twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Top 10 Box Office Movies 2022: இந்த ஆண்டு பாலிவுட்டை பதற வைத்த டாப் 10 தென்னிந்திய திரைப்படங்கள்!

    |

    சென்னை: பான் இந்தியா கலாசாரத்தை பாலிவுட் படங்கள் கூட இதுவரை சரியாக கடைபிடிக்காத நிலையில், தென்னிந்திய திரைப்படங்கள் அதை அழகாக கையாண்டு இந்த ஆண்டு பாலிவுட் திரையுலகையே பதற வைத்துள்ளன.

    பாக்ஸ் ஆபிஸில் இந்த ஆண்டு பாலிவுட் சினிமா ரொம்பவே திணறிய நிலையில், 1000 கோடி, 500 கோடி வசூலை எல்லாம் தென்னிந்திய திரைப்படங்கள் சர்வ சாதாரணமாக கடந்து அசத்தின.

    கோலிவுட், டோலிவுட் மற்றும் சான்டல்வுட் இந்த ஆண்டு பாலிவுட்டுக்கு எதிராக செய்த சம்பவம் மிகப்பெரியது என்பது குறிப்பிடத்தக்கது.

    பணத்துக்காக மட்டும் தான் நடிக்கிறேனா... பாலிவுட் போனது இப்படித்தானா..? ஒல்லி நடிகையின் அடடே விளக்கம்பணத்துக்காக மட்டும் தான் நடிக்கிறேனா... பாலிவுட் போனது இப்படித்தானா..? ஒல்லி நடிகையின் அடடே விளக்கம்

    10. டான்

    10. டான்

    இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், சமுத்திரகனி, எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான டான் திரைப்படம் 40 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு உலகளவில் 121 கோடி வசூல் செய்து மிரட்டியது. அப்பா பாசத்தையும் காலேஜ் கலாட்டாவையும் கலந்து கட்டி அடித்த இந்த திரைப்படம் இந்திய ரசிகர்களை சிரிக்கவும் கொஞ்சம் கண்ணீர் சிந்தவும் வைத்தது.

    9. பீம்லா நாயக்

    9. பீம்லா நாயக்

    மலையாளத்தில் வெளியான அய்யப்பனும் கோஷியும் படத்தின் அதிகாரப்பூர்வ தெலுங்கு ரீமேக் தான் பீம்லா நாயக். பவன் கல்யாண் மற்றும் ராணா டகுபதி நடிப்பில் இந்த ஆண்டு வெளியான பீம்லா நாயக் 105 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு உலகளவில் 165 கோடி வசூலை ஈட்டியது.

    8. சர்காரு வாரி பாட்டா

    8. சர்காரு வாரி பாட்டா

    மகேஷ் பாபு, கீர்த்தி சுரேஷ், சமுத்திரகனி நடிப்பில் இந்த ஆண்டு வெளியான சர்காரு வாரி பாட்டா படத்தை கீதா கோவிந்தம் படத்தை இயக்கிய பரசுராம் இயக்கி இருந்தார். விமர்சன ரீதியாக சொதப்பினாலும், இந்த படம் வசூல் ரீதியாக 192 கோடி ரூபாயை பாக்ஸ் ஆபிஸில் இந்த ஆண்டு வசூல் செய்தது குறிப்பிடத்தகக்து.

    7. வலிமை

    7. வலிமை

    இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் குமார், ஹூமா குரேஷி நடித்த வலிமை திரைப்படம் இந்திய ரசிகர்களை இந்த ஆண்டு துவக்கத்திலேயே திரும்பி பார்க்க வைத்தது. அதில் இடம்பெற்ற பைக் ரேஸ் சாகசங்கள் எல்லாம் ஹாலிவுட் தரத்தில் இருந்த நிலையில், கலவையான விமர்சனங்களுக்கு இடையே 200 கோடி ரூபாய் வசூல் ஈட்டி அசத்தியது.

    6. பீஸ்ட்

    6. பீஸ்ட்

    நடிகர் விஜய், பூஜா ஹெக்டே நடிப்பில் இந்த ஆண்டு வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையிலும் பாக்ஸ் ஆபிஸில் 226 கோடி ரூபாய் வசூல் செய்து பாலிவுட் திரையுலகையே வியப்பில் ஆழ்த்தியது. அரபிக் குத்து பாடலின் அதிரடி ஹிட் இந்தியளவை தாண்டி உலகளவில் நடிகர் விஜய்க்கு ரசிகர்களை பெற்றுத் தந்தது.

    5. காந்தாரா

    5. காந்தாரா

    தமிழ், தெலுங்கு சினிமாவை தாண்டி இந்த ஆண்டு கன்னட திரையுலகம் செய்த சம்பவத்தை பாலிவுட் சினிமா உலகம் என்றைக்குமே மறக்காது. அப்படியொரு தரமான சம்பவத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த காந்தாரா திரைப்படம் இந்த ஆண்டு செய்துள்ளது. வெறும் 15 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் 400 கோடி ரூபாய் வரை உலகளவில் பாக்ஸ் ஆபிஸ் வசூல் செய்து 'வ்வ்வ்வ்வோ' என மிரட்டியது.

    4. விக்ரம்

    4. விக்ரம்

    இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பகத் ஃபாசில் மற்றும் சூர்யா நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் 115 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 424 கோடி ரூபாய் வரை உலகளவில் வசூல் செய்து மிகப்பெரிய சாதனையை படைத்தது. இந்தி பெல்ட்டில் பெரியளவில் வசூல் செய்யாமலே தென்னிந்தியா மற்றும் ஓவர்சீஸில் மிகப்பெரிய வசூல் சாதனையை இந்த படம் குவித்தது குறிப்பிடத்தக்கது.

    3. பொன்னியின் செல்வன்

    3. பொன்னியின் செல்வன்

    எம்ஜிஆர் முதல் கமல் வரை எடுக்க முயன்று முடியாமல் போன அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலுக்கு திரை வடிவம் கொடுத்து ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் தியேட்டரை நோக்கி அழைத்து வந்தவர் இயக்குநர் மணிரத்னம். சியான் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்த பொன்னியின் செல்வன் 210 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு உலகளவில் 500 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது.

    2. ஆர்ஆர்ஆர்

    2. ஆர்ஆர்ஆர்

    இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா, சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் 425 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு 1131 கோடி வசூல் செய்து இந்த ஆண்டின் முதல் 1000 கோடி கிளப்பில் இணைந்தது. ஆஸ்கர் உள்ளிட்ட சர்வதேச விருது விழா போட்டியில் இடம்பெற்றுள்ள ஆர்ஆர்ஆர் திரைப்படம் விருதுகளை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    1. கேஜிஎஃப் 2

    1. கேஜிஎஃப் 2

    கேங்ஸ்டர் இல்லை மான்ஸ்டர் என கன்னட திரையுலகில் இருந்து பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடிப்பில் வெளியான கேஜிஎஃப் 2 திரைப்படம் 150 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு 1228 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை செய்து இந்த ஆண்டின் பாக்ஸ் ஆபிஸ் கிங்காக மாறியது. இந்தி பெல்ட்டில் மட்டுமே 500 கோடிக்கும் அதிகமான வசூல் செய்து பாலிவுட் திரையுலகையே பதற வைத்தது இந்த கேஜிஎஃப் 2 திரைப்படம்.

    English summary
    From KGF 2 to Don: Top 10 South Indian Movies which rules Box Office 2022 and gives a sleepless nights to many Bollywood big hero movies. South Indian movies ruled the Indian Box Office this year.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X