கமல், கேஎஸ் ரவிக்குமாருக்கு பிரான்ஸ் அரசு பாராட்டு!

பிரான்ஸில் படப்பிடிப்பு நடத்துபவர்களை ஊக்குவிக்கவும் சலுகைகள் தரவும் அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.
இதுவரை பிரான்ஸில் படமாக்கப்பட்ட தமிழ்ப் படங்கள் மற்றும் அதன் கலைஞர்களை அங்கீகரிக்கும் விதத்தில் சிறப்புக் கூட்டம் ஒன்றிற்கு பிரான்ஸ் நாட்டு தூதரகம் ஏற்பாடு செய்திருந்தது.
சென்னை கன்னிமாரா ஹோட்டலில் நடந்த இந்த கூட்டத்தில் நடிகர் கமல்ஹாஸன், இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார், இயக்குநர் சரண், நடிகர் யூகி சேது உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மன்மதன் அம்பு, அசல் போன்ற படங்களை பிரான்ஸில் எடுத்ததற்காக அவர்களுக்கு பிரான்ஸ் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேலும், இப்போது வரவிருக்கும் எங்கேயும் காதல் படமும் முழுக்க முழுக்க பிரான்ஸில் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் நிகழ்வுக்கு அழைக்கப்பட்டிருந்த பிரபுதேவா மற்றும் சில கலைஞர்கள் வரவில்லை.
அஜீத், த்ரிஷா ஆகியோரும் அழைக்கப்பட்டிருந்தனர். ஆனால் வரவில்லை.
முன்னாள் எம்பி வைஜெயந்திமாலா பாலி, நடிகர் நாசர் மற்றும் பிரான்ஸ் நாட்டு தூதரக அதிகாரிகள் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.


Click it and Unblock the Notifications