»   »  புற்றுநோயிலிருந்து மீண்ட கெளதமி

புற்றுநோயிலிருந்து மீண்ட கெளதமி

Subscribe to Oneindia Tamil

மார்பகப் புற்றுநோய் தாக்கி அதிலிருந்து மீண்டுள்ளாராம் நடிகை கெளதமி.

குரு சிஷ்யன் படம் மூலம் சினிமாவுக்கு வந்தவர் கெளதமி. அதன் பின்னர் நிறையப் படங்களில் நடித்து முன்னணி நடிகையாகத் திகழ்ந்தார்.ரஜினியுடன் அறிமுகமாகிய அவர் முன்னணி ஹீரோக்களுடன் சேர்ந்து நடித்தார். ராமராஜனுடனும் நடித்தார், ராம.நாராயணன் படங்களிலும்நடித்தார்.

இடையில் பாஜக பக்கம் போன கெளதமி அதன் பின்னர் கல்யாணமாகி செட்டிலானார். ஆனால் திருமண வாழ்க்கை தோல்வி அடைந்ததால்கணவரை விட்டுப் பிரிந்த கெளதமி தற்போது தனது மகளுடன் கமல்ஹாசனுடன் இணைந்து வாழ்ந்து வருகிறார். கமல்ஹாசனுடன் தேவர் மகன்,நம்மவர், குருதிப் புனல் ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளார் கெளதமி.

கமலுடன் வாழ்ந்து வரும் கெளதமி தற்போது டிவி பக்கமும் வந்துள்ளார். முன்பு ஒரு டிவி தொடரில் நடித்த கெளதமி அது சரிப்பட்டு வராததால்பாதியிலேயே விலகி விட்டார். இந்த நிலையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் அன்புடன் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் கெளதமி. இந்தநிகழ்ச்சியின் முதல் விருந்தினராக கலந்து கொண்டவர் கமல்ஹாசன்.

இந்த நிலையில், தனக்கு மார்பகப் புற்று நோய் ஏற்பட்டு அதிலிருந்து தான் மீண்டு வந்துள்ளதாக பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார் கெளதமி.

உலக மகளிர் தினத்தையொட்டி எச்.ஐ.வி. பாதிப்புடன் பெண்களுக்கான அமைப்பு ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய கெளதமிஇந்தத் தகவலைத் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் கெளதமி பேசுகையில், எச்.ஐ.வி. பாதிப்பு உடைய பெண்கள் முதலில் பயத்தை உதறி விட வேண்டும். வாழ்க்கையை அதன் போக்கில்சந்திக்க வேண்டும்.

எனக்குக் கூட 2 ஆண்டுகளுக்கு முன்பு மார்பகப் புற்றுநோய் வந்தது. ஆனால் நான் பயப்படவில்லை. உரிய சிகிச்சையை எடுத்துக் கொண்டேன்.தற்போது அதிலிருந்து முழுமையாக குணமடைந்து விட்டேன்.

துன்பம், துயரம், சோகம் ஏற்படுவது மனித வாழ்க்கையில் சாதாரண விஷயங்கள், மிகவும் இயல்பானாவை. ஆனால் அதை உறுதியாகவும்,தன்னம்பிக்கையோடும் சந்தித்தால், தடைகளைக் கடப்பது சுலபம்தான். பெண்கள் தாங்கள் சந்திக்கும் தடைகளைக் கடந்து வாழ்க்கையில் வெற்றிபெற வேண்டும் என்றார் கெளதமி.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil