»   »  துணை நடிகையை 1 கோடிக்குவிலை பேசிய காமெடியன்! சென்னை வடபழனி காவல் நிலையத்திற்கு அதிகாலையில் வந்த துணை நடிகைஹேமா, தனது காதலருடன் தன்னை சேர்த்து வைக்கக் கோரி போராட்டம் நடத்தினார்.இந்த நடிகையை 2ம் தாரமாக மணம் முடிக்க ஒரு முன்னணி காமெடி நடிகர் ரூ. 1கோடி வரை விலை பேசியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.பல்வேறு திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளவர் ஹேமா. கமல்ஹாசன்நடித்த அந்த ஒரு நிமிடம் படம்தான் இவரது முதல் படம். அப்படத்தில் குழந்தைநட்சத்திரமாக அறிமுகமாகிய ஹேமா, 500க்கும் மேற்பட்ட படங்களில்நடித்துள்ளாராம்.சமீபத்தில் வெளியான திருப்பாச்சி, சிவகாசி, கனா கண்டேன் ஆகிய படங்களிலும்தலை காட்டியுள்ளார் ஹேமா.ஹேமாவும், செந்தில்குமார் என்பவரும் காதலித்தனர். இவர்களது காதலுக்குசெந்தில்குமாரின் வீட்டில் எதிர்ப்பு இல்லை. ஆனால் ஹேமாவின் தந்தை ஊட்டிநாகராஜ் (இவரும் துணை நடிகர்தான்) கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.இந் நிலையில், நேற்று அதிகாலை வடபழனி காவல் நிலையத்திற்கு ஹேமாவும்,செந்தில்குமாரும் வந்தனர். நாங்கள் காதல் ஜோடிகள், எங்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. நீங்கள்தான் சேர்த்துவைக்க வேண்டும் என்று போலீசாரிடம் கூறியுள்ளனர்.ஆனால் இப்போது அதெல்லாம் முடியாது. 10 மணிக்கு வாருங்கள், அப்போதுஇன்ஸ்பெக்டர் வந்து விடுவார் என்று காவல் நிலையத்தில் கூறியுள்ளனர்.ஆனாலும் வெளியேறாமல் காவல் நிலையத்திலேயே இருந்த ஹேமாவும், அவரதுகாதலரும், வெளியில் போனால் எங்களது உயிருக்கு ஆபத்து உள்ளது. மீறிப் போகச்சொன்னால் தற்கொலை செய்து கொள்வோம் என்று போலீஸாரிடம் கூறினர்.இதையடுத்து அங்கிருந்த போலீஸார், துணை ஆணையர் ஸ்ரீதர், உதவி ஆணையர்சேது உள்ளிட்டோருக்குத் தகவல் கொடுத்தனர். உடனடியாக அதிகாரிகள் காவல்நிலையத்திற்கு விரைந்து வந்தனர்.பெண் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் புஷ்பவல்லி ஹேமாவிடமும்,செந்தில்குமாரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தினார்.இதையடுத்து செந்தில்குமாரின் தாயார் சரோஜா, ஹேமாவின் தந்தை ஊட்டி நாகராஜ்ஆகியோரை போலீஸார் காவல் நிலையத்திற்கு வரவழைத்தனர்.அங்கு வந்த ஊட்டி நாகராஜ் கடும் கோபத்துடன், செந்தில்குமாருக்கு எனதுபெண்ணைக் கட்டிக் கொடுக்க மாட்டேன். அவனுக்கு போதைப் பழக்கம் உள்ளது.அவனிடம் எனது மகள் நிம்மதியாக வாழ முடியாது. அதற்கு பேசாமல் பாழும்கிணற்றில் பிடித்து எனது மகளைத் தள்ளி விடலாம் என கோபமாக கூறினார்.இதையடுத்து போலீஸார் அவரை சமாதானப்படுத்தினார்கள். பின்னர் என் மகள்விருப்பபடி யாருடன் வேண்டுமானாலும் வாழட்டும் என்று கூறியபடி அவர்வெளியேறினார்.அதன் பின்னர் ஹேமாவும், செந்தில்குமாரும் வடபழனி முருகன் கோவிலுக்குச்சென்றனர். அங்கு செந்தில்குமார், ஹேமா கழுத்தில் தாலி கட்டி தனது மனைவியாக்கிக்கொண்டார்.அதிகாலையில் காவல் நிலையத்தில் நிடந்த இந்த காதல் ஜோடியின் போராட்டம்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இதற்கிடையே ஹேமாவின் தந்தை ஊட்டி நாகராஜ் தனது மகள் குறித்து பரபரப்பானதகவல்களை வெளியிட்டுள்ளார். அவர் கூறுகையில், சினிமா உலகம் மாயமானது சார்.இங்கே பெண்கள் காதல் வலையில் சிக்கி சீரழிந்து போகிறார்கள். கடைசியில்தற்கொலையைத்தான் அவர்கள் நாடுகிறார்கள். எனது மகளுக்கு அப்படிப்பட்ட நிலைவந்து விடக் கூடாது என்பதற்காகத்தான் பொத்திப் பொத்தி வளர்த்தேன்.நான் அதிகம் சம்பாதிக்காவிட்டாலும் கூட மனைவி, குழந்தைகளோடு மானத்தோடுவாழ்ந்து வந்தேன். பழம்பெரும் இயக்குனர்கள் முதல் நேற்று வந்த இயக்குனர்கள்வரை அனைவருக்கும் என்னைத் தெரியும். நான் நினைத்திருந்தால் லட்சம் லட்சமாகசம்பாதித்திருக்க முடியும்.எனது மகளின் அழகைப் பார்த்து பலர் லடசம் லட்சமாக பணத்தை அள்ளித் தருவதாகபேரம் பேசியுள்ளார்கள்.ஒரு முன்னணிக் காமெடி நடிகரே உங்கள் மகளை எனக்கு 2வது திருமணம் செய்துவையுங்கள். ரூ. 1 கோடி ரூபாய் தருகிறேன் என்றார். சமீபத்தில்தான் அவர் இப்படித்தூது விட்டார். மானத்தை முக்கியமான நினைக்கும் நான் அவரை திட்டிஅனுப்பினேன்.செந்தில்குமார் வசதி படைத்தவர். அவரது தந்தை ஒரு ஜாதிச் சங்கத்தின் தலைவராகஉள்ளார். அவர் பெரும் கோடீஸ்வரர். வட பழனியில் மட்டும் அவருக்கு 20 வீடுகள்உள்ளன. அவரது வீட்டில் நாங்கள் குடியிருந்தபோது தான் என் மகள் ஹேமாவுக்கு அவரது மகன்செந்தில்குமார் வலை வீசினார். இதையடுத்து செந்தில்குமாரின் தந்தை நாகராஜன் என்னை அணுகி எனதுமகனுக்கு உங்கள் மகளை கட்டித் தாருங்கள் என்றார்.ஆனால் செந்தில்குமார் நல்லவன் கிடையாது. அவருக்கு ஹெராயின், கஞ்சாஉள்ளிட்ட போதைப் பழக்கம் உள்ளது. சுயமாக ஒரு காசு கூட சமபாதிக்க முடியாது.அதனால்தான் கட்டிக் கொடுக்க மாட்டேன் என்று கூறி விட்டேன் என்று கூறினார்நாகராஜ்.துணை நடிகையை 1 கோடிக்கு பேரம் பேசிய அந்த முன்னணி நடிகர் யார் என்ற புதுசர்ச்சை இப்போது கிளம்பியுள்ளது.

துணை நடிகையை 1 கோடிக்குவிலை பேசிய காமெடியன்! சென்னை வடபழனி காவல் நிலையத்திற்கு அதிகாலையில் வந்த துணை நடிகைஹேமா, தனது காதலருடன் தன்னை சேர்த்து வைக்கக் கோரி போராட்டம் நடத்தினார்.இந்த நடிகையை 2ம் தாரமாக மணம் முடிக்க ஒரு முன்னணி காமெடி நடிகர் ரூ. 1கோடி வரை விலை பேசியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.பல்வேறு திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளவர் ஹேமா. கமல்ஹாசன்நடித்த அந்த ஒரு நிமிடம் படம்தான் இவரது முதல் படம். அப்படத்தில் குழந்தைநட்சத்திரமாக அறிமுகமாகிய ஹேமா, 500க்கும் மேற்பட்ட படங்களில்நடித்துள்ளாராம்.சமீபத்தில் வெளியான திருப்பாச்சி, சிவகாசி, கனா கண்டேன் ஆகிய படங்களிலும்தலை காட்டியுள்ளார் ஹேமா.ஹேமாவும், செந்தில்குமார் என்பவரும் காதலித்தனர். இவர்களது காதலுக்குசெந்தில்குமாரின் வீட்டில் எதிர்ப்பு இல்லை. ஆனால் ஹேமாவின் தந்தை ஊட்டிநாகராஜ் (இவரும் துணை நடிகர்தான்) கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.இந் நிலையில், நேற்று அதிகாலை வடபழனி காவல் நிலையத்திற்கு ஹேமாவும்,செந்தில்குமாரும் வந்தனர். நாங்கள் காதல் ஜோடிகள், எங்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. நீங்கள்தான் சேர்த்துவைக்க வேண்டும் என்று போலீசாரிடம் கூறியுள்ளனர்.ஆனால் இப்போது அதெல்லாம் முடியாது. 10 மணிக்கு வாருங்கள், அப்போதுஇன்ஸ்பெக்டர் வந்து விடுவார் என்று காவல் நிலையத்தில் கூறியுள்ளனர்.ஆனாலும் வெளியேறாமல் காவல் நிலையத்திலேயே இருந்த ஹேமாவும், அவரதுகாதலரும், வெளியில் போனால் எங்களது உயிருக்கு ஆபத்து உள்ளது. மீறிப் போகச்சொன்னால் தற்கொலை செய்து கொள்வோம் என்று போலீஸாரிடம் கூறினர்.இதையடுத்து அங்கிருந்த போலீஸார், துணை ஆணையர் ஸ்ரீதர், உதவி ஆணையர்சேது உள்ளிட்டோருக்குத் தகவல் கொடுத்தனர். உடனடியாக அதிகாரிகள் காவல்நிலையத்திற்கு விரைந்து வந்தனர்.பெண் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் புஷ்பவல்லி ஹேமாவிடமும்,செந்தில்குமாரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தினார்.இதையடுத்து செந்தில்குமாரின் தாயார் சரோஜா, ஹேமாவின் தந்தை ஊட்டி நாகராஜ்ஆகியோரை போலீஸார் காவல் நிலையத்திற்கு வரவழைத்தனர்.அங்கு வந்த ஊட்டி நாகராஜ் கடும் கோபத்துடன், செந்தில்குமாருக்கு எனதுபெண்ணைக் கட்டிக் கொடுக்க மாட்டேன். அவனுக்கு போதைப் பழக்கம் உள்ளது.அவனிடம் எனது மகள் நிம்மதியாக வாழ முடியாது. அதற்கு பேசாமல் பாழும்கிணற்றில் பிடித்து எனது மகளைத் தள்ளி விடலாம் என கோபமாக கூறினார்.இதையடுத்து போலீஸார் அவரை சமாதானப்படுத்தினார்கள். பின்னர் என் மகள்விருப்பபடி யாருடன் வேண்டுமானாலும் வாழட்டும் என்று கூறியபடி அவர்வெளியேறினார்.அதன் பின்னர் ஹேமாவும், செந்தில்குமாரும் வடபழனி முருகன் கோவிலுக்குச்சென்றனர். அங்கு செந்தில்குமார், ஹேமா கழுத்தில் தாலி கட்டி தனது மனைவியாக்கிக்கொண்டார்.அதிகாலையில் காவல் நிலையத்தில் நிடந்த இந்த காதல் ஜோடியின் போராட்டம்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இதற்கிடையே ஹேமாவின் தந்தை ஊட்டி நாகராஜ் தனது மகள் குறித்து பரபரப்பானதகவல்களை வெளியிட்டுள்ளார். அவர் கூறுகையில், சினிமா உலகம் மாயமானது சார்.இங்கே பெண்கள் காதல் வலையில் சிக்கி சீரழிந்து போகிறார்கள். கடைசியில்தற்கொலையைத்தான் அவர்கள் நாடுகிறார்கள். எனது மகளுக்கு அப்படிப்பட்ட நிலைவந்து விடக் கூடாது என்பதற்காகத்தான் பொத்திப் பொத்தி வளர்த்தேன்.நான் அதிகம் சம்பாதிக்காவிட்டாலும் கூட மனைவி, குழந்தைகளோடு மானத்தோடுவாழ்ந்து வந்தேன். பழம்பெரும் இயக்குனர்கள் முதல் நேற்று வந்த இயக்குனர்கள்வரை அனைவருக்கும் என்னைத் தெரியும். நான் நினைத்திருந்தால் லட்சம் லட்சமாகசம்பாதித்திருக்க முடியும்.எனது மகளின் அழகைப் பார்த்து பலர் லடசம் லட்சமாக பணத்தை அள்ளித் தருவதாகபேரம் பேசியுள்ளார்கள்.ஒரு முன்னணிக் காமெடி நடிகரே உங்கள் மகளை எனக்கு 2வது திருமணம் செய்துவையுங்கள். ரூ. 1 கோடி ரூபாய் தருகிறேன் என்றார். சமீபத்தில்தான் அவர் இப்படித்தூது விட்டார். மானத்தை முக்கியமான நினைக்கும் நான் அவரை திட்டிஅனுப்பினேன்.செந்தில்குமார் வசதி படைத்தவர். அவரது தந்தை ஒரு ஜாதிச் சங்கத்தின் தலைவராகஉள்ளார். அவர் பெரும் கோடீஸ்வரர். வட பழனியில் மட்டும் அவருக்கு 20 வீடுகள்உள்ளன. அவரது வீட்டில் நாங்கள் குடியிருந்தபோது தான் என் மகள் ஹேமாவுக்கு அவரது மகன்செந்தில்குமார் வலை வீசினார். இதையடுத்து செந்தில்குமாரின் தந்தை நாகராஜன் என்னை அணுகி எனதுமகனுக்கு உங்கள் மகளை கட்டித் தாருங்கள் என்றார்.ஆனால் செந்தில்குமார் நல்லவன் கிடையாது. அவருக்கு ஹெராயின், கஞ்சாஉள்ளிட்ட போதைப் பழக்கம் உள்ளது. சுயமாக ஒரு காசு கூட சமபாதிக்க முடியாது.அதனால்தான் கட்டிக் கொடுக்க மாட்டேன் என்று கூறி விட்டேன் என்று கூறினார்நாகராஜ்.துணை நடிகையை 1 கோடிக்கு பேரம் பேசிய அந்த முன்னணி நடிகர் யார் என்ற புதுசர்ச்சை இப்போது கிளம்பியுள்ளது.

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை வடபழனி காவல் நிலையத்திற்கு அதிகாலையில் வந்த துணை நடிகைஹேமா, தனது காதலருடன் தன்னை சேர்த்து வைக்கக் கோரி போராட்டம் நடத்தினார்.

இந்த நடிகையை 2ம் தாரமாக மணம் முடிக்க ஒரு முன்னணி காமெடி நடிகர் ரூ. 1கோடி வரை விலை பேசியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பல்வேறு திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளவர் ஹேமா. கமல்ஹாசன்நடித்த அந்த ஒரு நிமிடம் படம்தான் இவரது முதல் படம். அப்படத்தில் குழந்தைநட்சத்திரமாக அறிமுகமாகிய ஹேமா, 500க்கும் மேற்பட்ட படங்களில்நடித்துள்ளாராம்.

சமீபத்தில் வெளியான திருப்பாச்சி, சிவகாசி, கனா கண்டேன் ஆகிய படங்களிலும்தலை காட்டியுள்ளார் ஹேமா.

ஹேமாவும், செந்தில்குமார் என்பவரும் காதலித்தனர். இவர்களது காதலுக்குசெந்தில்குமாரின் வீட்டில் எதிர்ப்பு இல்லை. ஆனால் ஹேமாவின் தந்தை ஊட்டிநாகராஜ் (இவரும் துணை நடிகர்தான்) கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இந் நிலையில், நேற்று அதிகாலை வடபழனி காவல் நிலையத்திற்கு ஹேமாவும்,செந்தில்குமாரும் வந்தனர்.

நாங்கள் காதல் ஜோடிகள், எங்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. நீங்கள்தான் சேர்த்துவைக்க வேண்டும் என்று போலீசாரிடம் கூறியுள்ளனர்.

ஆனால் இப்போது அதெல்லாம் முடியாது. 10 மணிக்கு வாருங்கள், அப்போதுஇன்ஸ்பெக்டர் வந்து விடுவார் என்று காவல் நிலையத்தில் கூறியுள்ளனர்.

ஆனாலும் வெளியேறாமல் காவல் நிலையத்திலேயே இருந்த ஹேமாவும், அவரதுகாதலரும், வெளியில் போனால் எங்களது உயிருக்கு ஆபத்து உள்ளது. மீறிப் போகச்சொன்னால் தற்கொலை செய்து கொள்வோம் என்று போலீஸாரிடம் கூறினர்.

இதையடுத்து அங்கிருந்த போலீஸார், துணை ஆணையர் ஸ்ரீதர், உதவி ஆணையர்சேது உள்ளிட்டோருக்குத் தகவல் கொடுத்தனர். உடனடியாக அதிகாரிகள் காவல்நிலையத்திற்கு விரைந்து வந்தனர்.

பெண் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் புஷ்பவல்லி ஹேமாவிடமும்,செந்தில்குமாரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தினார்.

இதையடுத்து செந்தில்குமாரின் தாயார் சரோஜா, ஹேமாவின் தந்தை ஊட்டி நாகராஜ்ஆகியோரை போலீஸார் காவல் நிலையத்திற்கு வரவழைத்தனர்.

அங்கு வந்த ஊட்டி நாகராஜ் கடும் கோபத்துடன், செந்தில்குமாருக்கு எனதுபெண்ணைக் கட்டிக் கொடுக்க மாட்டேன். அவனுக்கு போதைப் பழக்கம் உள்ளது.அவனிடம் எனது மகள் நிம்மதியாக வாழ முடியாது. அதற்கு பேசாமல் பாழும்கிணற்றில் பிடித்து எனது மகளைத் தள்ளி விடலாம் என கோபமாக கூறினார்.

இதையடுத்து போலீஸார் அவரை சமாதானப்படுத்தினார்கள். பின்னர் என் மகள்விருப்பபடி யாருடன் வேண்டுமானாலும் வாழட்டும் என்று கூறியபடி அவர்வெளியேறினார்.

அதன் பின்னர் ஹேமாவும், செந்தில்குமாரும் வடபழனி முருகன் கோவிலுக்குச்சென்றனர். அங்கு செந்தில்குமார், ஹேமா கழுத்தில் தாலி கட்டி தனது மனைவியாக்கிக்கொண்டார்.

அதிகாலையில் காவல் நிலையத்தில் நிடந்த இந்த காதல் ஜோடியின் போராட்டம்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கிடையே ஹேமாவின் தந்தை ஊட்டி நாகராஜ் தனது மகள் குறித்து பரபரப்பானதகவல்களை வெளியிட்டுள்ளார். அவர் கூறுகையில், சினிமா உலகம் மாயமானது சார்.இங்கே பெண்கள் காதல் வலையில் சிக்கி சீரழிந்து போகிறார்கள். கடைசியில்தற்கொலையைத்தான் அவர்கள் நாடுகிறார்கள். எனது மகளுக்கு அப்படிப்பட்ட நிலைவந்து விடக் கூடாது என்பதற்காகத்தான் பொத்திப் பொத்தி வளர்த்தேன்.

நான் அதிகம் சம்பாதிக்காவிட்டாலும் கூட மனைவி, குழந்தைகளோடு மானத்தோடுவாழ்ந்து வந்தேன். பழம்பெரும் இயக்குனர்கள் முதல் நேற்று வந்த இயக்குனர்கள்வரை அனைவருக்கும் என்னைத் தெரியும். நான் நினைத்திருந்தால் லட்சம் லட்சமாகசம்பாதித்திருக்க முடியும்.

எனது மகளின் அழகைப் பார்த்து பலர் லடசம் லட்சமாக பணத்தை அள்ளித் தருவதாகபேரம் பேசியுள்ளார்கள்.

ஒரு முன்னணிக் காமெடி நடிகரே உங்கள் மகளை எனக்கு 2வது திருமணம் செய்துவையுங்கள். ரூ. 1 கோடி ரூபாய் தருகிறேன் என்றார். சமீபத்தில்தான் அவர் இப்படித்தூது விட்டார். மானத்தை முக்கியமான நினைக்கும் நான் அவரை திட்டிஅனுப்பினேன்.

செந்தில்குமார் வசதி படைத்தவர். அவரது தந்தை ஒரு ஜாதிச் சங்கத்தின் தலைவராகஉள்ளார். அவர் பெரும் கோடீஸ்வரர். வட பழனியில் மட்டும் அவருக்கு 20 வீடுகள்உள்ளன. அவரது வீட்டில் நாங்கள் குடியிருந்தபோது தான் என் மகள் ஹேமாவுக்கு அவரது மகன்செந்தில்குமார் வலை வீசினார். இதையடுத்து செந்தில்குமாரின் தந்தை நாகராஜன் என்னை அணுகி எனதுமகனுக்கு உங்கள் மகளை கட்டித் தாருங்கள் என்றார்.

ஆனால் செந்தில்குமார் நல்லவன் கிடையாது. அவருக்கு ஹெராயின், கஞ்சாஉள்ளிட்ட போதைப் பழக்கம் உள்ளது. சுயமாக ஒரு காசு கூட சமபாதிக்க முடியாது.அதனால்தான் கட்டிக் கொடுக்க மாட்டேன் என்று கூறி விட்டேன் என்று கூறினார்நாகராஜ்.

துணை நடிகையை 1 கோடிக்கு பேரம் பேசிய அந்த முன்னணி நடிகர் யார் என்ற புதுசர்ச்சை இப்போது கிளம்பியுள்ளது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil