»   »  ரோஸ் மேரி, நீ என் ஜூஸ் மாதிரி ...

ரோஸ் மேரி, நீ என் ஜூஸ் மாதிரி ...

Posted By:
Subscribe to Oneindia Tamil

கானா உலகநாதனின் கலக்கல் வாய்ஸில், அட்டகாசமான ஒரு கானாப் பாட்டு தங்கர்பச்சானின் பள்ளிக்கூடம் படத்தில் இடம்பெறுகிறது.

தங்கர், சீமான், நரேன், சினேகா, ஷ்ரேயா ரெட்டி என பெரும் கூட்டமே நடிக்கும் படம் பள்ளிக்கூடம். படு வேகமாக பண்ருட்டிபக்கம் .காமிட்டு பள்ளிக்கூடத்தைக் கட்டி வருகிறார் தங்கர்.

அவர் சின்ன வயசில் நடித்த அதே பள்ளிக்கூடத்தில்தான் படப்பிடிப்பை நடத்தி வருகிறார் தங்கர். இப்படத்தில் ஒரு சூப்பர்பாட்டை போட்டிருக்கிறார்கள். கானா உலகநாதனும், சுஜாவும் இந்தப் பாட்டுக்கு பாடி ஆடி அசத்தியுள்ளனர்.

ரோஸ் மேரி, நீ என் ஜூஸ் மாதிரி என்று ஆரம்பிக்கும் இந்தப் பாட்டு, வாள மீனு பாடலைப் போல ஹிட் ஆகும் என்கிறதுபள்ளிக்கூடம் யூனிட். சுஜாவின் வாளிப்பான அழகை படு வனப்பாக எடுத்துள்ளாராம் தங்கர்.

பாடலை எழுதியவரும் கானா உலகநாதனே. இப்பாடலில் இன்னொரு விசேஷம் என்னவென்றால் எம்.ஜி.ஆர். நடித்து, ஆடிப்பாடிய 5 சூப்பர் ஹிட் பாடல்களை ரீமிக்ஸ் செய்து இணைத்துள்ளனராம்.

தொட்டால் பூ மலரும், ஆயிரம் நிலவே வா, நேத்து பூத்தாளே ரோஜா மொட்டு, கடலோரம் வாங்கிய காற்று, நாணமோ ஆகியஐந்து பாடல்களையும் ரீமிக்ஸ் செய்து ரோஸ் மேரி நீ என் ஜூஸ் மாதிரி பாடலுக்கு இடையே இணைத்துள்ளனராம்.

பாட்டின் வரிகளுக்கேற்ப படு ஜூஸியாக இருக்குமாம் இப்பாட்டு. சுஜாவின் ஆட்டமோ, அதை விட ஐஸியாகவந்திருக்கிறதாம்.

அப்படீன்னா பெஞ்சு பார்ட்டிகளுக்கு கொண்டாட்டம்தான்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil