»   »  இதயங்களை தாக்கிய புயலுக்கு பிறந்தநாள்: ரஜினிக்கு பிரபலங்கள் வாழ்த்து

இதயங்களை தாக்கிய புயலுக்கு பிறந்தநாள்: ரஜினிக்கு பிரபலங்கள் வாழ்த்து

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாளான இன்று #HBDSuperstarRajinikanth என்ற டேக் ட்விட்டரில் தேசிய அளவில் முதல் இடத்தில் டிரெண்டானது.

ரஜினிகாந்துக்கு இன்று வயது 66 ஆகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் பத்திரிகை நண்பர் சோ ஆகியோரின் மரணத்தால் அவர் தனது பிறந்தநாளை கொண்டாடவில்லை. ரசிகர்களையும் கொண்டாட வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் #HBDSuperstarRajinikanth என்ற டேக் ட்விட்டரில் தேசிய அளவில் முதல் இடத்தில் டிரெண்டானது. இது தவிர Thalaivaவும் டிரெண்டானது.

சேவாக்

அன்றும், இன்றும், என்றும் ஒரேயொரு சூப்பர் ஸ்டார் ரஜினி, #HBDSuperstarRajinikanth. இந்தியாவில் அதிகம் விரும்பப்படும் ஸ்டார், தலைவா!

ராகவா லாரன்ஸ்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் #Thalaiva. ராகவேந்திரா சாமி கோவிலுக்கு வழி காட்டிய குரு. அவர் மகிழ்ச்சியாகவும், நலமாகவும் இருக்க வேண்டும். #Rajinikanth

விக்ரம் பிரபு

தி ஒன்
தி ஒன்லி #HBDSuperstarRajinikanth 🙏

அமிதாப் பச்சன்

டிசம்பர் 12 ரஜினிகாந்த் பிறந்தநாள் அவர் புகழ், சந்தோஷம் மற்றும் நல்ல உடல்நலத்துடன் இருக்க வாழ்த்துகிறோம்.

சிபி சத்யராஜ்

சில தலைமுறைகளுக்கு முன்பு எங்கள் இதயங்களை தாக்கி பொழுதுபோக்கின் அர்த்தத்தை மாற்றிய புயலுக்கு பிறந்தநாள். @superstarrajini #HBDSuperstarRajinikanth

விஷால்

ஒன் அன்ட் ஒன்லி சூப்பர்ஸ்டாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்களுக்கு வெற்றி மேல் வெற்றி மற்றும் உடல்நலத்தை ஆண்டவன் அளிக்கட்டும் சார். உங்களின் மேஜிக்கால் அசத்துங்கள்.

English summary
Celebrities have wished Superstar Rajinikanth on his 66th birthday. We wish the legend a very happy birthday.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil