Mirai: சிவகார்த்திகேயனுக்கு செம போட்டி ரெடியாகிடுச்சு.. ’ஹனுமான்’ ஹீரோவின் ’மிராய்’ டீசரே மிரட்டுதே!
ஹைதராபாத்: கடந்த 2024ம் ஆண்டு பொங்கலுக்கு தமிழில் தனுஷின் கேப்டன் மில்லர் மற்றும் சிவகார்த்திகேயனின் அயலான் உள்ளிட்ட படங்கள் வெளியாகின. அதே நேரத்தில், தெலுங்கில் தேஜா சஜ்ஜா நடித்த ஹனுமான் திரைப்படமும் மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் படமும் வெளியானது. பொங்கல் ரேஸில் மற்ற முன்னணி நடிகர்கள் படங்கள் பாக்ஸ் ஆபீஸில் சொதப்பிய நிலையில், இளம் நடிகர் தேஜா சஜ்ஜா நடித்த ஹனுமான் திரைப்படம் 300 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டி மிகப்பெரிய சாதனையை படைத்தது.
ஹனுமான் 2 படத்தில் தான் அடுத்து தேஜா சஜ்ஜா நடித்து மீண்டும் வசூல் வேட்டை நடத்துவார் என எதிர்பார்த்த மற்ற மாநில ரசிகர்களுக்கு அதிரடியாக இந்த ஆண்டே மீண்டும் ஒரு சூப்பர் ஹீரோ படத்துடன் ஐயா களத்துல இறங்குகிறேன் என அறிவித்து தற்போது டீசரையும் வெளியிட்டுள்ளார் தேஜா சஜ்ஜா.

இயக்குநர் கார்த்திக் கட்டமனேனி இயக்கத்தில் தேஜா சஜ்ஜா, மஞ்சு மனோஜ், ஸ்ரேயா சரண், ஜகபதி பாபு, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'மிராய்' டீசர் வேறலெவலில் மிரட்டுகிறது. இந்த படத்தின் மூலம் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் மோத ரெடியாகி விட்டார் தேஜா சஜ்ஜா என்பது தான் செம ஹைலைட்.
செப்டம்பர் 5 படம் ரிலீஸ்: கடந்த ஆண்டு செப்டம்பர் 5ம் தேதி தளபதி விஜய் நடிப்பில் வெளியான கோட் திரைப்படம் வெளியானது. 2024ம் ஆண்டு வெளியான தமிழ் படங்களிலேயே அதிக வசூலை அந்த படம் தான் அள்ளியது. அதில், சிறப்பு கேமியோவாக நடித்த சிவகார்த்திகேயன் கையில் துப்பாக்கியை விஜய் கொடுத்திருந்தார். இந்நிலையில், இந்த ஆண்டு விஜய்யை வைத்து துப்பாக்கி, கத்தி படங்களை இயக்கிய ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மதராஸி திரைப்படம் வெளியாகிறது. அதே நாளில் தான் தேஜா சஜ்ஜா நடித்துள்ள சூப்பர் ஹீரோ படமான 'மிராய்' படமும் பான் இந்தியா ரிலீஸாக வெளியாகிறது. இதன் காரணமாக சிவகார்த்திகேயனின் மதராஸி படத்துக்கு பான் இந்தியாளவில் பலத்த போட்டி நிலவும் என தெரிகிறது.

மிராய் டீசர் சும்மா மிரட்டுது: கார்த்திக் கட்டமனேனி இயக்கத்தில் தேஜா சஜ்ஜா நடித்துள்ள 'மிராய்' படத்தில் கல்கி 2898 ஏடி படத்தில் கர்ணனின் விஜய தனுசு ஆயுதத்தை ஒரு கொம்பு போல வைத்துக் கொண்டு அஸ்வத்தாமாவாக நடித்த அமிதாப் பச்சன் சுற்றிக் கொண்டிருப்பார். அப்படியொரு ஆயுதம் தான் இந்த படத்தில் கெட்ட சக்தியை அழிக்கும் என்றும் அந்த ஆயுதம் ஹீரோவான தேஜா சஜ்ஜா கைகளில் கிடைக்க அவர் என்ன செய்கிறார் என்பதை மாயாஜால காட்சிகளுடன் பிரமாண்ட பட்ஜெட்டில் படமாக்கியுள்ளனர். டீசரை பார்த்தாலே ஹனுமான் படத்தைத் தொடர்ந்து தேஜா சஜ்ஜாவுக்கென அளவு எடுத்து செய்த கதை போலத்தான் தெரிகிறது.
ரெட்ரோ பட நடிகர்கள்: சூர்யாவின் ரெட்ரோ படத்தில் நடித்த ஜெயராம் மற்றும் ரெட்ரோ படத்தில் கவர்ச்சி நடனமாடிய ஸ்ரேயா இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும், ஜகபதி பாபு உள்ளிட்ட தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களும் நடித்துள்ளனர். மிராய் எனும் ஆயுதம் குறித்தும் அது வரும் செப்டம்பர் 5ம் தேதி பாக்ஸ் ஆபீஸில் என்ன பண்ணப் போகிறது என்பதையும் வெயிட் பண்ணிப் பார்ப்போம்.


Click it and Unblock the Notifications