»   »  பண சிக்கலில் கெளதம் மேனன்!

பண சிக்கலில் கெளதம் மேனன்!

Subscribe to Oneindia Tamil

பணம் வாங்கிக் கொண்டு தயாரிப்பாளர்களை ஏமாற்றி விட்டதாக இயக்குனர் கெளதம் மேனன் மீது புகார்கள் கிளம்பியுள்ளன.

காக்க காக்க படம் சக்ஸஸ் ஆனதும் கெளதம் மேனனை, அஜய்குமார் என்பவர் அணுகினார். தனக்காக ஒரு படத்தை இயக்கித் தர வேண்டும் என்றுகேட்கவே, அவரிடம் இதற்காக ரூ. 1.6 கோடி பணத்தை அட்வான்ஸாக வாங்கினாராம் கெளதம்.

ஆனால் அதன் பிறகு அஜய்குமாரை கண்டுக்காமல் விட்டு விட்டாராம். மாறாக கமலை வைத்து வேட்டையாடு விளையாடு, சரத்குமாரை வைத்துபச்சைக்கிளி முத்துச்சரம் என இரு படங்களை முடித்து விட்டார்.

இதையடுத்து கெளதம் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்தார் அஜய். அவர்கள் கூப்பிட்டு பஞ்சாயத்து பேசியதில், 60 லட்சம் ரூபாயைஅஜய்யிடம் திருப்பிக் கொடுத்தாராம் கெளதம். ஆனால் மீதப் பணத்தைப் பற்றி மூச்சுக் காட்டவில்லையாம்.

கெளதமுக்கு ஏற்பட்ட பிரச்சினையிலிருந்து காக்க அவருக்கு ஆதரவாக ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் களம் இறங்கினார். இவர்தான் பச்சைக்கிளிமுத்துச்சரம் படத்தை தயா>த்தவர்.

பச்சைக்கிளி முத்துச்சரம் மூலம் கிடைக்கும் பணத்திலிருந்து மீதப் பணத்தைத் தருவதாக அஜய்குமா>டம் கூறினார் ரவிச்சந்திரன். இதுதொடர்பாகஅஜய்யுடன் ஒப்பந்தமும் செய்து கொண்டார்.

இந் நிலையில் கெளதம் தங்களையும் ஏமாற்றி விட்டார் என்று கூறி மேலும் 2 தயா>ப்பாளர்கள் கிளம்பியுள்ளனராம். அவர்களில் ஒருவர் ஏவி.எம்.பாலசுப்ரமணியம். தன்னிடம் ரூ. 20 லட்சம் பணத்தை கெளதம் வாங்கிக் கொண்டு விட்டு ஏமாற்றி விட்டதாக பாலசுப்ரமணியம் கூறியுள்ளார்.

இதேபோல சின்னத்தம்பி உள்ளிட்ட வெற்றிப் படங்களைத் தயா>த்த கேபி பிலிம்ஸ் பாலுவும் தனக்கு கெளதம் மேனன் ரூ. 3 லட்சம் தர வேண்டும்என கூறியுள்ளாராம்.

கெளதமின் இந்த பிரச்சனையால் அவரது இயக்கத்தில் உருவாகி வரும் வாரணம் ஆயிரம் படம் சிக்கலை சந்திக்கும் எனத் தெரிகிறது. இந்தப்படத்தையும் ஆஸ்கர் பிலிம்ஸ்தான் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தை முடித்து விட்டுத்தான் ஹரி இயக்கத்தில் வேல் படத்தில் நடிக்க காத்திருக்கிறார் சூர்யா. ஆனால் கெளதமால், வாரணம் ஆயிரத்திற்குபெரும் பஞ்சாயத்து வரும் போலத் தெரிவதால் சூர்யா குழப்பமாகியுள்ளாராம்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil