காளைக்கு தடை நீக்கம்

By Staff
Simbu with Vedika
சிம்பு நடித்துள்ள காளை படத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நிக் ஆர்ட்ஸ் எஸ்.எஸ்.சக்ரவர்த்தி தயாரிப்பில், தருண்கோபி இயக்கத்தில், சிம்பு, வேதிகா ஜோடியாக நடித்துள்ள காளை படம் பொங்கல் ரிலீசுக்கு தயாராக உள்ளது. படத்தில் சங்கீதாவும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் காளை படத் தயாரிப்பாளறுக்கு, தயாரிப்பாளருக்கு விஜயா பிக்சர்ஸ் நிறுவனத்தை சேர்ந்த விஜயா என்பவர் கொடுத்த ரூ.74 லட்சம் பணத்தை திருப்பி கொடுக்காததால் அவர் உயர்நீதிமன்றத்தை அணுகி காளை படத்தை வெளியிட தடை கோரினார்.

தன்னுடைய பணத்தை எஸ்.எஸ்.சக்ரவர்த்தி திருப்பிக் கொடுக்கும் வரையில் காளை படத்தை ரிலீஸ் செய்ய அனுமதிக்கக் கூடாது எனவும் அவர் கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் காளைக்கு இடைக்கால தடை விதித்தது. இதையடுத்து தடை உத்தரவை நீக்கக் கோரியும், காளை படத்தை ரிலீஸ் செய்ய அனுமதி கோரியும் சக்கரவர்த்தி சார்பில் மனு செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி ராமசுப்ரமணியம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது சக்ரவர்த்தி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ரவி கூறுகையில், எதிர்தரப்பு மனுதாரர் விஜயாவிடம் வாங்கிய பணத்தை 2 தவணைகளாக செலுத்துகிறோம். தற்போது ரூ.31 லட்சத்தை வழங்குகிறோம். மீதிப்பணத்தை பிறகு கொடுக்கிறோம் எனக் கூறினார்.

விஜயாவின் வழக்கறிஞர் சுந்தரேசன் இந்த முடிவை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்தார். இதையடுத்து காளைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி நீதிபதி ராமசுப்பிரமணியன் உத்தரவிட்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X