Best Movies of 2023: இந்த ஆண்டின் சிறந்த டாப் 5 படங்கள் லிஸ்ட் இதோ.. எல்லாமே தரமான சம்பவம்!

சென்னை: 2023ம் ஆண்டு இன்னும் 10 நாட்களில் முடிய உள்ள நிலையில், இந்த ஆண்டு இதுவரை வெளியான படங்களில் ஃபேவரைட் டாப் 5 படங்களை தவிர்த்து சிறந்த படங்கள் லிஸ்ட்டில் இடம்பிடித்துள்ள அந்த 5 படங்கள் குறித்த பட்டியலை இங்கே காண்போம்.

ரஜினிகாந்தின் ஜெயிலர், விஜய்யின் லியோ, அஜித்தின் துணிவு, சிவகார்த்திகேயனின் மாவீரன் உள்ளிட்ட படங்கள் ஃபேவரைட் லிஸ்ட்டில் இடம்பெற்றிருந்தன.

இந்நிலையில், குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட்டாலும் நிறைவான கதையம்சத்துடன் தனித்து நின்ற படங்களில் ரசிகர்களை கவர்ந்த படங்களின் லிஸ்ட்டை இங்கே காணலாம் வாங்க..

From Por Thozhil to Dada: Tamil Cinema Best Movies of 2023 list is here

டாடா: இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் கவின், அபர்ணா தாஸ் நடிப்பில் இந்த ஆண்டு ஆரம்பத்தில் வெளியான டாடா படம் ரசிகர்கள் மனங்களை வென்று பல வாரங்கள் தியேட்டரில் ஓடி நல்ல வசூலையும் ஈட்டியது. தாயில்லாமல் குழந்தையை வளர்க்கும் தாயுமானவனாக கவின் நடித்திருந்தது மற்றும் படத்தில் இடம்பெற்ற புதுமையான காமெடி காட்சிகள் பலரையும் சிரிக்க வைத்தன.

From Por Thozhil to Dada: Tamil Cinema Best Movies of 2023 list is here

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே. சூர்யா, நிமிஷா சஜயன் நடிப்பில் வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் கமர்ஷியல் படத்தையும் தாண்டி அதில் மிகப்பெரிய அரசியலை மறைத்து வைத்து கிளைமேக்ஸில் வெளிப்படுத்திய விதத்திற்காக பாராட்டுக்களை அள்ளி வருகிறது.

From Por Thozhil to Dada: Tamil Cinema Best Movies of 2023 list is here

மாமன்னன்: மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான மாமன்னன் படம் ஒரு நாற்காலியின் முக்கியத்துவத்தை வைத்து பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்கிற நீதி போதனையையும் உலகில் பிறந்த அனைவரும் சமமானவர்கள் தான் உயர்வு தாழ்வு மனிதர்கள் பார்க்கக் கூடாது என்கிற கருத்துடன் வெளியாகி பலரையும் பிரம்மிக்க வைத்தது.

From Por Thozhil to Dada: Tamil Cinema Best Movies of 2023 list is here

விடுதலை: இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் இந்த ஆண்டு வெளியான விடுதலை திரைப்படம் போலீஸ் கஸ்டடியில் நடக்கும் கொடுமைகளை தோலுரித்துக் காட்டியிருந்தது. சூரி, விஜய்சேதுபதி, பவானிஸ்ரீ, சேத்தன், கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்த இந்த படம் அரசு எப்படி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அப்பாவி மக்களை துன்புறுத்தியது என்கிற வலி நிறைந்த உண்மை கதைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட துணைவன் நாவலை தழுவி உருவாக்கப்பட்டு இருந்தது.

From Por Thozhil to Dada: Tamil Cinema Best Movies of 2023 list is here

போர் தொழில்: இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் இந்த ஆண்டு சரத்குமார், அசோக் செல்வன், மறைந்த நடிகர் சரத்பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான போர் தொழில் திரைப்படம் சைக்கோ த்ரில்லர் படமாக வெளியாகி கடைசி நிமிடம் வரை ட்விஸ்ட் மற்றும் சஸ்பென்ஸ் கலந்து ரசிகர்களை ரசிக்க வைத்தது. குறைந்த பட்ஜெட்டில் உருவான இந்த படம் 50 கோடி வரை வசூல் ஈட்டியது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த ஆண்டு வெளியான சித்தா, குட் நைட், பார்க்கிங் உள்ளிட்ட படங்களும் நல்ல தரமான படங்களாகவே மக்களின் பாராட்டுக்களை பெற்றுள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X