»   »  கோக்கு மாக்கு கோபிகர்

கோக்கு மாக்கு கோபிகர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

இஷா கோபிகர் போகும் ரேஞ்சே, டேஞ்சராக இருக்கிறது.

மும்பைவாலா இஷா, முதலில் அறிமுகமானது என் சுவாசக் காற்றே மூலம்தான். படம் சுமாராக ஓடியதால்,இஷாவுக்கும் சில தமிழ்ப் பட வாய்ப்புகள் தேடி வந்தன. இருந்தாலும் அவரது முத்திப் போன முருங்கைக்காய்முகம், இளம் ஹீரோக்களுடன் சேரக் கூடிய வாய்ப்புகளைத் தடுத்தது.

அப்படியும், இப்படியும் தத்தித் தாவி வந்த இஷா திடீரென மும்பைக்கேத் திரும்பி இந்திப் படங்களில் நடிக்கஆரம்பித்தார். இந்த முறை கிளாமரை கட்டவிழ்த்து விட்டார். காட்டாற்று வெள்ளம் போல பொங்கிப் பெருகி ஓடிவந்த இஷாவின் கிளாமர் பாலிவுட் ரசிகர்களை பற்றிக் கொள்ள வைத்தது.

குறுகிய காலத்திலேயே கும்மாள நாயகியாகிப் போனார் கோபிகர். இப்போது இஷா இன்னும் ஒரு படி ஏறி,ஷாருக் கானின் டான் படத்தில், விலைமாது கேரக்டரில் பின்னி எடுத்திருக்கிறார்.

பர்ஹான் அக்தர் தயாரிப்பில் வெளியாகியுள்ள இந்த டான், முன்பு அமிதாப் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட்படமாகும் (இப்படம் தான் தமிழில் ரஜினி நடிக்க பில்லாவாக வெளியானது).

இப்போது ரீமேக் செய்யப்பட்டுள்ள டான் படத்தில் அனிதா என்ற விபச்சாரப் பெண் கேரக்டரில்தான் இஷாநடித்துள்ளார். இந்தக் கேரக்டரில் நடிக்க இஷாவுக்குத் தயக்கமே இல்லையாம். ஏன் என்று கேட்டால், இதுஷாருக் கான் படமாச்சே, எந்தக் கேரக்டராக இருந்தால் என்ன, நோ பிராப்ளம் என்கிறார் இஷா.

இஷாவின் உடல் கட்டும், கிளாமர் வெட்டும்தான் அவருக்கு இந்தக் கேரக்டரை தேடிக் கொடுத்ததாம். இவரைவிட்டால் வேற ஆளே கிடையாது என்று தயாரிப்பாளர் அக்தரே வாய் விட்டு பாராட்டினாராம்.

டான் படத்தில் இஷாவின் கவர்ச்சி தாண்டவத்தை, இந்தி ரசிகர்கள் பேய் நுழைவது கூடத் தெரியாமல் வாய்பிளந்து ரசித்து மகிழ்ந்து கொண்டுள்ளனர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil