வாலியை போலீஸில் மாட்டிவிட நடந்த சதி.. தெரிந்த கண்ணதாசன் என்ன செஞ்சாரு தெரியுமா?.. இப்படி ஒரு மனிதரா?

சென்னை: பாடலாசிரியர் வாலியை யாராலும் மறக்க முடியாது. எம்ஜிஆருக்கு தொடங்கி மிர்ச்சி சிவாவரை பாடல்கள் எழுதியிருக்கிறார். அவர் எழுதும் ஒவ்வொரு பாடலிலும் தன்னிடம் இருக்கும் ட்ரேட் மார்க் ஸ்டைலை அசால்ட்டாக கொண்டு வந்து வைத்துவிடுவார். இளம் பாடலாசிரியர்களுக்கு கடைசிவரை போட்டியாக திகழ்ந்துகொண்டிருந்த அவர் கடந்த 2013ஆம் ஆண்டு உயிரிழந்தார். இந்நிலையில் அவரை போலீஸில் மாட்டிவிட நடந்த சதி குறித்து பார்க்கலாம்.

கோலிவுட் திரையிசை பாடல்களில் வாலிக்கான இடம் எப்போதும் தனித்துவமானது. ஆல் இந்தியா ரேடியோவில் பணியாற்றிக்கொண்டிருந்த ரங்கராஜன் என்னும் வாலி நாடகங்கள் எழுத ஆரம்பித்து பிறகு சினிமாவுக்குள் பாடல்கள் எழுத வந்தவர். இயல்பிலேயே அவருக்குள் தமிழ் ஊற்றெடுத்து ஓடியது. இதன் காரணமாக தான் எழுத தொடங்கிய சில பாடல்களிலேயே அவர் தனக்கான தனி அடையாளத்தை பெற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கண்ணதாசனுக்கு போட்டி: வாலி பாடல்கள் எழுத வந்த சமயத்தில் கோடம்பாக்கத்தில் கண்ணதாசனின் கொடிதான் உயர பறந்துகொண்டிருந்தது. அவருடன் போட்டிப்போட்டு வெல்ல முடியுமா என்று மற்ற பாடலாசிரியர்கள் யோசித்துக்கொண்டிருந்த சூழ்நிலையில்; வாலியோ அசால்ட்டாக ஸ்கோர் செய்தார். கண்ணதாசன் எழுதும் தத்துவ ஸ்டைலையும் தன்னிடம் கொண்டிருந்த வாலி; தன்னுடைய மொழி புலமையையும் பயன்படுத்தி கண்ணதாசனுக்கு போட்டியாக திகழ்ந்தார்.

கண்ணதாசனே மெர்சல் ஆனாரு: முக்கியமாக வாலி எழுதிய சில பாடல்களை தான்தான் எழுதினேன் என்று நினைக்கும் அளவுக்கு கண்ணதாசனின் ஸ்டைல் வாலியின் வரிகளில் இருந்தது. உதாரணமாக, 'நான் ஆணையிட்டால்' பாடலை எழுதியது வாலி. ஆனால் அதனை வானொலியில் கேட்கும்போது தான் எழுதிய பாடல் என்று கண்ணதாசன் நினைத்து; பிறகு அது இல்லை என்று தெரிந்தவுடன் தன்னுடைய ஸ்டைலை பின்பற்றும் வாலியை கூப்பிட்டு பாராட்டவும் செய்தார் அவர்.

Here are Unknown Throwback Incident about Late Lyricists Vaali And Kannadhasan
Photo Credit:

தனி பெரும் கலைஞன் வாலி: கண்ணதாசனின் மறைவுக்கு பிறகு வாலி - வைரமுத்து என்ற போட்டி உருவானது. ஒருபக்கம் வைரமுத்து பாடல்களில் புது ரத்தம் பாய்ச்சினார். உடனடியாக சுதாரித்துக்கொண்ட வாலி; தன்னுடைய எழுத்தின் தன்மையையும் காலத்துக்கு ஏற்றவாறு மாற்றிக்கொண்டார். இதன் காரணமாக வாலி சலிக்காமல் போட்டியில் இருந்தார். தொடர்ந்து எத்தனை பாடலாசிரியர்கள் வந்தாலும் அவர்களுக்கு ஈடாக எழுதி தனி பெரும் கலைஞனாக திகழ்ந்தவர் அவர்.

என்ன ஸ்பெஷல்: பொதுவாக பாடலாசிரியர்கள் ஒரு பாடலை எழுதும்போது தன்னுடைய மொழி வளத்தையும், கற்பனை திறனையும் கொட்டத்தான் ஆசைப்படுவார்கள். அதுதான் இயல்பும்கூட. அது வாலியிடமும் இருந்ததுதான். ஆனால் கதைக்கும், சூழலுக்கும் தகுந்த வார்த்தைகளை எளிமையாக பாடல்களில் பயன்படுத்தி அதை விரிவாக்கியவர் வாலி. அந்த ஸ்பெஷல் குணம் பின்நாட்களில் நா.முத்துக்குமார், பா.விஜய் உள்ளிட்ட பாடலாசிரியர்களிடமும் இருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல் தன்னைவிட இளைய பாடலாசிரியர்களை பாராட்டுவதில் எந்தவித வஞ்சகமும் வைத்ததில்லை வாலி.

கண்ணதாசன் செய்தது: அவருக்கு இந்த குணம் வந்ததில் ஆச்சரியமில்லை. ஏனெனில் அவர் முதலில் போட்டிப்போட ஆரம்பித்தது கண்ணதாசனுடன். ஒருகட்டத்தில் கண்ணதாசனைவிடவும் வாலி நிறைய பாடல்களை எழுத தொடங்கினார். அந்த சமயத்தில் கண்ணதாசன் தரப்பில் ஒரு பார்ட்டி வைக்கப்பட்டது. அந்தப் பார்ட்டியில் வாலியும் ஆஜரானார். மது, மாது என அந்த பார்ட்டி செல்கையில், ஒரு அறைக்குள் போதையில் நுழைந்திருக்கிறார் வாலி. அப்போது கண்ணதாசனிடம் அவரது உதவியாளர், 'இதுதான் சரியான நேரம். காவல் துறையில் சொன்னால் இந்த ஹோட்டலுக்கு வந்து வாலியை கையோடு கைது செய்துவிடுவார்கள்.

அவரது மார்க்கெட்டும் சரிந்துவிடும் என்று ஏடாகூடமான ஐடியா கொடுக்க; கண்ணதாசன் கோபத்தின் உச்சத்துக்கு சென்று; அதெல்லாம் செய்யக்கூடாது. துரோகம்.. ரங்கராஜன் (வாலி) எப்போது இந்த அறையை விட்டு வெளியே வருகிறாரோ அதுவரை நீ காத்திருந்து அவரை காரில் அழைத்து வீட்டில் விட்டு வா என்று சொல்லிவிட்டு சென்றாராம். இந்த உரையாடல் வாலியின் காதுகளிலும் விழுந்திருக்கிறது. கண்ணதாசன் சென்ற பிறகு அந்த உதவியாளரிடம் சென்ற வாலி, தனது சமூகத்தை குறிப்பிட்டு நான் மீன் சாப்பிடுபவன் என்னை நீ நினைக்கும்படி வீழ்த்த முடியாது என்கிற ரீதியில் கத்திவிட்டு; கண்ணதாசனை நினைத்து நெகிழ்ந்துபோனாராம். இதனை வாலி தன்னுடைய நினைவு நாடாக்கள் புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X