களைகட்டிய ஜெனிலியா-ரித்தேஷ் திருமண விழா... இன்று நிச்சயதார்த்தம் - நாளை திருமணம்!

By Shankar

மும்பை: நடிகை ஜெனிலியா-நடிகர் ரித்தேஷின் நான்கு நாள் திருமண விழா நேற்று கோலாகலமாகத் தொடங்கியது.

இந்தி நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கிற்கும், நடிகை ஜெனிலியா டிசோசாவுக்கும் நாளை (3-ந்தேதி) திருமணம் நடக்கிறது. இது காதல் திருமணம் ஆகும். இருதரப்பு பெற்றோரின் சம்மதத்துடன் இந்த திருமணம் நடைபெறுகிறது.

இவர்களின் திருமணத்தையொட்டி வட இந்திய பாணியில் 'மெஹந்தி' 'சங்கீத்' ஆகிய நிகழ்வுகள் கடந்த இரு தினங்களாக நடந்தன.

மும்பை பாந்த்ராவில் உள்ள ஒரு ஓட்டலில் நடந்த சங்கீத் நிகழ்ச்சியில் இருதரப்பு உறவினர்களும், நெருங்கிய நண்பர்களும் கலந்து கொண்டனர்.

விருந்தினர்கள் ஆடிப்பாடினர்

சங்கீத் விழாவில் கலந்து கொண்ட விருந்தினர்கள் இந்தி மற்றும் மராத்தி பாடல்களுக்கு ஏற்றபடி ஆடிப்பாடி உற்சாகம் அடைந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் அர்பாஸ் கான், அவருடைய மனைவி மலைக்கா அரோரா, அம்ரிதா அரோரா, அம்ரிதா கவ்ட்ரிகார், நடிகர் அர்ஷத் வார்ஸி உள்பட ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இன்று (வியாழக்கிழமை) ரித்தேஷ்-ஜெனிலியா திருமண நிச்சயதார்த்தம் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை (வெள்ளிக்கிழமை) திருமணம் நடக்கிறது. பின்னர் வரவேற்பு நிகழ்ச்சி நடக்கும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X