அஜீத்தை இயக்கும் கெளதம் மேனன்

By Staff

Ajith with Rajini
சிவாஜி பிலிம்ஸ் படத்தில் அஜீத் நடிக்கவிருப்பது உறுதியாகியுள்ளது. இப்படத்தை கெளதம் மேனன் இயக்கவுள்ளார்.

சிவாஜி பிலிம்ஸ் படத்தில் அஜீத் நடிக்கவிருப்பதாக நாம் முன்பு கூறியிருந்தோம். இதுதொடர்பாக பிரபு, அஜீத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும், அஜீத்தும் நடிக்க ஆர்வமாக இருப்பதாகும் கூறியிருந்தோம். தற்போது இது உறுதியாகியுள்ளது.

அஜீத் நடிக்க உருவாகவிருக்கும் இப்படம் அடுத்த ஆண்டு தொடங்குகிறது. கெளதம மேனன் படத்தை இயக்கவுள்ளார். தற்போது இயக்கிக் கொண்டிருக்கும் வாரணம் ஆயிரம் படத்தை முடித்து விட்டு அஜீத் படத்துக்கு வருகிறார் கெளதம் மேனன்.

கெளதம் மேனனின் ஆஸ்தான இசையமைப்பாளரான ஹாரிஸ் ஜெயராஜ்தான் இப்படத்திற்கும் இசையமைக்கிறார்.

அஜீத் தற்போது கே.எஸ்.ரவிக்குமாரின் காங்கேயன் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தின் போட்டோ செஷனும் கூட சில மாதங்களுக்கு முன்பு நடந்தது. ராஜு சுந்தரம் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில் நடித்து முடித்த பின்னர் தனது படத்தில் அஜீத் நடிக்கவுள்ளதாக கே.எஸ்.ரவிக்குமார் ஏற்கனவே கூறியிருந்தார்.

இந்த நிலையில் சிவாஜி பிலிம்ஸ் படத்திலும் நடிக்க அஜீத் ஒப்பந்தமாகியுள்ளார். ராஜு சுந்தரத்தை முடித்து விட்டு இந்தப் படங்களை அவர் நடித்துக் கொடுப்பார் என்று தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X