி பெற்று தமிழகத்தின் முதலமைச்சராக பதவி வகித்தார். இவரது தொட்டில் குழந்தை திட்டம், மழை நீர் சேமிப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் இந்திய அளவில் கவனம் பெற்றவை.

இரும்புப் பெண்மணி

இரும்புப் பெண்மணி

திரையுலகில் 17 ஆண்டுகள் சிறந்த நடிகையாக வலம்வந்த ஜெயலலிதா, 6 முறை தமிழக முதல்வர், 29 ஆண்டுகள் கட்சியின் பொதுச் செயலாளர் என சிறப்பாக செயல்பட்டார். இந்திய அளவில் சிறப்பாக பேசப்பட்ட ஜெயலலிதா, பல முக்கிய முடிவுகளை அதிரடியாக எடுத்து இரும்புப் பெண்மணியாக வலம் வந்தார்.

74வது பிறந்தநாள்

74வது பிறந்தநாள்

இந்நிலையில் இன்றைய தினம் ஜெயலலிதாவின் 74வது பிறந்தநாளையொட்டி அதிமுகவினர் பல்வேறு நிகழ்ச்சிகளை கட்சி சார்பில் ஏற்பாடு செய்திருந்தனர். இதனிடையே அரசு சார்பில் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X