தல-ன் தலைமகளுக்கு பர்த்டே.. ட்விட்டரில் டிரெண்டாகும் #HBDAnoushkaAjith!
சென்னை: தல அஜித்தின் செல்லமகள் அனோஷ்காவின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.
தல அஜித் ரசிகர்கள் #HBDAnoushkaAjith என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி ட்விட்டரில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள அஜித் ரசிகர்கள், பேனர் வைத்தும், கேக் வெட்டியும் அனோஷ்காவின் பிறந்தநாளை கொண்டாடி மகிழ்கின்றனர்.
தங்க மகள்
அஜித் - ஷாலினி தம்பதியினருக்கு 2008ம் ஆண்டு பிறந்த அனோஷ்காவுக்கு இன்று பிறந்தநாள். தல அஜித் மற்றும் மகள் அனோஷ்காவின் அழகிய தருணங்களை சமூக வலைதளத்தில் அஜித் ரசிகர்கள் ஷேர் செய்து வாழ்த்தி வருகின்றனர்.
தளபதி ரசிகர்கள் வாழ்த்து
அனோஷ்கா அஜித்தின் பிறந்த நாளை தல ரசிகர்கள் மட்டுமின்றி தளபதி விஜய் ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டாடி வருகின்றனர். அஜித் மகளை விஜய் கொஞ்சும் புகைப்படங்களும் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகின்றன.
ஹேப்பி பர்த்டே பிரின்சஸ்
அனோஷ்காவின் பிறந்தநாளை முன்னிட்டு ஹேப்பி பர்த்டே பிரின்சஸ் என இந்த ரசிகர் ட்வீட் போட்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
எப்பவுமே ஹேப்பியா இருக்கணும்
தல அஜித்தின் மகள் அனோஷ்கா இன்று போல் எப்பவுமே ஹேப்பியா இருக்கணும் என தல ரசிகர்கள் தொடர்ந்து வாழ்த்தி வருகின்றனர்.
லேட்டஸ்ட் புகைப்படம்
அஜித், ஷாலினி மற்றும் மகள் அனோஷ்காவின் லேட்டஸ்ட் புகைப்படத்தையும் ரசிகர்கள் இணையத்தில் வைரலாக ஷேர் செய்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
பாட்டு பாடும் அனோஷ்கா
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அனோஷ்காவின் பள்ளியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் அனோஷ்கா பாடும் வீடியோ சமீபத்தில் வைரலானது. அந்த பாடல் வீடியோவையும் ஷேர் செய்து ரசிகர்கள் வாழ்த்துகின்றனர்.
ஏழைகளுக்கு அன்னதானம்
தல அஜித்தின் மகள் அனோஷ்காவின் பிறந்தநாளையொட்டி வீடற்ற ஏழை மக்களுக்கு மதுரை அஜித் ரசிகர்கள் அன்னதானம் வழங்கினர்.
மகளுக்காக டயர் ஓட்டிய F1 ரேஸர்
எவ்வளவு பெரிய செலிபிரிட்டியாக இருந்தாலும், மகளுக்கு அஜித் தந்தை தான். தனது மகளுக்காக டயர் ஓட்டிய F1 ரேஸரின் இந்த வீடியோவும் அனோஷ்காவின் பிறந்த நாளை முன்னிட்டு வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











