»   »  காயத்ரி கல்யாண வைபோகமே!

காயத்ரி கல்யாண வைபோகமே!

Subscribe to Oneindia Tamil

நடிகை காயத்ரி ரகுராமுக்கு திருமணம் முடிந்தது. கல்யாண வரவேற்பு நிகழ்ச்சியில்நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டு புதுமணத் தம்பதியை வாழ்த்தினார்.

கமலின் ஆஸ்தான டான்ஸ் மாஸ்டர்களில் ஒருவரான ரகுராம், முன்னாள் டான்ஸ்மாஸ்டர் கிரிஜா தம்பதியினரின் மகள் காயத்ரி ரகுராம். சில படங்கள், தொலைக்காட்சிதொடரில் நடித்துள்ள காயத்ரி பின்னர் அதையெல்லாம் விட்டு அமெரிக்காவுக்குபடிக்கப் போனார்

இந் நிலையில் அமெரிக்காவில் சாப்ட்வேர் என்ஜினியராக உள்ள தீபக்குக்கும்காயத்ரிக்கும் திருமணம் முடிவானது.

இவர்களது திருமணம் சென்னை சாந்தோம் மேயர் ராமநாதன் மண்டபத்தில் நேற்றுகாலை வெகு விமரிசையாக நடந்தது. திருமணத்திற்கு நடிகைகள் சுஹாசினி, குஷ்பு,ஸ்ரீபிரியா, காமெடி நடிகர் எஸ்.வி.சேகர் உள்ளிட்ட திரையுலகப் பிரமுகர்கள்வந்திருந்து மணமக்களை வாழ்த்தினர்.

மாலை திருமண வரவேற்பு நடந்தது. இதில் நடிகர் ரஜினிகாந்த் வந்திருந்துமணமக்களை ஆசிர்வதித்தார். நடிகர்கள் சரத்குமார், சத்யராஜ், சூர்யா,நிெப்போலியன், ஸ்ரீகாந்த், துஷ்யந்த், ராஜேஷ், தியாகு, பிரபு தேவா, முரளி,பொன்வண்ணன்,

நடிகைகள் ராதிகா, குஷ்பு, சங்கவி, மும்தாஜ், விந்தியா, பூர்ணிமா பாக்யராஜ்,சரண்யா, சொர்ணமால்யா, சீமா, சச்சு உள்ளிட்டோரும் வந்திருந்து மணமக்களைவாழ்த்தினர்.

இதேபோல இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட திரையுலகின் முன்னணிப்பிரமுகர்களும் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை ரகுராம், கிரிஜா ரகுராம், கிரிஜாவின் சகோதரிகளும்,டான்ஸ் மாஸ்டர்களுமான கலா, பிருந்தா ஆகியோர் வரவேற்றனர்.

Read more about: gayatri marries deepak
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil