'சூப்பர் ஸ்டார்களின் இயக்குநர்'... கே.எஸ்.ரவிக்குமார் பர்த்டே ஸ்பெஷல்

By Manjula

சென்னை: சூப்பர் ஸ்டார்களின் இயக்குநர் என்று புகழப்படும் கே.எஸ்.ரவிக்குமார் இன்று, தன்னுடைய 58 வது பிறந்தநாளில் அடியெடுத்து வைத்திருக்கிறார்.

ரஜினி, கமல், சரத்குமார்,விஜயகாந்த், அர்ஜுன், அஜீத், விஜய், சூர்யா, சிம்பு என்று தமிழின் முன்னணி நடிகர்கள் அனைவருமே இவரின் படங்களில் நடித்திருக்கின்றனர்.

தமிழ், தெலுங்கு என 2 மொழிகளிலும் 40க்கும் அதிகமான படங்களை இயக்கியிருக்கும் ரவிக்குமாரின் திரைப் பயணத்தில் இருந்து, சில சுவாரசிய விஷயங்களை இங்கே காணலாம்.

புரியாத புதிர்

புரியாத புதிர்

இயக்குநர் விக்ரமனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த ரவிக்குமார் 1990 ம் ஆண்டு வெளியான, புரியாத புதிர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். ரகுமான், ரேகா, ரகுவரன், சரத் குமார் நடிப்பில் திரில்லர் படமாக வெளியான புரியாத புதிர் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறத் தவறியது. புரியாத புதிரின் தோல்வியே ரவிக்குமாரை கமர்ஷியல் படங்களின் பக்கம் திரும்ப வைத்தது.

சேரன் பாண்டியன்

சேரன் பாண்டியன்

சேரன் பாண்டியன், நாட்டாமை, நட்புக்காக, படையப்பா, அவ்வை ஷண்முகி, முத்து, தெனாலி, மின்சாரக் கண்ணா, வரலாறு, வில்லன், தசவாதாரம், ஆதவன் என்று பல சூப்பர் டூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்தவர். கமர்ஷியல் படங்களில் முத்திரை பதித்ததால் கமர்ஷியல் இயக்குநர் என்ற அடைமொழியும் உண்டு.

கமல்ஹாசன்

கமல்ஹாசன்

கமல்ஹாசனின் தீவிர ரசிகரான இவர் கமலை வைத்து அவ்வை ஷண்முகி, தெனாலி, பஞ்சதந்திரம், தசாவதாரம், மன்மதன் அம்பு என 5 படங்களை இயக்கியிருக்கிறார்.

சிறப்புத் தோற்றம்

சிறப்புத் தோற்றம்

இயக்கிய முதல் படத்தில் தொடங்கி இன்றுவரை தான் நடிக்கும் படங்களில் சிறப்புத் தோற்றத்தில் வந்து செல்வது இவரின் வழக்கம். சக்திவேல், பாட்டாளி, சுயம்வரம் இந்த 3 படங்களும் இவர் சிறப்புத் தோற்றத்தில் நடிக்காமல் இயக்க மட்டுமே செய்த படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

படையப்பா

படையப்பா

கே.எஸ்.ரவிக்குமார் முதன்முதலாக நடனமாடிய படம் படையப்பா. இதுகுறித்து ரஜினியின் வற்புறுத்தல் காரணமாக ஓ ஓ கிக்கு ஏறுதே பாடலுக்கு நடனமாடியதாக பல்வேறு பேட்டிகளில் கூறியிருக்கிறார். அதேபோல கமலின் தசாவதாரம் படத்தில் இடம்பெற்ற உலகநாயகனே பாடலுக்கு நடனமாடியிருக்கிறார். இந்திய அளவில் அதிகம் வசூல் செய்த படங்களின் பட்டியலில் தசாவதாரம் படமும் இடம் பெற்றுள்ளது.

சரத்குமார்

சரத்குமார்

சேரன் பாண்டியன், நாட்டாமை, நட்புக்காக என்று சரத்குமாரை வைத்து 9 படங்களை இயக்கியுள்ளார். ரஜினி, கமலை விட சரத்குமாரை வைத்துத்தான் கே.எஸ்.ரவிக்குமார் அதிக படங்களை இயக்கியிருக்கிறார்.

25 ஆண்டுகள்

25 ஆண்டுகள்

சினிமாவில் வெள்ளிவிழா கண்ட இவர் தற்போது படங்கள் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். சுதீப்பை வைத்து இவர் இயக்கியிருக்கும் முடிஞ்சா இவனைப் புடி தமிழ், கன்னடம் என 2 மொழிகளிலும் விரைவில் வெளியாகவுள்ளது.

இன்று பிறந்தநாள் கொண்டாடும் ரவிக்குமாரை ரசிகர்கள் பலரும் போட்டிபோட்டு வாழ்த்தி வருகின்றனர். அவர்களுடன் இணைந்து நாமும் வாழ்த்துவோம்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சார்....

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X