விஜய்.. சிம்பிள், ஹம்பிள், செம்ம டான்ஸ் பார்ட்டி...!- ஹீரோயின்ஸ் சொல்றாங்க! #HBDVijay

By Shankar

பெண்களுக்கு ரொம்ப்...ப பிடித்தமான ஹீரோன்னா நம்ம விஜய்தான்.

குறிப்பாக ஹீரோயின்களுக்கு. விஜய்க்கு ஜோடியா ஒரு படத்துலயாவது நடிக்கணும் என்று சொல்லாத இளம் நாயகிகளே இல்லை.

பிறந்த நாளும் அதுவுமா.. விஜய் பத்தி ஹீரோயின்கள் என்ன சொல்றாங்கன்னு கேப்போமா?

ஸ்ருதி ஹாசன்

ஸ்ருதி ஹாசன்

வெரி நைஸ் பெர்சன். அவ்ளோ பெரிய ஸ்டார். ஆனா செட்ல அப்படி நடந்துக்கவே மாட்டார். டவுன் டூ எர்த் பெர்சன். ரொம்ப அமைதியாவே இருப்பார். பாசிட்டிவான கேரக்டர்.

காஜல் அகர்வால்

காஜல் அகர்வால்

விஜய் சார் கூட வொர்க் பண்றது எப்பவுமே ஃபெண்டாஸ்டிக் அனுபவம். அவர் கூட நடிக்கும்போது செம ஜாலியா இருக்கும். என்ஜாய் பண்ணி நடிக்கலாம். ஹீ ஈஸ் வெரி ஸ்வீட் பெர்சன்.விஜய் அமேஸிங் டான்சர்கறதால அவர் கூட டான்ஸ் பண்றது சூப்பர் அனுபவமா இருக்கும்.

ஹன்சிகா

ஹன்சிகா

அதிகம் பேசவே மாட்டார். ஷூட்டிங் ஸ்பாட்ல இவர் இருக்காரான்னே சந்தேகமா இருக்கும். அவ்வளவு அமைதி. ஆனா ஷாட்ல அவர் காட்டுற பெர்ஃபார்மன்ஸும், டான்ஸ் ஆடுற வேகமும் யாருக்கும் வராது.

சமந்தா

சமந்தா

விஜய் சாரோட டான்ஸ் பத்தி எல்லாரும் சொல்லிருக்காங்க... ஆனா கத்தி ஷூட்டிங்ல ஸாங் ஷூட் பண்ணும்போது ஒரு நிமிஷம் அப்படியே ஷாட்டை மறந்து நின்னுட்டேன். அப்படி ஒரு அமேஸிங் டான்ஸர். அவரோட ஹார்ட் வொர்க் தான் அவரை இந்த உயரத்துக்கு கொண்டு வந்துருக்கு.

அனுஷ்கா

அனுஷ்கா

அவர் கூட முதல் ஸாங் பண்ணின அனுபவம் இன்னும் மனசுல இருக்கு. என் உச்சி மண்டையில ஸாங். ஷூட்டுக்கு முன்னாடி அப்படியே டயர்டா, இவரா டான்ஸ் ஆடப்போறாருகற மாதிரி உட்கார்ந்துருந்தாரு. அந்த நேரத்துல நான் ஒரு நாலைஞ்சு தடவை ரிகர்சல் பார்த்துட்டே இருந்தேன். ஷாட்டுக்கு போனோம். ஸ்டெப்ஸை ஒரு முறை லேசா தலையை ஆட்டிக்கிட்டே கேட்டுகிட்டார். அவ்வளவு தான். ஷாட்ல நான் ஷாக்காகி டான்ஸ் கூட ஆடாம நின்னுட்டேன். என்னை பொறுத்தவரைக்கும் இந்தியாவிலேயே சிறந்த டான்ஸர் விஜய் தான்!

இலியானா

இலியானா

விஜய் கூட நடிக்கப்போறோமோன்னு சின்ன பதட்டம் இருந்துச்சு. ஆனா ஃபர்ஸ்ட் டே ஷூட்லயே என்னை கூலாக்கிட்டாரு விஜய். எந்த பந்தாவும் இல்லாம ரொம்ப சிம்பிளா நடந்துக்கிட்டாரு. விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், நான்னு அது ஒரு ஃபோர் இடியட் கூட்டணியாத்தான் இருந்துச்சு. அதெல்லாம் மறக்க முடியாத அனுபவம்.

அமலா பால்

அமலா பால்

இன்டஸ்ட்ரிகுள்ள வந்தப்ப விஜய் சார் கூட நடிக்கணும்னு ஆசை இருந்துச்சு. ஆனா நிறைவேறும்னு நினைக்கலை. ரொம்ப ஹம்பிள்டு பெர்சன். சில்டு பெர்சனாலிட்டி. கேமரா ஆன் ஆகிட்டா அவ்படியே டோட்டலா மாறிடுவாரு. சீனியர் ஹீரோவாவே தெரியலை. இன்னமும் ரொம்ப யங்காவே இருக்காரு.''

தமன்னா

தமன்னா

விஜய் கூட டான்ஸ்னாலே எனக்கு பயமா இருக்கும். நாம எத்தனை தடவை ரிகர்சல் பார்த்துட்டு வந்தாலும் அவரோட டான்ஸுக்கு முன்னாடி காலியாயிடுவோம்.

தொகுப்பு - ஆர்ஜி

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X