»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

கமலின் அடுத்த படமான கிருஷ்ண லீலையில் அவருக்கு ஜோடி யார் தெரியுமோ?. கெளதமியே தான்.

1998ம் ஆண்டில் சந்தீப் பாட்டியா என்பவரை திருமணம் செய்து கொண்டு மும்பை போன கெளதமி ஒரு மகளைப் பெற்றகையோடு அவரிடம் இருந்து விலகி வந்துவிட்டார். டிவியில் கொஞ்சமாய் தலை காட்டிக் கொண்டிருந்தார்.

இந் நிலையில் இஞ்சி இடுப்பழகி சிம்ரனால் சரிகாவுடன் மோதல் ஏற்பட்டு கடைசியில் இருவரையும் இழந்து நின்ற கமலுக்கும்கெளதமிக்கும் இது ஏற்பட்டது. விருமாண்டி சூட்டிங்கின்போது கமலுடன் ஐக்கியமே ஆகிவிட்டார் கெளதமி.படப்பிடிப்பின்போது மிக உதவியாய் இருந்தார்.

இடையில் மருத்துவமனையில் கமல் இருக்க நேரிட்டபோதும் கூடவே ஒத்தாசையாய் இருந்தார். இருவருக்கும் இடையேதொடர்ந்து அரசல் புரசலாகப் பேசப்பட்டு வரும் நிலையில் கெளதமியைேயே தனது கிருஷ்ண லீலா படத்துக்குஹீரோயினாக்கியுள்ளார் கமல்.

சிம்ரனுடன் காதல் என்ற பேச்சு நிலவியபோது தான் பஞ்ச தந்திரம் படத்தில் உன்னோடு காதலென்று ஊர் சொன்னது என்றபாடலை வைத்தார் கமல். இப்போது கெளதமியோடு இணைத்துப் பேசப்படும் நிலையில் அவரையே ஹீரோயினாக்க இருக்கிறார்.

கிருஷ்ண லீலாவில் தனது விருமாண்டி மீசையை மழித்துவிட்டு ஆச்சாரமாக நடிக்கப் போகிறாராம் கமல். இப்போது அவருக்குகாஸ்ட்யூம்கள் டிசைன் செய்வதில் மிகத் தீவிரமாக இருக்கிறார் கெளதமி.

கமலின் லீலைகள்... ஸாரி கிருஷ்ண லீலை படத்தின் சூட்டிங் விரைவிலேயே தொடங்கப் போகிறதாம்.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil