கிரகலட்சுமி குடும்பத்துக்கு முன்ஜாமீன்

By Staff

நடிகர் பிரஷாந்த் தொடர்ந்த வழக்கில் கிரகலட்சுமியின் பெற்றோர், உறவினர்கள் உள்ளிட்ட 7 பேருக்கு சென்னை உயர்நீதின்றம் முன்ஜாமீன் வழங்கியது.

தனக்கு நடந்த முதல் திருமணத்தை மறைத்து விட்டு தன்னைத் திருமணம் செய்து கொண்ட கிரகலட்சுமி மற்றும் அவரது பெற்றோர், பெண் பார்த்துக் கொடுத்த டாக்டர் ரங்கபாஷ்யம் தம்பதியினர் உள்ளிட்ட 8 பேர் மீது நடிகர் பிரஷாந்த் கொடுத்த புகாரின் பேரில், சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவில், மாம்பலம் போலீஸார் 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கிரகலட்சுமி முன்கூட்டியே முன்ஜாமீன் பெற்றிருந்ததால், மற்ற 7 பேரும் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்தனர். மேலும் போலீஸ் கைது நடவடிக்கையிலிருந்து தப்ப தலைமறைவாகி விட்டனர்.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி கே.என்.பாஷா, கிரகலட்சுமியின் தந்தை தனசேகரன், தாயார் சிவகாம சுந்தரி, அண்ணன்கள் நாகராஜ், பொன்குமார், அண்ணன் மனைவி அபிராமி, உறவினர்கள் டாக்டர் ரங்கபாஷ்யம், சித்ரா ரங்கபாஷ்யம் ஆகியோருக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

அனைவரும் தலா ரூ. 25 ஆயிரம் ரொக்க ஜாமீன் மற்றும் அதே தொகைக்கு இரு நபர் ஜாமீன் உத்தரவாதம் கொடுத்து, சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி முன்ஜாமீன் பெறலாம் என நீதிபதியின் உத்தரவில் கூறப்பட்டிருந்தது.

இவர்களில் டாக்டர் ரங்கபாஷ்யம், அவரது மனைவி சித்ரா ரங்கபாஷ்யம் ஆகியோர் மட்டும் வாரம் இருமுறை (வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை) மாம்பலம் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும். மற்றவர்கள் 2 வாரத்திற்கு ஆஜராக வேண்டும் எனவும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்திருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X