»   »  தமிழைக் குறி வைக்கும் இந்தி

தமிழைக் குறி வைக்கும் இந்தி

Subscribe to Oneindia Tamil

பாலிவுட்டில் படம் எடுத்து வந்த ஐந்து பிரபல தயாரிப்பு நிறுவனங்கள் ஒரே நேரத்தில்தமிழ்ப் படத் தயாரிப்பில் குதித்துள்ளன.

இந்திய சினிமா உலகிலேயே அதிக டிமாண்ட் உள்ளதாக தமிழ் மாறியுள்ளது. பெரியபெரிய திறமையாளர்கள் இங்கேதான் அதிகம். இங்கிருந்து இந்தியையும் ஆட்டிப்படைத்து வருகிறார்கள் கோலிவுட் தொழில்நுட்ப கில்லாடிகள்.

இந்தித் திரையுலகைப் போல பெரிய அளவில் பணம் புழங்கும் இடமாகவும் தமிழ்சினிமா மாறியுள்ளது. மேலும் உலக அளவில் இந்திக்கு இணையானமார்க்கெட்டையும் இப்போது தமிழ் சினிமா பிடித்துள்ளது.

மேலும் முன்பு போல இல்லாமல் இப்போது தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட சலுகைமழை வேறு. குறைந்த கட்டணத்திலான வெளிப்புறப் படப்பிடிப்பு, நல்லடெக்னீஷயன்கள், தமிழில் பெயர் வைத்தால் கேளிக்கை வரி ரத்தோ ரத்து, குறைந்தசெலவில் குண்டக்க மண்டக்க லாபம் பார்க்கலாம் என ஏகப்பட்ட பிளஸ்பாயிண்டுகளுடன் அமோக அறுவடை நடந்து வருகிறது தமிழில்.

மேலும், சமீபத்தில் வெளியான வேட்டையாடு விளையாடு, வரலாறு, வல்லவன்ஆகிய சூப்பர் ஹிட் படங்களில் வெளிநாடுகளில் சக்கை போடு போட்டு வசூலைஅள்ளி வருகின்றன. இந்திப் படங்களுக்கு நிகராக இந்தப் படங்களுக்கு அங்குபெரும் வரவேற்பாம். ஹாலிவுட் படம் போலவே இருக்கிறது என்று பாராட்டுவேறாம்.

இதையெல்லாம் கூட்டிக் கழித்துப் பார்த்த சில பாலிவுட் தயாரிப்பாளர்கள் தமிழில்படம் தயாரிக்க ஓடோடி வந்துள்ளனர். பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா,அமிதாப்பச்சனின் ஏபிசிஎல், யுடிவி, பாபா பிலிம்ஸ், பர்மாவாலா பிரதர்ஸ் ஆகியோர்இப்போது தமிழில் படம் தயாரிக்கும் பணியில் மும்முரமாக இறங்கியுள்ளனர்.

பர்மாலா பிரதர்ஸ், இந்தியில் நிறையப் படங்களை தயாரித்த நிறுவனம். இவர்கள்இப்போது மாதவன், உயிர் சங்கீதா ஜோடியில் இவன் யாரோ என்ற படத்தைத்தயாரிக்கிறார்கள்.

இதேபோல ராம் கோபால் வர்மாவின் படத்திலும் மாதவன்தான் ஹீரோ. ஜோடியாகநடிப்பது திமிரு ஷ்ரேயா ரெட்டி. கூடவே இஷா தியோலையும் சேர்த்து விட்டுள்ளார்வர்மா.

அதேபோல பாபா பிலிம்ஸ் தயாரிக்கும் படத்திற்கு நெஞ்சிருக்கும் வரை என்றபெயரை வைத்துள்ளனர். எஸ்.ஏ.சந்திரசேகர்தான் படத்தை இயக்குகிறார். சித்திரம்பேசுதடி நாயகன் நரேன், பஞ்சாபி அழகி தீபா ஆகியோர் ஜோடியாக நடிக்கிறார்கள்.

யுடிவி தயாரிக்கம் நிலம் என்ற படத்திலும் மாதவன்தான் ஹீரோ. இந்தப் படம் தவிரஇயக்குநர் அமீருடன் இணைந்து மேலும் 3 படங்களையும் யுடிவி தயாரிக்கவுள்ளது.

அமிதாப்பச்சனின் ஏபிசிஎல் முன்பு தமிழில் உல்லாசம் என்ற படத்தைத் தயாரித்தது.அதில் அஜீத்தான் ஹீரோ. இரண்டாவது ஹீரோவாக சியான் விக்ரம் நடித்திருந்தார்.இப்போது விக்ரமை வைத்து பிரமாண்ட செலவில் ஏபிசிஎல் புதிய படம் தயாரிக்கஉள்ளது. பீமா முடிந்த பிறகு இந்தப் படத்தைத் தொடங்கவுள்ளனராம்.

இப்படி இந்திப் பட நிறுவனங்கள் பெரிய அளவில் கோலிவுட்டை நோக்கிப்படையெடுத்திருப்பதால் தமிழ் சினிமாவின் பிசினஸ் மேலும் விரிவடையும், பெரும்பொருட் செலவிலான படங்களும் இனிமேல் தமிழில் சர்வ சாதாரணமாக உருவாகும்என்கிறார்கள். நல்ல படமா வந்தா சரித்தான்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil