For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  டான்ஸ் மட்டும் இல்லைங்கண்ணா.. எனக்கு கொஞ்சம் பாடவும் வரும்.. விஜய் பர்த்டே ஸ்பெஷல்!

  |

  சென்னை: நடிகர் விஜய்யின் 48வது பிறந்தநாள் ஜூன் 22ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.

  Recommended Video

  Sibiraj | Age is just a number, இந்த வசனம் Vijay க்கு பொருத்தமானது | HBD Thalapathy |*Interview

  48 பிரபலங்களை வைத்து 48வது பிறந்தநாளின் சிடிபி சமீபத்தில் வெளியிடப்பட்டது. மேலும், ஆடியோ வெளியீட்டு விழாவில் நதி போல ஓடிக் கொண்டே இருக்க வேண்டும் என விஜய் பேசியதை வைத்து ஒரு மோஷன் வீடியோவும் செவன் ஸ்க்ரீன் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

  நடிகர் விஜய் எப்படிப்பட்ட டான்ஸர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். நடனத்தை தாண்டி பாடகராகவும் விஜய் தமிழ் சினிமா ரசிகர்களின் காதுகளில் தேன் பாய்ச்சியதை பற்றி இங்கே பார்ப்போம்..

   விஜய் சார் படத்துல ஜூனியர் ஆர்ட்டிஸ்டா நடிக்கவும் தயார் ... ஜெய் விஜய் சார் படத்துல ஜூனியர் ஆர்ட்டிஸ்டா நடிக்கவும் தயார் ... ஜெய்

  ஸ்டைலிஷ் டான்ஸர்

  ஸ்டைலிஷ் டான்ஸர்

  கஷ்டமான ஸ்டெப்ஸையும் செம கேஷுவலாக ஆடி முகத்தில் ஹீரோயிசம், ரொமான்டிக் என அத்தனையையும் காட்டி அசத்துபவர் நடிகர் விஜய். ஆல் தோட்ட பூபதி, என் உச்சி மண்டையிலே, நான் நடந்தா அதிரடி, தாம் தக்க தீம் தக்க, டண்டான்னா டர்னா, எல்லாப் புகழும் ஒருவன் ஒருவனுக்கே, வாத்தி கம்மிங், ஹலமதி ஹபிபோ என ஏகப்பட்ட பாடல்களில் தான் ஒரு ஸ்டைலிஷ் டான்ஸர் என்பதை நிரூபித்து இருப்பார்.

  பாட்டும் வரும்

  பாட்டும் வரும்

  நடிப்பு, நடனம் என்பதை தாண்டி நடிகர் விஜய் ஒரு சிறந்த பாடகர் என்பதும் ரசிகர்கள் அறிந்த ஒன்று தான். தனது படத்தில் ஒரே ஒரு பாடலை மட்டுமே பாடும் வழக்கத்தை கொண்டிருக்கிறார். பல படங்களில் பாடுவதையும் தவிர்த்துள்ளார். மாஸ்டர், பீஸ்ட் படங்களில் பாடியுள்ள விஜய் தளபதி 66 படத்திலும் தமன் இசையில் பாடியுள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகர் விஜய் குரலில் வெளியான சில சூப்பர் ஹிட் பாடல்களை இங்கே பார்க்கலாம்..

  முதல் பாட்டு

  முதல் பாட்டு

  ஆரம்பத்தில் சில தோல்விகளை சந்தித்த நடிகர் விஜய் பல விமர்சனங்களையும் எதிர்கொண்டார். நடிப்பைத் தாண்டி தான் ஒரு பாடகர் என்பதை முதன் முதலாக 1994ம் ஆண்டு வெளியான ரசிகன் படத்திலேயே நிரூபித்து விட்டார் விஜய். தேவா இசையில் இடம்பெற்ற பம்பாய் சிட்டி பாடல் தான் நடிகர் விஜய் பாடிய முதல் பாடல் என்பது குறிப்பிடத்தக்கது. இளைய தளபதி எனும் அடைமொழியும் அந்த படத்தில் இருந்தே பயன்படுத்த ஆரம்பித்தார்.

  தொட்டபெட்டா மலை மேல

  அடுத்துதாக ஒரு கடிதம் எழுதினேன், அய்யய்யோ அலமேலு, கோட்டகிரி குப்பம்மா என வரிசையாக பாட ஆரம்பித்தார். 1995ல் அம்மா சோபா சந்திரசேகர் உடன் இணைந்து விஷ்ணு படத்தில் விஜய் பாடிய "தொட்ட்பெட்டா மலை மேல முட்டை பரோட்டா "பாடல் பட்டித் தொட்டி எங்கும் மிகப்பெரிய ஹிட் அடித்தது. நடனத்தை தாண்டி தனக்கு பாட்டும் செட்டாகுது என நினைத்த நடிகர் விஜய் தொடர்ந்து பாட ஆரம்பித்தார்.

  ஊர்மிளா.. ஊர்மிளா

  கோயம்பத்தூர் மாப்பிள்ளை, மாண்புமிகு மாணவன், செல்வா, காலமெல்லாம் காத்திருப்பேன் என தொடர்ந்து ஒவ்வொரு படத்திலும் ஒரு பாடலை பாடி வந்தார். ஒன்ஸ்மோர் படத்தில் விஜய் பாடிய ஊர்மிளா.. ஊர்மிளா கண்ணிலே காதலா பாடலும் மிகப்பெரிய வெற்றிப் பாடலாக அமைந்தது.

  சூர்யாவுக்காக பாடிய விஜய்

  நடிகர் விஜய் அதிகமாக மற்ற நடிகர்கள் யாருக்குமே பாட்டுப் பாடியதில்லை. நேருக்கு நேர் படத்தில் இணைந்து நடித்த நடிகர் சூர்யாவும் விஜய்யும் ஆரம்பத்தில் இருந்து இப்போது வரை நண்பர்களாகவே தொடர்கின்றனர். பெரியண்ணா படத்தில் சூர்யா நடனமாடும் "நான் தம்மடிக்கிற ஸ்டைல், மற்றும் ரோட்டுல ஒரு சின்ன பொண்ணு என இரு பாடல்களை பாடியிருப்பார் விஜய்.

  என்னோட லைலா

  நெஞ்சினிலே படத்தில் வெளியான உன் தங்க நிறத்துக்கு தமிழ்நாட்டை எழுதி தரட்டுமா பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்தது. அதைத் தொடர்ந்து வெளியான பத்ரி படத்தில் விஜய் பாடிய என்னோட லைலா பாடல் அவருக்கு எப்போதுமே ஃபேவரைட்டான பாடலாக இன்றும் உள்ளது. சில மேடைகளிலும் அந்த பாடலை பாடியிருப்பார் விஜய்.

  கூகுள் கூகுள்

  தமிழன் படத்தில் உள்ளத்தை கிள்ளாதே, சச்சின் படத்தில் வாடி வாடி கைப்படாத சிடி என விஜய் பாடும் பாடல்கள் எல்லாமே ஹிட் அடித்து வந்தன. துப்பாக்கி படத்தில் விஜய் பாடிய கூகுள் கூகுள் பாடல், தலைவா படத்தில் வாங்கண்ணா வணக்கங்கண்ணா, ஜில்லா படத்தின் கண்டாங்கி கண்டாங்கி என ஒவ்வொரு பாடல்களும் ரசிகர்களின் ஹாட் லிஸ்ட்டில் இடம்பிடித்தன.

  செல்ஃபி புள்ள

  துப்பாக்கியை தொடர்ந்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளியான கத்தி படத்தில் முதன் முதலாக அனிருத் இசையில் விஜய் பாடிய செல்ஃபி புள்ள பாடல் இந்தியாவை தாண்டி சர்வதேச அளவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதன் பிறகு அவர் பாடும் பாடல்கள் யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பல சாதனைகளையும் படைத்து வருகின்றன.

  ஏ.ஆர். ரஹ்மான் இசையில்

  உதயா, அழகிய தமிழ் மகன், சர்கார், பிகில் என நடிகர் விஜய்யின் 4 படங்களுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஆனால், ஏ.ஆர். ரஹ்மான் இசையில் விஜய் பிகில் படத்தின் ஓப்பனிங் பாடலான நெஞ்சுக்குள்ள குடியிருக்கும் நம்ம சனம் வெறித்தனம் பாடலைத் தான் முதன்முதலாக பாடியிருப்பார்.

  குட்டி ஸ்டோரி

  விஜய் இசை வெளியீட்டு விழாவில் பேசும் விஷயங்களையே பாடல் வரிகளாக மாற்றி ஆங்கில வரிகளில் இயக்குநர் அருண்ராஜா காமராஜ் எழுதிய குட்டி ஸ்டோரி பாடலை மாஸ்டர் படத்திற்காக விஜய் பாடியிருப்பார். சர்வதேச அளவில் அந்த பாடல் எப்படியொரு ரீச் ஆனது என்பது அனைவருக்குமே தெரியும்.

  ஜாலியோ ஜிம்கானா

  இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் இந்த ஆண்டு சம்மருக்கு வெளியான பீஸ்ட் படத்தில் மீண்டும் அனிருத் இசையில் ஜாலியோ ஜிம்கானா எனும் செம ஜாலியான தத்துவ பாடலை நடிகர் விஜய் பாடி இருந்தார். அடுத்ததாக தளபதி 66 படத்தில் தமன் இசையில் எப்படி தாறுமாறு செய்யப் போகிறார் என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.

  English summary
  Actor Vijay sung numerous songs in his film career. He mostly lend his voice only for his movie songs, but he also sung a song for actor Suriya also in Periyanna movie.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X