»   »  மீண்டும் வர்றார் கவுண்டர்

மீண்டும் வர்றார் கவுண்டர்

Subscribe to Oneindia Tamil

பெ>ய பிரேக்குக்குப் பின்னர் கவுண்ட மணி மீண்டும் கலகலக்க வைக்க வருகிறார்.

தமிழ் சினிமாவின் லாரல்-ஹார்டி (டாம் அண்ட் ஜெர்ரி என்றும் சொல்லலாம்) என அழைக்கப்பட்ட கவுண்டமணி-செந்திலின் காமெடியை எந்த வயதிலும் மனம்விட்டு ரசிக்க முடியும்.

கவுண்டமணியின் காண்டாமணி சத்தம் சற்றே ஜாஸ்தியாக இருந்தாலும், செந்திலிடம் அவர் படும் அவஸ்தை நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் என்பதில்சந்தேகமே இல்லை.

கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக இருவரும் இணைந்து ரசிகர்களின் வயிறுகளை (காதுகளையும்தான்) பதம் பார்த்தனர். ஆனால் 2004 வரைதான் கவுண்டரன் சத்தம்அதிகமாக இருந்தது. அதன் பிறகு அவரது படம் எதுவும் வரவில்லை.

இடையில் மன்மதனில் சிம்புவின் புண்ணியத்தால் கவுண்டமணியை பார்க்க முடிந்தது. அதிலும் கூட சிம்புவிடம் வம்பு பண்ணி வாங்கிக் கட்டிக் கொண்டார்கவுண்டர்.

இதேபோல பாக்யராஜின் இயக்கத்தில், விஜயகாந்த்துடன் சொக்கத்தங்கம் படத்தில் சிரிக்க வைக்க முயன்றார் கவுண்டர்.

பட வாய்ப்புகள் இல்லாமல் வீட்டில் இருந்தாலும் கூட, கவுண்டமணின் நக்கலுக்குக் குறைச்சலே இல்லை. வீட்டில் அமர்ந்து, கொண்டு டிவியில் வரும் பிறகாமெடியன்களைப் பார்த்து அவர்களை விமர்சித்து தனது நண்பர்களிடம் பேசி சிலாகிப்பாராம் கவுண்டர்.

இந் நிலையில் இப்போது கவுண்டர் 3 புதிய படங்களில் புக் ஆகியுள்ளாராம். ராஜா சேதுபதி படத்தில் ராஜ்கிரணுடன் இணைந்து நடிக்கிறார். வெள்ளிக்கிழமைஇப்படத்தின் பூஜை ஏவி.எம். ஸ்டூடியோவில் நடந்தது. இதில் கலந்து கொண்ட கவுண்டமணி செய்தியாளர்களை சந்தித்தார்.

வழக்கமாக பத்தி>க்கையாளர்களை கவுண்டமணி கண்டு கொள்வதே இல்லை. ஆனால் அபூர்வமாக இந்தப் படத்தின் பூஜையின் போது செய்தியாளர்களிடம்ஜாலியாக பேசினார் கவுண்டர்.

தனது பாணியில் நக்கல், நையாண்டி கலந்து கவுண்டர் பேசுகையில், வணக்கம்ணா.. இங்கே யார் யார் வந்திருக்கிறீர்கள் என்று கூட எனக்குத் தெரியாது. ஆனால்பெரிய இடைவேளைக்குப் பிறகு இப்படத்தில் நடிப்பது சந்தோஷமாக இருக்கிறது.

இத்தனை நாள் சும்மா இருந்ததுக்காக எனக்கு வருத்தமெல்லாம் கிடையாது. இதெல்லாம் சினிமாவில் சகஜமப்பா. இனிமேல் நானெல்லாம் நடிக்கவே மாட்டேன்என்று உங்களில் பலர் நினைத்திருக்கலாம்.

ஆனால் தப்பு என் பக்கம் இல்லை. உங்களுக்கு ஒரு விஷயம் தெ>யுமா? எனக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்தது. பல தயாரிப்பாளர்கள் தங்களது படங்களில்நடிக்கக் கேட்டு என்னை அணுகினார்கள்.

ஆனால் எனக்குத் திருப்தி இல்லாததால் அவற்றை ஒத்துக் கொள்ளவில்லை. இந்த இடைவெளி கூட என்னைப் புதுப்பித்துக் கொள்ளத்தான்.

இதுக்கு மேல எந்தக் கேள்வியும் கேட்டுடாதீங்க, மற்ற காமெடியன்களைப் பற்றியும் கேட்டுடாதீங்க. ஒவ்வொருவரும் ஒரு விதம், ஒரு பாணி.

செந்திலுடன் மீண்டும் இணைந்து நடிக்க எனக்கு ஆட்சேபணையே இல்லை. அப்படி ஒரு படம் கூட நான் ஒப்புக் கொண்டுள்ளேன்.

ஹீரோக்களுடன் சேர்ந்து நான் டான்ஸ் ஆடியதை கிண்டலடித்தார்கள். ஹீரோக்களுடன் சேர்ந்து ஆடியதை நான் தவறாக நினைக்கவில்லை என்று கலாய்த்தார்கவுண்டர்.

படு சவுண்டாக மறு ரவுண்டுக்கு ரெடியாகி விட்டார் கவுண்டர். கண்களையும், காதுகளையும் கரெக்ட் பண்ணி வச்சுக்கங்க..

Read more about: goundamani is back

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil