டன் போன மகன் ஆங்கிலத்தில் டைட்டில் வைத்த தயாரிப்பாளர்கள் எல்லாம் இப்போது தங்களதுபடத்தின் பெயரை தமிழுக்கு மாற்றி வருகிறார்கள். எல்லாம் வரி விலக்குபடுத்தும்பாடுதான். லேட்டஸ்டாக தமிழுக்கு மாறியிருக்கும் படம் எம்டன் மகன். மெட்டி ஒலி சீரியல் புகழ்திருமுருகன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படம் பட்டிதொட்டியெங்கும் ரிலீஸ்ஆகியிருக்கிறது.திருமுருகனின் முதல் படமான இதில், பரத், கோபிகாஇணையாக நடித்துள்ளனர். நாசருக்கு முக்கியமானகதாபாத்திரம் கொடுத்திருக்கிறார் திருமுருகன். வடிவேலுதான்படத்தின் ஹைலைட். அவருடைய காமெடி ரசிகர்களின்வயிற்றை அறுத்துப்போடும் அளவுக்கு வெடித்துள்ளாராம்இம்சை அரசன்.இதை விட முக்கியமாக, வித்யாசகரின் இசை. ரம்யமாகவந்துள்ளதாம் அத்தனை பாடல்களும். ஒரு பாடலுக்கு எந்தவிதவாத்தியங்களையும் பயன்படுத்தாமல் இயற்கையானசத்தங்களை வைத்தே இசையமைத்து அசத்தியுள்ளாராம்வித்யாசாகர்.எம்டன் மகன் என்ற இந்தப் படத்தின் பெயரை இப்போது எம்.மகன் என்றுசுருங்கிவிட்டது.எம்டன் என்ற பெயர் தமிழகத்தின் மற்ற பகுதி மக்களுக்குத் தெரியுமோ,தெரியாதோ, அந்தக்கால சென்னைவாசிகளுக்கு ரொம்ப நன்னாவே தெரியும்.இரண்டாம் உலகப் போரின்போது ஜெர்மன் நாட்டுக் கப்பல் ஒன்று சென்னையில்(பிரிட்டிஷார் ஆண்டதால்) குண்டு வீசியது. அந்தக் கப்பலின பெயர்தான் எம்டன்.எம்டன் குண்டை போட்டுட்டான் என்று தெறித்து ஓடினார்களாம் அந்த காலசென்னைவாசிகள். எமகாதக போர்க் கப்பலான அந்தக் கப்பலின் பெயரைக்கேட்டாலே அக்கால சென்னை வாசிகள் நடுநடுங்கிப் போய் விடுவார்களாம். அபபடிசிம்ம சொப்பனமாக விளங்கியது எம்டன்.எம்டன் புகழ் பரவ ஆரம்பிக்கவே, கெடுபிடியான, சுதாரிப்பான, கடுகடுபபான, கறார்பேர்வழிகளுககு எம்டன் என்று பெயர் வைக்க ஆரம்பித்தனர். அந்தஅடிப்படையில்தான் தனது படத்திற்கு எம்டன் மகன் என்று பெயர் வைத்தார்திருமுருகன்.எம்டன் தமிழ் பெயர் கிடையாது. எனவே வரி விலக்கு கிடைக்காது. பெயரைமாத்திடுங்கோ என்று அறிந்தவர், புரிந்தவர் எல்லாம் அறிவுரை கூறவே, டன்னைதூக்கிப் போட்டு விட்டார் திருமுருகன்.ஆனால், இதுக்கு அர்த்தம் என்ன என்று கேட்டால் பதில் இல்லை, அர்த்தம் எல்லாம்யாருக்கு வேணும் என்கிறார்கள். தமிழ் சினிமான்னா என்ன வேணா செய்யலாமே...

By Staff

ஆங்கிலத்தில் டைட்டில் வைத்த தயாரிப்பாளர்கள் எல்லாம் இப்போது தங்களதுபடத்தின் பெயரை தமிழுக்கு மாற்றி வருகிறார்கள். எல்லாம் வரி விலக்குபடுத்தும்பாடுதான்.

லேட்டஸ்டாக தமிழுக்கு மாறியிருக்கும் படம் எம்டன் மகன். மெட்டி ஒலி சீரியல் புகழ்திருமுருகன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படம் பட்டிதொட்டியெங்கும் ரிலீஸ்ஆகியிருக்கிறது.

திருமுருகனின் முதல் படமான இதில், பரத், கோபிகாஇணையாக நடித்துள்ளனர். நாசருக்கு முக்கியமானகதாபாத்திரம் கொடுத்திருக்கிறார் திருமுருகன். வடிவேலுதான்படத்தின் ஹைலைட். அவருடைய காமெடி ரசிகர்களின்வயிற்றை அறுத்துப்போடும் அளவுக்கு வெடித்துள்ளாராம்இம்சை அரசன்.

இதை விட முக்கியமாக, வித்யாசகரின் இசை. ரம்யமாகவந்துள்ளதாம் அத்தனை பாடல்களும். ஒரு பாடலுக்கு எந்தவிதவாத்தியங்களையும் பயன்படுத்தாமல் இயற்கையானசத்தங்களை வைத்தே இசையமைத்து அசத்தியுள்ளாராம்வித்யாசாகர்.

எம்டன் மகன் என்ற இந்தப் படத்தின் பெயரை இப்போது எம்.மகன் என்றுசுருங்கிவிட்டது.

எம்டன் என்ற பெயர் தமிழகத்தின் மற்ற பகுதி மக்களுக்குத் தெரியுமோ,தெரியாதோ, அந்தக்கால சென்னைவாசிகளுக்கு ரொம்ப நன்னாவே தெரியும்.இரண்டாம் உலகப் போரின்போது ஜெர்மன் நாட்டுக் கப்பல் ஒன்று சென்னையில்(பிரிட்டிஷார் ஆண்டதால்) குண்டு வீசியது. அந்தக் கப்பலின பெயர்தான் எம்டன்.

எம்டன் குண்டை போட்டுட்டான் என்று தெறித்து ஓடினார்களாம் அந்த காலசென்னைவாசிகள். எமகாதக போர்க் கப்பலான அந்தக் கப்பலின் பெயரைக்கேட்டாலே அக்கால சென்னை வாசிகள் நடுநடுங்கிப் போய் விடுவார்களாம். அபபடிசிம்ம சொப்பனமாக விளங்கியது எம்டன்.

எம்டன் புகழ் பரவ ஆரம்பிக்கவே, கெடுபிடியான, சுதாரிப்பான, கடுகடுபபான, கறார்பேர்வழிகளுககு எம்டன் என்று பெயர் வைக்க ஆரம்பித்தனர். அந்தஅடிப்படையில்தான் தனது படத்திற்கு எம்டன் மகன் என்று பெயர் வைத்தார்திருமுருகன்.

எம்டன் தமிழ் பெயர் கிடையாது. எனவே வரி விலக்கு கிடைக்காது. பெயரைமாத்திடுங்கோ என்று அறிந்தவர், புரிந்தவர் எல்லாம் அறிவுரை கூறவே, டன்னைதூக்கிப் போட்டு விட்டார் திருமுருகன்.

ஆனால், இதுக்கு அர்த்தம் என்ன என்று கேட்டால் பதில் இல்லை, அர்த்தம் எல்லாம்யாருக்கு வேணும் என்கிறார்கள். தமிழ் சினிமான்னா என்ன வேணா செய்யலாமே...

Read more about: emton magan is now m magan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X