காதல் மன்னன் ஜெமினி கணேசன் பிறந்தநாள்.. ஜெமினியை கட்டுப்பாட்டில் வைத்திருந்த சாவித்திரி?
சென்னை: Gemini Ganesan Birthday (ஜெமினி கணேசன் பிறந்தநாள்) காதல் மன்னன் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்ட ஜெமினி கணேசனின் பிறந்தநாள் இன்று.
புதுக்கோட்டையில் பிறந்தவர் ஜெமினி கணேசன். கணபதி சுப்ரமணியன் சர்மா என்ற இயற்பெயரை கொண்ட அவர் பின் நாட்களில் ராமசாமி கணேசன் என தன்னுடைய பெயரை மாற்றிக்கொண்டார். அடிப்படையில் வேதியியல் படித்த அவர் சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றினார். ஆசிரியராக இருந்தாலும் அவருக்கு கலை மீது தீராத ஆர்வம் இருந்ததுவந்தது.

ஜெமினி: கலை மீது ஆர்வம் கொண்டாலும் எப்படி திரையுலகில் நுழைவது என்று தெரியாமல் இருந்தவர் ஆரம்பத்தில் ஜெமினி ஸ்டூடியோவில் பணிக்கு சேர்ந்தார். பிறகு மிஸ் மாலினி என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். கணேசன் என்ற பெயரில் அவர் அறிமுகமானாலும் பராசக்தி மூலம் பிரபலமான சிவாஜியும் கணேசன் என்று அழைக்கப்பட்டதால் தான் பணியாற்றிய ஜெமினி ஸ்டூடியோவின் பெயரை தன்னுடைய பெயருக்கு முன்னர் சேர்த்து ஜெமினி கணேசனாக மாறினார்.
ஹீரோ ஜெமினி: கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாக அறிமுகமான ஜெமினி கணேசன் பெண் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதன்படி மனம்போல மாங்கல்யம், வஞ்சிக்கோட்டை வாலிபன் நான் அவனில்லை உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்தவர்; நான் அவனில்லை படத்தில் மட்டும் ஒன்பது ரோல்களில் நடித்து அனைவரையும் அசத்தினார்.
அந்தக் கால விஜய் சேதுபதி: தற்போது விஜய் சேதுபதி எப்படி ஹீரோவாக இருந்தாலும் இன்னொரு நடிகருடன் சேர்ந்து நடிப்பது, வில்லனாக நடிப்பது என கலக்கிவருகிறாரோ அதேபோல்தான் ஜெமினி கணேசனும். தன்னுடைய கரியர் பீக்கில் இருந்தபோதே எம்ஜிஆர், சிவாஜி கணேசன் உள்ளிட்டோருடன் இணைந்து நடித்தார். அது ஒருபக்கம் அவருக்கு பலமாக இருந்தாலும் மற்றொரு பக்கம் பலவீனமாக இருந்தது.
காதல் மன்னன்: சிவாஜியை நடிகர் திலகம், எம்ஜிஆரை புரட்சி தலைவர் என்று பலரும் அழைக்க கோலிவுட்டில் முதல் காதல் மன்னனாக ஜெமினி கணேசன் மாறினார். அவரது உருவம், ஹேர் ஸ்டைல் என அனைத்துமே பெண்களை கவர்ந்தன. சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் தமிழ் சினிமாவின் முதல் சாக்லேட் பாயாக வலம் வந்தவர் ஜெமினி கணேசன் என்பது குறிப்பிடத்தக்கது.
சாவித்திரியுடன் திருமணம்: ஜெமினி கணேசனுக்கு ஏற்கனவே திருமணம் நடந்து குழந்தைகள் இருந்தனர். அந்த சமயத்தில்தான் மனம் போல மாங்கல்யம் படத்தில் சாவித்திரியுடன் நடித்தார். முதல் படத்திலேயே இருவருக்குமான பழக்கம் காதலாக மாறியது. அதுமட்டுமின்றி திருமணமும் செய்துகொண்டனர்.
இது வெளியில் தெரியாமல் இருந்தபோது ஒரு விளம்பர ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்ட சாவித்திரி, தன் பெயருடன் கணேசன் என்பதையும் சேர்த்து போட்டார் என்றும் அதன் மூலம்தான் இருவரும் திருமணம் செய்துகொண்டனர் என்பது தெரியவந்ததாகவும் ஒரு தகவல் உண்டு. சாவித்திரிக்கும், ஜெமினிக்கும் இருந்த உறவை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றில் கீர்த்தி சுரேஷ் நடித்த மகாநடி படத்தில் தெளிவாக காட்டியிருப்பார்கள்.
கட்டுப்பாட்டில் வைத்திருந்த சாவித்திரி?: இந்த சூழலில் ஜெமினி கணேசனுக்கும் சாவித்திரிக்கும் இருந்த உறவு குறித்து தெரியவந்திருக்கிறது. அதாவது, ஜெமினி கணேசன் மீது சினிமாவில் இருந்த அத்தனை பெண்களுக்கு ஒரு கண் இருக்குமாம். 18 வயதில் முதல் திருமணம் செய்துகொண்டாராம் ஜெமினி கணேசன். முதல் மனைவி மீது பெரிய காதலையே வைத்திருந்தாராம் ஜெமினி.
ஒரு பிரச்னை ஏற்பட்டபோது நடு இரவில் கொட்டும் மழையில் ஜெமினியின் வீட்டுக்கு வந்தாராம் சாவித்திரி. அப்போது சாவித்திரிக்கு அடைக்கலம் கொடுத்த ஜெமினி கணேசன்; சாவித்திரி கெட்டு போய்விடக்கூடாது என்பதற்காக தாலி கட்டினாராம். சாவித்திரியை திருமணம் செய்துகொண்டாலும் முதல் மனைவியை அவர் விவாகரத்து செய்யவில்லையாம். சாவித்திரிக்கு தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளை படிக்க சொல்லிக்கொடுத்ததும் ஜெமினி கணேசந்தானாம். அதேபோல் சாவித்திரிக்கு உண்டான மரியாதையையும் ஜெமினியின் முதல் மனைவி குடும்பமும் கொடுத்திருக்கிறது.
ஆனால் சாவித்திரி அடிப்படையில் ரொம்பவே பொசசிவாக இருப்பாராம். அதன் காரணமாக ஜெமினி கணேசனை அவருடைய முதல் மனைவி வீட்டுக்கு செல்ல அனுமதிக்கவே மாட்டாராம். நீ சென்றால் நான் தற்கொலை செய்துவிடுவேன் என மிரட்டியதாலேயே பல காலம் இரவில் சாவித்திரியுடன் இருக்கும் ஜெமினி பகலில் மட்டும் முதல் மனைவி வீட்டுக்கு வருவாராம். ஒருகட்டத்தில் சாவித்திரியின் மகள் சாவித்திரியை வீட்டை விட்டு அனுப்பியது; சொந்தப் படம் எடுத்து நஷ்டம் அடைந்தது என சாவித்திரியின் சாம்ராஜ்ஜியம் சரிய தொடங்கியதை தாங்கிக்கொள்ள முடியாமல் ஜெமினி கணேசன் குடிக்கு அடிமையானாராம். இந்தத் தகவல்களை ஜெமினியின் மகளான மருத்துவர் கமலா செல்வராஜ் ஒரு பேட்டியில் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











