தபு-ஜோ-கெளதம் வேட்டையாடு விளையாடு படத்தை முடித்துவிட்ட காக்க.. காக்க.. கெளதம் அடுத்ததாக சரத்குமார்-ஜோதிகாவைவைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார். படத்தின் பெயர் சிலந்தி.இந்தப் படத்தில் சரத்குமாரின் மனைவியாக தபு நடிக்கிறாராம். அப்ப ஜோதிகா?.. படத்தைப் பாருங்கள் தெரியும்என்கிறார் கெளதம். படத்துக்கு விலை உயிர் என்றாலும் என்று முதலில் பெயர் வைத்திருந்தார் கெளதம்.தபு வேடத்தில் முதலில் சிம்ரனை நடிக்க வைக்கவிருந்தாராம். ஆனால், அந்தத் திட்டத்தைக் கைவிட்டுவிட்டுஷேபனாவிடம் போய் கதை சொல்லியிருக்கிறார்.திருமணம் செய்து கொள்வதில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்ட ஷேபனா, இப்போதெல்லாம் பரதம் ஆடியும்இந்திப் படங்களில் தலைகாட்டியும் தான் டைம் பாஸ் செய்து கொண்டிருக்கிறார். இப்படியே சிங்கிளாகவேஇருந்துவிடும் முடிவில் இருக்கிறாராம் ஷேபனா. இப்படி ஒரு மூடில் இருக்கும் ஷேபனாவை சந்தித்து விலைஉயிர் என்றாலும் கதையை சொன்னாராம் கெளதம் (இருவருமே மலையாளிகள்).அவருக்கும் கதை ரொம்பவே பிடித்துவிட்டதாம்.. சான்ஸ் தந்தால் நடிக்க ரெடி என்று ஷேபனா கூற, வெயிட்பண்ணுமாறு கூறிவிட்டுச் சென்றாராம்.இந் நிலையில் இடையில் என்ன யோசித்தாரோ ஷேபனா கேரக்டருக்கு தபுவை புக் செய்துவிட்டார் கெளதம்.கண்டுகொண்டேன் கண்டுகொண்டேனுக்குப் பின் தமிழில் மீண்டும் தபு நடிக்கும் முதல் படம் இது.சூட்டிங்கையும் ஆரம்பித்துவிட்ட கெளதம், படத்தின் பெயரை சிலந்தி என்று மாற்றியிருக்கிறார்.இதில் தனது ஆஸ்தான கேமராமேன் ஆன ஆர்.டி.ராஜசேகருக்குப் பதிலாக அரவிந்த் கிருஷ்ணாவை என்கேஜ்செய்திருக்கிறார் கெளதம். இவர் செல்வராகவனின் கேமராமேன் ஆவார்.படத்துக்கு இசை அமைப்பது கெளதமின் வலதுகரமான ஹாரிஸ் ஜெயராஜே தான்.வேட்டையாடு விளையாடு படத்தைப் பொறுத்தவரை கெளதம் படு மகிழ்ச்சியாக இருக்கிறாராம். அவரை விடகமலுக்கு அதீத சந்தோஷமாம். இது ஹாலிவுட் தரத்தில் ஒரு தமிழ்ப் படம் என்கிறார்கள்.ஆக்ஷன் சீன்களில் கமலும் சின்ன வயசுப் பையன் மாதிரி பின்னி எடுத்துவிட்டாராம். 4வது மாடியில் இருந்துகையில் துப்பாக்கியுடன் கமல் குதிக்கும் காட்சி ரொம்பவே பேசப்படுமாம். அவ்வளவு ரிஸ்க் எடுத்தாராம் கமல்.இந் நிலையில் சூர்யாவை வைத்து ஒரு சொந்தப் படத்தை எடுக்க இருக்கிறார் ஜோதிகா. அதற்கு இன்னும்டைரக்டரை முடிவு செய்யவில்லையாம். பெரும்பாலும் அது கெளதம் மேனனாகவே இருக்கலாம் என்கிறார்கள்.
வேட்டையாடு விளையாடு படத்தை முடித்துவிட்ட காக்க.. காக்க.. கெளதம் அடுத்ததாக சரத்குமார்-ஜோதிகாவைவைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார். படத்தின் பெயர் சிலந்தி.
இந்தப் படத்தில் சரத்குமாரின் மனைவியாக தபு நடிக்கிறாராம். அப்ப ஜோதிகா?.. படத்தைப் பாருங்கள் தெரியும்என்கிறார் கெளதம். படத்துக்கு விலை உயிர் என்றாலும் என்று முதலில் பெயர் வைத்திருந்தார் கெளதம்.
தபு வேடத்தில் முதலில் சிம்ரனை நடிக்க வைக்கவிருந்தாராம். ஆனால், அந்தத் திட்டத்தைக் கைவிட்டுவிட்டுஷேபனாவிடம் போய் கதை சொல்லியிருக்கிறார்.
திருமணம் செய்து கொள்வதில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்ட ஷேபனா, இப்போதெல்லாம் பரதம் ஆடியும்இந்திப் படங்களில் தலைகாட்டியும் தான் டைம் பாஸ் செய்து கொண்டிருக்கிறார். இப்படியே சிங்கிளாகவேஇருந்துவிடும் முடிவில் இருக்கிறாராம் ஷேபனா. இப்படி ஒரு மூடில் இருக்கும் ஷேபனாவை சந்தித்து விலைஉயிர் என்றாலும் கதையை சொன்னாராம் கெளதம் (இருவருமே மலையாளிகள்).
அவருக்கும் கதை ரொம்பவே பிடித்துவிட்டதாம்.. சான்ஸ் தந்தால் நடிக்க ரெடி என்று ஷேபனா கூற, வெயிட்பண்ணுமாறு கூறிவிட்டுச் சென்றாராம்.
இந் நிலையில் இடையில் என்ன யோசித்தாரோ ஷேபனா கேரக்டருக்கு தபுவை புக் செய்துவிட்டார் கெளதம்.கண்டுகொண்டேன் கண்டுகொண்டேனுக்குப் பின் தமிழில் மீண்டும் தபு நடிக்கும் முதல் படம் இது.
சூட்டிங்கையும் ஆரம்பித்துவிட்ட கெளதம், படத்தின் பெயரை சிலந்தி என்று மாற்றியிருக்கிறார்.
இதில் தனது ஆஸ்தான கேமராமேன் ஆன ஆர்.டி.ராஜசேகருக்குப் பதிலாக அரவிந்த் கிருஷ்ணாவை என்கேஜ்செய்திருக்கிறார் கெளதம். இவர் செல்வராகவனின் கேமராமேன் ஆவார்.
படத்துக்கு இசை அமைப்பது கெளதமின் வலதுகரமான ஹாரிஸ் ஜெயராஜே தான்.
வேட்டையாடு விளையாடு படத்தைப் பொறுத்தவரை கெளதம் படு மகிழ்ச்சியாக இருக்கிறாராம். அவரை விடகமலுக்கு அதீத சந்தோஷமாம். இது ஹாலிவுட் தரத்தில் ஒரு தமிழ்ப் படம் என்கிறார்கள்.
ஆக்ஷன் சீன்களில் கமலும் சின்ன வயசுப் பையன் மாதிரி பின்னி எடுத்துவிட்டாராம். 4வது மாடியில் இருந்துகையில் துப்பாக்கியுடன் கமல் குதிக்கும் காட்சி ரொம்பவே பேசப்படுமாம். அவ்வளவு ரிஸ்க் எடுத்தாராம் கமல்.
இந் நிலையில் சூர்யாவை வைத்து ஒரு சொந்தப் படத்தை எடுக்க இருக்கிறார் ஜோதிகா. அதற்கு இன்னும்டைரக்டரை முடிவு செய்யவில்லையாம். பெரும்பாலும் அது கெளதம் மேனனாகவே இருக்கலாம் என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications