ஹன்சிகாவிடம் கூட என்னைதான் புரபோஸ் செய்ய சொன்னார்... உதயநிதி பற்றி சந்தானம்
சென்னை: நடிகரும் தயாரிப்பாளரும் விநியோகஸ்தரும் எம்.எல்.ஏவுமான உதயநிதி அவர்கள் தற்சமயம் மாமன்னன் திரைப்படத்தை தயாரித்து நடித்து முடித்திருக்கிறார்.
அடுத்ததாக நடிகர் கமலஹாசனின் ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
உதயநிதியின் நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தை இயக்கியிருந்த அருண்ராஜா காமராஜ் இயக்குவார் என்று சொல்லப்படுகிறது.

திரைப்பட விநியோகம்
உதயநிதி அவர்களின் ரெட் ஜெயண்ட் தயாரிப்பு நிறுவனம் விநியோகம் செய்யும் படங்களின் வசூல் ரிப்போர்ட் சரியாக தங்களுடைய கைக்கு வருவதாக தயாரிப்பாளர்கள் பலரும் கூறி வருகின்றனர். இதற்கு முன்னர் ஏரியா பிரிக்கும் பொழுது ஆங்காங்கே இருப்பவர்கள் சரியான கணக்கை காட்டுவதில்லை என்றும் இவருடைய வருகைக்குப் பின்னர் தான் அது நடக்கிறது என்றும் உதயநிதியை வெகுவாக பாராட்டுகின்றனர். கிட்டத்தட்ட தமிழ் சினிமாவில் வரும் பெரிய பெரிய படங்களை இவர் தான் விநியோகிக்கிறார். கடைசியாக சென்ற வாரம் வெளிவந்த சந்தானத்தின் குலு குலு படத்தை விநியோகித்தார். அடுத்ததாக விஷாலின் லத்தி திரைப்படத்தை விநியோகம் செய்யவிருக்கிறார்.

ஒரு கல் ஒரு கண்ணாடி
ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தில் நடிக்கும் போது அவருக்கு உறுதுணையாக இருந்தது நகைச்சுவை நடிகர் சந்தானம் தான். காரணம் இயக்குநர் ராஜேஷ் மற்றும் சந்தானத்தின் கூட்டணி அப்போது பிரபலமாக இருந்தது. அதன் பிறகு தொடர்ச்சியாக தான் கதாநாயகனாக நடித்த படங்களில் சந்தானம் நடித்துக் கொண்டிருந்தார். இருவருமே ஒருவரை ஒருவர் முதலாளி என்றுதான் அழைத்துக் கொள்வார்கள். ஒரு கல் ஒரு கண்ணாடியின் முதல் நாள் படப்பிடிப்பன்று சத்தியம் தியேட்டர் வாசலில் நடனம் ஆடிக்கொண்டு வரும் காட்சியைதான் முதலில் படம் பிடித்திருக்கிறார் ராஜேஷ். காரணம் முதல் நாளே உதயநிதிக்கு கூச்சம் போய்விட வேண்டும் என்பதால்.

வசனங்களை தவிர்த்த உதயநிதி
அந்தப் படத்தில் தனக்கு கொடுக்கப்பட்ட வசனங்கள் பெரும்பாலானவற்றை நடிகர் சந்தானத்தையே பேச வைத்துள்ளார் உதயநிதி. அவ்வளவு ஏன், ஹன்சிகாவிடம் புரபோஸ் செய்யும் வசனத்தைக் கூட நண்பனுக்காக புரபோஸ் செய்வது போல் நீங்களே பேசி விடுங்கள் என்று உதயநிதி கூறினாராம். "என்னங்க எல்லா டயலாக்கையும் என்னையே பேச சொல்றாரு... எல்லாத்துக்குமே கூச்சப்படுறாரு" என்று சந்தானமும் இயக்குநர் ராஜேஷும் தங்களுக்குள் பேசிக் கொள்வார்களாம்.

ஆச்சரியப்பட்ட சந்தானம்
ஆனால் அதே உதயநிதி அவர்கள் கடந்த சட்டமன்ற தேர்தலில் பிரச்சாரம் செய்த போது பல சுவாரசியமான நிகழ்வுகளை அரங்கேற்றினார். அதனை தொலைக்காட்சியில் பார்த்துவிட்டு,"படத்துல ஒவ்வொரு வசனத்தையும் பேசுறதுக்கு அப்படி தயங்குனாரு. ஆனா இப்ப அரசியல்ல வந்து பட்டைய கெளப்புறாரு" என்று தானும் இயக்குநர் ராஜேஷும் பேசிக் கொண்டதாக சமீபத்தில் நடிகர் சந்தானம் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











