எஸ் பிக்சர்ஸை மூடுகிறார் ஷங்கர்?
காதல், வெயில், இம்சை அரசன் இருபத்தி மூன்றாம் புலிகேசி, கல்லூரி என அடுத்தடுத்த வெற்றிப் படங்களைத் தந்த ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் நிறுவனம், அப்புறம் தந்ததெல்லாம் தொடர் தோல்விப் படங்களைத்தான்.
அறை எண் 305-ல் கடவுள், ரெட்டச் சுழி, அனந்தபுரத்து வீடு என படங்கள் படுத்ததால் பெரும் நஷ்டத்துக்கு உள்ளாகியிருக்கிறதாம் எஸ் பிக்சர்ஸ்.
நடுவில் வந்த ஈரம் படம் மட்டும் முதலுக்கு மோசமில்லாமல் போயிருக்கிறது.
குறைந்த பட்ஜெட்டில் படமெடுத்து நல்ல லாபம் பார்ப்பது என்ற ஷங்கரின் கொள்கைக்கே பங்கம் வந்ததால், போதும் படம் தயாரித்தது. இத்தோடு தற்காலிகமாக நிறுத்தி வைப்போம் என ஷங்கர் உறுதியாகக் கூறிவிட்டாராம்.
இதைத் தொடர்ந்து புதிய கதைகளோடு வந்த இயக்குநர்களை பின்னர் பார்க்கலாம் என்று கூறி அனுப்பிவிட்டார்களாம் ஷங்கர் அலுவலகத்தில்.
இதுகுறித்து ஷங்கர் அலுவலக வட்டாரத்தில் விசாரித்த போது, "படத்தயாரிப்பை ஒரேயடியாக நிறுத்தும் திட்டமில்லை. இப்போதைக்கு ஒரு இடைவெளி விட்டு, நம்பிக்கையான ஸ்கிரிப்ட் வரும்போது மீண்டும் களமிறங்குவோம்" என்றார்.


Click it and Unblock the Notifications











