»   »  டிச. 8-காயத்ரி ரகுராமுக்கு கல்யாணம்

டிச. 8-காயத்ரி ரகுராமுக்கு கல்யாணம்

Subscribe to Oneindia Tamil

நடிகை காயத்ரி ரகுராமுக்கும், அமெரிக்காவில் சாப்ட்வேர் என்ஜீனியராகபணியாற்றும் தீபக் என்பவருக்கும் டிசம்பர் 8ம் தேதி கல்யாணம் நடைபெறுகிறது.

பிரபல டான்ஸ் மாஸ்டர்களான கிரிஜா மற்றும் ரகுராம் ஜோடியின் மகள்தான் காயத்ரி.கிரிஜாவின் சகோதரிகளான கலா மற்றும் பிருந்தா ஆகியோரும் டான்ஸ்மாஸ்டர்கள்தான்.

அம்மா, அப்பாவைப் போலவே நடனத்தில் திறமை பெற்ற காயத்ரி, சார்லி சாப்ளின்படம் மூலம் நடிகையானார். அப்படத்தைத் தொடர்ந்து விசில், விகடன், ஸ்டைல்,பரசுராம் ஆகிய படங்களிலும் நடித்தார். இதைத் தவிர தெலுங்கு, கன்னடம்,மலையாளம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார்.

ஆனால், சினிமா கைவிட்டதால் கிருஷ்ணதுளசி என்ற டிவி தொடரிலும் தலைகாட்டினார்.

சில காலத்திற்கு முன்பு நடிப்புக்கு முழுமையாக முழுக்கு போட்டுவிட்ட காயத்ரிரகுராம், விஷூவல் கம்யூனிகேஷன் படிக்க அமெரிக்கா சென்றார். அங்கு படிப்பைமுடித்துவிட்ட நிலையில் காயத்ரிக்கு மாப்பிள்ளை பார்த்துவிட்டனர் ரகுராம்-கிரிஜாதம்பதி.

தீபக் என்ற சாப்ட்வேர் என்ஜினியர் தான் மாப்பிள்ளை. இவர் அமெரிக்காவிலேயேசெட்டிலாகிவிட்டவர். இவருக்கும் காயத்ரிக்கும் சில நாட்களுக்கு முன்அமெரிக்காவிலேயே நிச்சயதார்த்தம் நடந்தது.

டிசம்பர் 8ம் தேதி சென்னை சாந்தோமில் உள்ள மேயர் ராமநாதன் திருமணமண்டபத்தில் திருமணம் நடக்கவுள்ளது. அன்று மாலை 6.30 மணிக்கு வரவேற்புக்கும்ஏற்பாடு செய்துள்ளனர்.

Please Wait while comments are loading...