»   »  கெளதம் மேனன்-மீண்டும் இந்திக்கு

கெளதம் மேனன்-மீண்டும் இந்திக்கு

Subscribe to Oneindia Tamil

தமிழில் புகுந்து விளையாடிக் கொண்டிருக்கும் கெளதம் மேனன் அடுத்து இந்தியில்சைப் அலிகான் நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார்.

மின்னலே மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்து சேர்ந்த கெளதம் தொடர்ந்து வெற்றிப்படங்களையே கொடுத்து வருகிறார். அவரது இயக்கத்தில் வெளியான மின்னலே,காக்க காக்க, வேட்டையாடு விளையாடு ஆகிய படங்கள் சூப்பர் ஹிட் படங்களாகிவிட்டன.

சரத்குமாரை வைத்து இப்போது பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தை முடித்துள்ளகெளதம், அடுத்து சூர்யாவை வைத்து வர்ணம் ஆயிரம் என்ற படத்தை இயக்கிவருகிறார்.

இதை முடித்து விட்டு இந்தியில் ஒரு படத்தை இயக்கவுள்ளாராம் கெளதம். இதில்சைப் அலிகான் ஹீரோவாக நடிக்கவுள்ளார்.

மின்னலே படம் இந்தியில் ரீமேக் ஆனபோது அதில் சைப் அலிகான் நடித்திருந்தார்.அந்தப் படத்தையும் கெளதமே இயக்கியிருந்தார்.

சைபை வைத்து கெளதம் இயக்கப் பாகும் படம் ஆக்ஷன் படமாம். இந்தக் கதையைசைபிடம் கெளதம் தெரிவித்தபோது இம்ப்ரஸ் ஆகி விட்ட சைப் இதில் நடிக்க நான்ரெடி என்று உடனே சம்மதம் கொடுத்தாராம்.

இதுவும் போலீஸ் கதையா?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil