எதிர்ப்பை மீறி கொழும்பு சென்ற ஜெனிலியா-பிபாஷா!

அவர் பாய்ஸ் படத்தில் ஷங்கரால் அறிமுகப்படுத்தப்பட்ட ஜெனிலியா டிஸூஸா. சச்சின், சந்தோஷ் சுப்ரமணியம் படங்களிலும் நடித்துள்ளார்.
விஜய் நடிக்கும் வேலாயுதம் படத்தின் நாயகிகளில் இவரும் ஒருவர் என்று கூறிவந்தது நினைவிருக்கலாம்.
தமிழில் அறிமுகமானாலும் தொடர்ந்து தெலுங்கு மற்றும் இந்திப் படங்களில்தான் இவர் நடித்து வருகிறார். கோவாவைச் சேர்ந்த இவர் மராட்டிய முன்னாள் முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக்கின் மகனை காதலிக்கிறார்.
ஐஃபா விழாவுக்கு ரிதேஷ் தேஷ்முக்கும் சென்றுள்ளார். எனவே காதலர் வழியில் ஜெனிலியாவும் இந்த விழாவில் பங்கேற்றுள்ளார். இந்த விழாவுக்குப் போவதன் மூலம் தென்னிந்திய திரையுலகை பகைத்துக் கொள்ள முடியும் என்று தெரிந்தும் அவர் பங்கேற்றுள்ளார்.
ஏற்கெனவே நடிகர் சங்கம் சார்பில் ஈழத் தமிழர் பிரச்சினைக்காக உண்ணாவிரதம் இருந்தபோது, அதில் கலந்து கொள்ளாமல் தவிர்த்தவர் ஜெனிலியா. விளக்கம் கேட்டபோது, தான் நடிகர் சங்க உறுப்பினர் அல்ல என்று திமிராகக் கூறி, பின்னர் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.
பிபாஷா-ஜான் ஆப்ரகாம்:
பாலிவுட்டின் இன்னொரு பிரபல நாயகி பிபாஷா பாஸுவும் இந்த விழாவில் பங்கேற்றுள்ளார். இவரது காதலர் ஜான் ஆபிரகாமுடன் இவர் விழாவில் கலந்து கொண்டார். பிபாஷா தமிழில் சச்சின் படத்தில் விஜய்யுடன் குத்தாட்டம் போட்டவர்.
இவர்களைத் தவிர, அனில் கபூர், விவேக் ஓபராய் சல்மான்கான், ஹ்ரித்திக் ரோஷன், லாரா தத்தா ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.
இன்று ஷில்பா ஷெட்டி விழாவுக்கு வருவார் என இலங்கை அரசு தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications











