ஸ்பெஷல்ஸ்
ஹரிபிரியா. இவர் வந்த சுவடே தெரியவில்லை. ஆனால், மளமளவென படங்கள் புக் ஆகி கையில் நிறையபடங்களுடன் நிற்கிறார்.
ஐஸ் படதுக்காக இவரை தெலுங்கில் இருந்து கூட்டி வந்தார்கள். அந்தப் படம் இன்னும் தயாராகிக்கொண்டிருக்கிறது. இந் நிலையில் கார்த்திக் கண்ணில் இவர் பட்டுவிட தான் நடிக்கும் என்றும் உன்னைநேசிப்பேன் படத்தில் ஹீரோயின் ஆக்கிவிட்டார்.
ஐஸ் படத்தில் இவருக்கும் பிரியங்கா திரிவேதிக்கும் இடையே கடும் கவர்ச்சிப் போட்டி நடந்து வருகிறதாம்.இருவருமே எப்படி வேண்டுமானாலும் டிரஸ் போடத் தயாராக உள்ளதால் குஜாலில் இருக்கிறது டைரக்டர்வட்டாரம்.
இந்த இரு படங்கள் தவிர பெயரிடப்படாத 2 படங்களிலும் புக் ஆகியிருக்கிறாராம் ஹரிபிரியா. காசு கொடுத்தால்போதும் என்ன ரோல், கதை என்ன, ஹீரோ யார் என்ற கேள்விகளையே கேட்காமல் நடிக்க ஒப்புக் கொள்கிறாராம்ஹரிபிரியா.
புதிதாக ஒரு பி.ஆர்.ஓவையும் நியமித்துவிட்ட இவர் எப்படியும் நடிக்க நான் தயார் என்று அவர் மூலம் சினிமாகம்பெனிகளுக்கு தகவலும் போட்டோ ஆலபமும் அனுப்பி வருகிறார்.


Click it and Unblock the Notifications











