»   »  பறந்து கொண்டாடிய கோபிகா!

பறந்து கொண்டாடிய கோபிகா!

Subscribe to Oneindia Tamil

கோல விழி கோபிகா தனது பிறந்தநாளை விமானத்தில் பறந்தபடி கொண்டாட நேர்ந்தது.

ஆலப்புழை அழகி கோபிகாவுக்கு நேற்றுடன் 21 வயசு முடிந்து 22 வயது பிறந்தது. இப்போது வீராப்பு என்ற படத்தில் கோபிகா நடித்து வருகிறார்.இப்படத்தின் ஷூட்டிங் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக நெல்லை பக்கம் நடந்து வந்தது.

புதன்கிழமையே படப்பிடிப்பு முடிந்தது. இதையடுத்து தனது சொந்த ஊ>ல் போய் குடும்பம், உற்றார், உறவினர், நண்பர்களுடன் பொறந்த நாளைகொண்டாட திட்டமிட்டார் கோபிகா.

இதையடுத்து நேற்று காலை நெல்லையிலிருந்து கார் மூலம் மதுரை வந்த கோபிகா அங்கிருந்து விமானத்தைப் பிடித்து சென்னைக்குப் பறந்தார்.அங்கிருந்து கொச்சி சென்று கார் மூலம் ஆலப்புழையை அடைய திட்டமிட்டிருந்தார்.

மாலை 6 மணிக்குத்தான் கொச்சி விமானம் என்பதால் அங்கிருந்து கொச்சி சென்று, பின்னர் கார் மூலம் ஆலப்புழை செல்ல இரவு 10 மணியாகிவிடும் என்பதால் கொண்டாட முடியுமா என்ற கவலையில் இருந்தார்.

இருப்பினும் நம்பிக்கையோடு கொச்சி விமானத்தில் ஏறினார் கோபிகா, விமானத்தில் இருந்த சக பயணிகளுக்கு கோபிகாவின் பிறந்த நாள்விவரம் தெரியவர, அனைவரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனராம்.

மேலும் விமான சிப்பந்திகளே இனிப்புகளையும் வழங்க வானிலேயே பிறந்த நாளை சக பயணிகளும் கொண்டாடினாராம்.

பின்னர் கொச்சியில் இறங்கியதும், காரைப் பிடித்து ஆலப்புழைக்குப் பறந்தார். அங்கு போன பின்னர் நேராக நட்சத்திர ஹோட்டல் ஒன்றுக்குப்பறந்தார்.

அங்கே காத்திருந்த குடும்பத்தினர், நண்பர்களுடன் கேக் வெட்டி அதிகாரப்பூர்வமாக கொண்டாடி,விருந்துண்டு மகிழ்ந்தார்.

வாழ்த்துக்கள் கோ!

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil