ரோல்ஸ் ராய்ஸ் GHOST முதல் BEAST பட சம்பளம் வரை.. விஜய்யின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
சென்னை: நடிகர் விஜய்யின் 47வது பிறந்தநாளை ரசிகர்கள் பிரபலங்கள் என பலரும் வாழ்த்து மழையில் தெறிக்க விட்டு கொண்டாடி வருகின்றனர்.
இதுவரை 64 படங்களில் நடித்துள்ள நடிகர் விஜய் 65வது படமாக இயக்குநர் நெல்சன் இயக்கும் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார்.
நடிகர் விஜய்யின் ஒட்டுமொத்த சொத்த மதிப்பு குறித்து வெளியாகி இருக்கும் மலைக்க வைக்கும் தகவல்கள் இதோ உங்களுக்காக..

வசூல் வாத்தியார்
கோலிவுட்டில் 300 கோடி வசூலை அசால்ட்டாக தனது படங்களின் மூலம் எடுத்து வரும் இந்த வசூல் வாத்தியாருக்கு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் BEAST படத்திற்கு ரூ. 100 கோடி வரை சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

6 கோடி கோஸ்ட்
நடிப்பு மற்றும் நடன திறமையால் உலகளவில் ஏகப்பட்ட ரசிகர்களை குவித்துள்ள நடிகர் விஜய்யிடம் ரூ.6 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சொகுசு கார், ரூ. 1.30 கோடி மதிப்பிலான ஆடி A8, ரூ.75 லட்சம் மதிப்புள்ள BMW series 5, ரூ. 90 லட்சம் மதிப்புள்ள BMW X6, ரூ. 35 லட்சம் மதிப்புள்ள மினி கூப்பர் உள்ளிட்ட கார்கள் மற்றும் விலையுயர்ந்த சைக்கிள் மற்றும் பைக்குகளும் உள்ளன.

ஆண்டு வருமானம்
நடிகர் விஜய்யின் ஆண்டு வருமானம் ரூ. 100 கோடி முதல் ரூ. 120 கோடி வரை உள்ளதாக கடந்த 2019 முதல் கணிக்கப்பட்டுள்ளது. சினிமாவை தவிர சில விளம்பரங்களின் தூதர் என்கிற முறையிலும் நடிகர் விஜய்க்கு ஆண்டுக்கு ரூ. 10 கோடி வரை வருமானம் வருகிறதாம்.

410 கோடி சொத்து
இதுவரை 64 படங்களில் நடித்துள்ள நடிகர் விஜய், தற்போது 65வது படமாக பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். சென்னையில் சாலி கிராமம், நீலாங்கரை மற்றும் பனையூர் உள்ளிட்ட இடங்களில் நடிகர் விஜய்க்கு பங்களாக்கள் உள்ளன. நடிகர் விஜய்யின் மொத்த சொத்து 56 மில்லியன் டாலர்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் சுமார் 410 கோடியாம்.

வருமான வரி சோதனை
மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பில் இருந்த நடிகர் விஜய்யை வருமான வரி சோதனை அதிகாரிகள் அழைத்துச் சென்றது பெரும் பரபரப்பை கிளப்பியது. பிகில் படத்தில் நடிகர் விஜய் வாங்கிய சம்பளம் தொடர்பாக சர்ச்சைகள் கிளம்பிய நிலையில், அந்த ரெய்டு நடத்தப்பட்டது. ஆனால், நடிகர் விஜய் அனைத்திற்கும் உரிய கணக்குகளை வைத்திருப்பதாக சோதனையின் முடிவில் வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியிருந்தனர்.
Recommended Video

ஏகப்பட்ட உதவிகள்
நடிகர் விஜய்யின் ரசிகர் மன்றங்கள் எல்லாம் விஜய் மக்கள் இயக்கமாக மாறி உள்ளன. தளபதி பிறந்தநாளையே welfare day என நலத்திட்ட பணிகளை செய்யும் நாளாகத் தான் ரசிகர்கள் கொண்டாடி ஏகப்பட்ட மக்களுக்கு உதவி வருகின்றனர். தனிப்பட்ட முறையிலும் நடிகர் விஜய் சினிமா தொழிலாளர்கள், ரசிகர்கள் மற்றும் பொது மக்களுக்கு ஏகப்பட்ட உதவிகளையும் செய்து வருகிறார்.

அரசியல் என்ட்ரி
தமிழ்நாட்டிலேயே கோடிக் கணக்கில் நடிகர் விஜய்க்கு ரசிகர்கள் உள்ளனர். மக்கள் மத்தியில் மிகப்பெரிய செல்வாக்கும் இருக்கிறது. ஒவ்வொரு முறை தேர்தல் வரும் போது நடிகர் விஜய்யின் ஆதரவு யாருக்கு இருக்கும் என்கிற எதிர்பார்ப்பும் எழத் தொடங்கி இருக்கிறது. மேலும், அடுத்த சட்டப்பேரவை தேர்தலில் விஜய் அரசியல் களம் காண்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











