குலுகுலு சந்தானம் கையில் ஃபயர் கன் .. இப்போ இது தான் ட்ரெண்டா? மிரட்டும் திரைப்படங்கள்!

சென்னை: ரத்னகுமார் எழுதி, இயக்கிய குலுகுலு திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கின்றது.

எப்போதும் போல் இல்லாமல் வித்தியாசமான சந்தானத்தை இந்த படத்தில் பார்க்க முடிகிறது என்று பல தரப்பினரும் கருத்துக்கள் கூறி வருகின்றனர்.

சந்தானம் பயன்படுத்திய ஃபயர் கன் காட்சி தற்போது பல படத்தில் முன்னணி நடிகர்கள் காட்சிகளுடன் ஒப்பீடு செய்யப்பட்டு கொண்டிருக்கின்றது.

வித்தியாசமான சந்தானம்

வித்தியாசமான சந்தானம்

ரத்னகுமார் எழுதி, இயக்கிய குலுகுலு திரைப்படம் 29ஆம் தேதி வெளியாகி தற்போது திரையரங்குகளில் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கின்றது. இப்படத்தில் சந்தானம், அதுல்யா சந்திரா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஆக்ஷன் காமெடி படமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த குலுகுலு திரைப்படத்தில் வித்தியாசமான சந்தானத்தை பார்க்க முடிகிறது.

மாஸ் ஹீரோவாக சந்தானம்

மாஸ் ஹீரோவாக சந்தானம்

எப்பொழுதும் கவுண்டர் டயலாக்குகளுடன் அனைவரையும் சிரிக்க வைக்கும் சந்தானம், இந்த படத்தில் அமைதியாகவே இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் ஃபயர் கன்னுடன் இருக்கும் சந்தானத்தை பார்த்த ரசிகர்கள், மற்ற படங்களில் வரும் ஃபயர் கன் காட்சிகளுடன் ஒப்பிட்டு பேச தொடங்கியுள்ளனர். சந்தானம் மாஸ் ஹீரோவாக மாறி வருகிறார் என்று கூறி வருகின்றனர்.

பிரபலாமான ஃபயர் கன் காட்சிகள்

பிரபலாமான ஃபயர் கன் காட்சிகள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கைதி திரைப்படத்தில் கிளைமாக்ஸ் காட்சிகள் நடிகர் கார்த்தி ஃபயர் கன் எடுத்து சுடும் காட்சி மிகவும் பிரபலம், அதேபோல் விக்ரம் திரைப்படத்தில் கமல்ஹாசன் கிளைமிக்ஸ் ஃபயர் கன் காட்சி பிரபலமாக பேசப்பட்டது. கே ஜி எஃப், ராக்கி போன்ற பல படங்களில் சமீப காலமாக ஃபயர் கன்னை பயன்படுத்தி வருகின்றனர். அதேபோல் குலுகுலு படத்தில் சந்தானத்தின் ஃபயர் கன் காட்சியை பார்த்த ரசிகர்களும், இதுதான் இப்பொழுது ட்ரெண்டா என கேள்வி கேட்டு வந்தனர். இந்த கேள்விக்கான தகுந்த பதிலை இப்படத்தின் இயக்குநரான ரத்னகுமார் பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார்.

அத தாண்டி பல விஷயம் இருக்கு

அத தாண்டி பல விஷயம் இருக்கு

இந்த காட்சி குறித்து இயக்குநர் ரத்னகுமார் கூறுகையில்," இந்த படத்தை ரெட் ஜெயின்ட் மூவிஸ் வாங்கியிருக்கிறது என்பதை தெரியப்படுத்துவதற்காக மட்டுமே நடிகர் சந்தானம் ஃபயர் கன்னுடன் இருக்கும் போஸ்டரை வெளியிட்டோம். இந்த காட்சி மட்டுமின்றி எங்களுக்கு பிடித்த காட்சிகள் படத்தில் அதிகமாகவே இருக்கிறது. மேலும் படத்தில் வரும் சண்டைக்காட்சிகள் அனைத்தும் காமெடியாக இருக்கும். வேறு எந்த உள்நோக்கமும் கிடையாது" என்று கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X