கோலிவுட்டின் இளவரசன்.. 37வது பிறந்தநாளை கொண்டாடும் சிவகார்த்திகேயன்.. சொத்து மதிப்பு இவ்வளவா?

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் இன்று தனது 37வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

ஏகப்பட்ட பிறந்தநாள் காமன் டிபி புகைப்படங்கள் மற்றும் மாஷப்களை சினிமா பிரபலங்கள் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

கோலிவுட்டின் இன்றைய இளவரசன் நாளைய அரசன் என படிப்படியாக தனது முயற்சியால் வெற்றிப் படிக்கட்டுகளை ஏறி வரும் இந்த டானின் சாதனைகள், சம்பளம் மற்றும் சொத்து மதிப்பு எவ்வளவு என்பது குறித்த தகவல்களை இங்கே காண்போம்.

ஹேப்பி பர்த்டே பிரின்ஸ்

ஹேப்பி பர்த்டே பிரின்ஸ்

கோலிவுட்டின் இளவரசனாக வசூல் வேட்டை நடத்தி வரும் நடிகர் சிவகார்த்திகேயன் விரைவில் தென்னிந்தியாவின் இளவரசனாகும் முயற்சியில் களமிறங்கி உள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் புதிய படத்தில் கமிட் ஆகி உள்ள சிவகார்த்திகேயன் இன்று தனது 37வது பிறந்தநாளை கோலாகலமாக ரசிகர்கள் மற்றும் பிரபலங்களின் வாழ்த்து மழையில் கொண்டாடி வருகிறார்.

கோலிவுட்டின் எதிர்காலம்

கோலிவுட்டின் எதிர்காலம்

கோலிவுட் திரையுலகின் எதிர்காலமே சிவகார்த்திகேயன் தான் என பல தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் பார்த்து வருகின்றனர். விஜய், அஜித், சூர்யாவுக்கு அடுத்த இடத்தில் சிம்மாசனம் போட்டு இப்பவே அமர்ந்து விட்ட சிவகார்த்திகேயன் கோலிவுட்டின் எதிர்கால பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷனுக்கும் கியாரண்டி கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கலைமாமணி விருது

கலைமாமணி விருது

சின்னத்திரையில் தொகுப்பாளராக ஆரம்பித்து சினிமாவில் 100 கோடி வசூல் குவிக்கும் சாதனை நாயகனாக மாறியுள்ள சிவகார்த்திகேயனுக்கு தமிழ்நாடு அரசு சார்பாக ஏகப்பட்ட விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. விஜய் அவார்ட்ஸ், எடிசன் அவார்ட் என அள்ளிக் குவித்து வரும் சிவகார்த்திகேயனுக்கு கடந்த ஆண்டு மிகப்பெரிய அங்கீகாரமாக தமிழ்நாடு அரசு கலைமாமணி விருதை வழங்கி சிறப்பித்தது.

எகிறிய சம்பளம்

எகிறிய சம்பளம்

ஆரம்பத்தில் 3 முதல் 5 கோடி வரை சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த சிவகார்த்திகேயனின் இன்றைய மார்க்கெட் 25 கோடி வரை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள பைலிங்குவல் படத்திற்கு சிவகார்த்திகேயனின் சம்பளம் 25 கோடி ரூபாய் எனக் கூறப்படுகிறது.

பன்முகத் திறமை

பன்முகத் திறமை

நடிகராக மட்டுமின்றி சிவகார்த்திகேயன் தயாரிப்பாளராகவும், பாடகராகவும், பாடலாசிரியராகவும் அசத்தி வருகிறார். அதே சமயம் ஏகப்பட்ட சமூக தொண்டுகளையும் அவர் சத்தமின்றி செய்து வருவது குறிப்பிடத்தக்கது. பீஸ்ட் படத்தின் அரபிக் குத்து பாடலுக்காக வாங்கிய சம்பளத்தைக் கூட மறைந்த பாடலாசிரியர் நா முத்துகுமார் குடும்பத்துக்கு கொடுத்ததாக கூறப்பட்டது.

எவ்வளவு சொத்து

எவ்வளவு சொத்து

நடிகர் சிவகார்த்திகேயனின் சொத்து மதிப்பு 110 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. கூடிய விரைவில் அது பல மடங்கு அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. இடையே பல படங்களை ரிலீஸ் செய்ய கையெழுத்துப் போட்டு கடனில் சிக்கிக் கொண்டார் சிவகார்த்திகேயன் என்றும் அதனால் தான் அவரது சொத்து மதிப்பு அதிகரிக்கவில்லை என்றும் கூறப்படுகின்றன. ஆனால், இதுவரை நடிகர் சிவகார்த்திகேயனின் உண்மையான சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

Recommended Video

Sivakarthikeyan super Fun Speech in RRR grand Pre-Release event at Chennai
பிறந்தநாள் வாழ்த்துக்கள்

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி என்பது நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ரொம்பவே பொருத்தமான ஒன்றாக உள்ளது. ஒவ்வொரு விஷயத்தையும் கற்றுக் கொண்டு அதன் பிறகு அதில் களமிறங்கி தனக்கான சாதனைகளை தானே படைத்து வருகிறார். இந்த ஆண்டை போலவே இனிவரும் ஆண்டுகளும் சிவகார்த்திகேயன் சினிமா சிம்மாசனத்தில் கோலோச்ச தேவையான விஷயங்களை செய்து வளர வாழ்த்துக்கள்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X