»   »  கத கத காயத்ரி!

கத கத காயத்ரி!

Subscribe to Oneindia Tamil

சின்னப் புள்ளையாக இருந்து, சிலுசிலு நாயகியாக மாறி தெலுங்கு ரசிகர்களுக்குக் கதகதப்பூட்ட கிளம்பியுள்ளார் முன்னாள் குட்டிப் பொண்ணுகாயத்ரி.

முன்னாள் குட்டி நடிகைகள் எல்லாம் வயசுக்கு வந்த பின்னர் நாயகியாக அவதாரம் எடுப்பது கோலிவுட்டில் அதிகரித்து வருகிறது. பேபி கல்யாணிஇப்போது பூர்ணிதாவாக பெயர் மாறி, விடலைப் பசங்களை வியர்க்க வைத்து வருகிறார்.

அதேபோல துறு துறு ஷீலா, குளு குளு நாயகியாக மாறி கிளாமரில் கில்லி ஆடி வருகிறார். இந்த வரிசையில் லேட்டஸ்டாக சேர்ந்துள்ளவர்தான்காயத்ரி.

குட்டிப் பெண்ணாக இருந்தபோது தமிழில் பல படங்கள், தொலைக்காட்சி சீரியல்களில் திறமை காட்டியவர்தான் இந்த காயத்ரி. இப்போது வளர்ந்துவாலிபத்தை எட்டி விட்ட காயத்ரி, ஹீரோயினாக மாறி விட்டார்.

முதல் விளையாடலை தெலுங்கில் ஆரம்பித்திருக்கும் காயத்ரி, சந்தியா என்ற படத்தில் பாலாதித்யாவுடன் ஜோடி போட்டு கன ஜோராக கிளாமரில்விளையாடியுள்ளார்.

பட ஸ்டில்களைப் பார்த்தாலே, காயத்ரியின் கிளாமர் களியாட்டத்தைப் புரிந்து கொள்ள முடியும். பாலாதித்யாவிடம் தன்னை முழுமையாகஒப்புவித்து ரசிகர்களை உசுப்பேத்தியுள்ளார் காயத்ரி.

காயத்ரியின் இளமை ததும்பும் கவர்ச்சி தெலுங்கு ரசிகர்களை பின்னிப் பெடலெடுக்கப் போகிறது. உல்லாசமாய், உற்சாகமாய் அவர் கொடுத்துள்ளபோஸ்களும், ஆட்டம், பாட்டமும் படு அமர்க்களமாக உள்ளது.

மஞ்சள் வெயிலை கண் கூச வைக்கும் வகையில், இளமை ஊஞ்சலாட்டம் போட்டுள்ளது காயத்ரியின் கன ஜோரான கிளாமர். பச்சை நிற சேலையில்பசுஞ் சோலையாக மாறி நெஞ்சங்களை கிள்ளுகிறார் காயத்ரி.

இப்படியே காயத்ரி புராணம் பாடிக் கொண்டிருக்கலாம். தெலுங்கு ரசிகர்களுக்கு முதலில் தரிசனம் தரும் காயத்ரி, அப்படியே தமிழுக்கும் தாவிதமிழக விடலைகளின் உள்ளங்களையும் விண்டு விழுங்கப் போகிறாராம்.சீக்கிரமா வந்துருத்தா!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil