twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கொஞ்சம் பிளாஷ்பேக்: ரஜினி, கமலுக்கு முன்.. முதன்முதலில் ரூ.1 கோடி சம்பளம் வாங்கிய ஹீரோ இவர்தான்!

    By
    |

    சென்னை: தமிழ் சினிமாவில் ரஜினி, கமலுக்கு முன், ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய ஹீரோ இவர்தான் என்றால் ஆச்சரியமாகத்தான் இருக்கும்.

    Recommended Video

    சண்டக்கோழி 2 பத்திரிக்கையாளர் சந்திப்பில் வரலட்சுமி- வீடியோ

    சினிமாவில் அவ்வப்போது ஒவ்வொரு ஹீரோக்கள் பீக்கில் இருப்பார்கள். இதில் ரஜினி, கமலை சேர்க்க முடியாது.

    அவர்கள் எப்போதுமே பீக்கில் இருப்பவர்கள். மைக் மோகன், ராமராஜன் என்று இந்த லிஸ்டில் பலரை அடுக்கிக் கொண்டு போகலாம்.

    மடிசார் கட்டிக்கொண்டு மாமி லுக்கில் பிக்பாஸ் ஜூலி.. பேஷ் பேஷ் நன்னாருக்கு என பாராட்டும் ஃபேன்ஸ்! மடிசார் கட்டிக்கொண்டு மாமி லுக்கில் பிக்பாஸ் ஜூலி.. பேஷ் பேஷ் நன்னாருக்கு என பாராட்டும் ஃபேன்ஸ்!

    வேட்டியை மடித்து

    வேட்டியை மடித்து

    அப்படி தமிழ் சினிமாவில் கம்பீரமாக என்ட்ரியாகி, பல ஹீரோக்களுக்கு சவால் கொடுத்த மற்றொரு ஹீரோ ராஜ்கிரண். மண்சார்ந்த கதைகளுக்கும் கரடுமுரடான கேரக்டர்களுக்கும் அப்படியே பொருந்திய 'மாணிக்கம்' அவர். படங்களில் வேட்டியை மடித்து கட்டியபடி அவர் கம்பீரமாக நடந்து வருகையில், எந்த ஊரிலும் இருக்கிற அப்படியொரு கேரக்டரை ஞாபகப்படுத்துகிறவராக இருந்தார் ராஜ்கிரண். இப்போதும் அப்படித்தான்!

    என் ராசாவின் மனசிலே

    என் ராசாவின் மனசிலே

    சினிமா வினியோகஸ்தராக வாழ்க்கையை தொடங்கிய ராஜ்கிரண், ராமராஜன் நடித்த ராசாவே உன்னை நம்பி, என்னபெத்த ராசா படங்களைத் தயாரித்தார். பிறகு கஸ்தூரி ராஜா இயக்கிய என் ராசாவின் மனசிலே என்ற படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் ராஜ்கிரண். 1991 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் அவர் ஜோடியாக, மீனா நடித்திருந்தார். ரவிச்சந்தர், சாரதா பிரீதா, கவுண்டமணி, செந்தில் உட்பட பலர் நடித்திருந்தனர்.

    அரண்மனைக் கிளி

    அரண்மனைக் கிளி

    சூப்பர் டூப்பர் ஹிட்டான இந்தப் படத்தில்தான், வைகைப்புயல் வடிவேலு நடிகராக அறிமுகமானார். இசைஞானி இளையராஜா இசை அமைத்திருந்த இந்தப் படத்தை நடிகர் ராஜ்கிரண், தனது ரெட் சன் ஆர்ட்ஸ் கிரியேஷன்ஸ் மூலம் தயாரித்திருந்தார். இந்தப் படத்தின் பாடல்கள் செம ஹிட். அனைத்து ஊர் டீகடைகளிலும் ஒலித்துக்கொண்டிருந்தன இதன் பாடல்கள். அடுத்து 'அரண்மனைக் கிளி' படத்தைத் தானே தயாரித்து, இயக்கி நடித்தார்.

    ராஜ்கிரண் மார்க்கெட்

    ராஜ்கிரண் மார்க்கெட்

    இந்தப் படத்தில் அஹானா, காயத்ரி, சங்கிலி முருகன் உட்பட பலர் நடித்திருந்தனர். இந்தப் படமும் ஹிட். இதையடுத்து 'எல்லாமே என் ராசாதான்' என்ற படத்தைத் தயாரித்து இயக்கினார். சங்கீதா, ரூபாஶ்ரீ நடித்த இந்தப் படமும் வரவேற்பைப் பெற்றதால் ராஜ்கிரண் மார்க்கெட் உச்சத்துக்குச் சென்றது. அவர் கால்ஷீட்டுக்கு தயாரிப்பாளர்கள் காத்துக் கிடந்தனர். அப்போது தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா, நான்கு படங்களைத் தயாரித்துக் கொண்டிருந்தார்.

    வனிதா விஜயகுமார்

    வனிதா விஜயகுமார்

    அதில் ஒன்று, 'மாணிக்கம்'! ராஜ்கிரண் ஹீரோவாக நடித்த இந்தப் படத்தை கே.வி.பாண்டியன் இயக்கினார். அவருக்கு இதுதான் முதல் படம். இவர் பின்னர் தனது பெயரை சூரிய பிரகாஷ் என்று மாற்றிக்கொண்டு, சரத்குமார் நடித்த மாயி, திவான் படங்களை இயக்கினார். 'மாணிக்கம்' படத்தில் ராஜ்கிரண் ஜோடியாக வனிதா விஜயகுமார் நடித்தார். ஜெயந்தி, மணிவண்ணன், ஶ்ரீவித்யா, வினு சக்கரவர்த்தி என பெரிய நட்சத்திர பட்டாளம்.

    ரஜினி, கமல்ஹாசன்

    ரஜினி, கமல்ஹாசன்

    அந்த கால கட்டத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய்காந்த் ஆகியோரின் மார்க்கெட் உச்சத்தில் இருந்தது. அவர்கள் சம்பளம் ரூ.85 லட்சத்துக்குள்தான். அதற்கு அதிகமாக யாருக்கும் இல்லை. ஆனால், அப்போது 'மாணிக்கம்' படத்துக்காக நடிகர் ராஜ்கிரணுக்காகக் கொடுக்கப்பட்ட சம்பளம் ஒரு கோடிக்கும் மேல். பத்திரிகைகளில் இந்த செய்தி அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது.

    இப்போதும் கோடிகளில்

    இப்போதும் கோடிகளில்

    இதுபற்றி அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவாவிடம் இப்போது கேட்டபோது, அது உண்மைதான். இன்னும் சரியாக சொல்ல வேண்டும் என்றால், அவருக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய்' என்றார்! நடிகர் ராஜ்கிரண், இப்போதும் அதே கெத்தில்தான் இருக்கிறார். குணசித்திர வேடங்களில் நடித்து வந்தாலும் அவர் சம்பளம் இப்போதும் கோடிகளில்தான் இருக்கிறது!

    English summary
    Rajkiran is the first hero who had received Rs 1 crore remuneration in tamil film industry
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X