Don't Miss!
- News ஓயாத மணிப்பூர் கலவரம்.. பூத்களை கைப்பற்ற முயற்சி? மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டால் பதற்றம்
- Technology கெத்தா வெளிவரும் Vivo V30e 5G.. வெல்வெட் ரெட் லுக்கில் தருமாறு அம்சங்கள்.. விலை என்ன இருக்கும்?
- Finance துபாயில் இருக்கும் இந்தியர்களே.. முதல்ல இதை படிங்க..!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Lifestyle தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்வது பாதுகாப்பானது தெரியுமா? இத்தனை ஸ்பூனுக்கு மேல தெரியாம கூட சாப்பிடாதீங்க...
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
ஹாலிவுட், பாலிவுட் சினிமாக்காரர்கள் விரும்பும் புதுச்சேரி!
ஆனால் இன்று நிலைமை தலைகீழ். பெரும்பாலான படங்களின் ஒரு காட்சியாவது புதுச்சேரியில் எடுக்கப்படுவது வழக்கமாக உள்ளது. தமிழ் சினிமாவை விடுங்கள்... பாலிவுட், ஹாலிவுட் என சர்வதேச சினிமாக்கள் எடுக்கப்படும் இடமாக மாறியுள்ளது புதுச்சேரி.
கடந்த மூன்று மாதங்களில் மட்டும் மூன்று ஹாலிவுட் படங்களின் படப்பிடிப்பு இங்கு நடைபெற்றுள்ளது.
இந்தி நடிகர் அமீர்கான், நடிகை கரீனாகபூர் நடிக்கும் புதிய படத்தின் படிப்பிடிப்பும் சமீபத்தில் இங்கு தொடங்கியது. இந்த படத்தில் நடிகர் அமீர்கான் கிரைம் பிராஞ்ச் போலீஸ் அதிகாரியாகவும் அவருக்கு ஜோடியாக கரீனா கபூரும் நடிக்கின்றனர். இன்னொரு ஜோடியாக நடிகை ராணிமுகர்ஜி நடிக்கிறார். புதுவை அண்ணாமலை ஓட்டல், எழில் மிகுந்த பகுதிகளான ஊசுடு ஏரி, பிள்ளையார்குப்பம், புதுவை கடற்கரை சாலை உள்ளிட்ட பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறுகிறது.
இந்தப் படம் தவிர, ஏராளமான தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்கள் புதுவையில் படமாகின்றன. புதுச்சேரியில் படப்பிடிப்பு நடத்துவோருக்கு ஏராளமான சலுகைகள் தரப்படுவதால், இங்கு படப்பிடிப்பு நடத்துவதையே அனைவரும் விரும்புகிறார்கள்.
இதைத் தொடர்ந்து புதுவையிலேயே படம் தயாரிப்பதற்கான ஸ்டுடியோ உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தித் தரவும் அரசு முடிவு செய்துள்ளது.