»   »  கதாசிரியர்கள் ஸ்டிரைக் - ஹாலிவுட் ஸ்தம்பிப்பு!

கதாசிரியர்கள் ஸ்டிரைக் - ஹாலிவுட் ஸ்தம்பிப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஊதிய உயர்வு கோரி ஹாலிவுட் கதாசிரியர்கள் காலவரையற்ற ஸ்டிரைக்கில் குதித்துள்ளனர். இதனால் ஆங்கிலப் படத் தயாரிப்பு பாதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க திரைப்பட மற்றும் டிவி எழுத்தாளர்கள் (கதாசிரியர்கள்) ஊதிய உயர்வு கோரி வருகின்றனர். பல மாதங்களாகவே இந்த பிரச்சினை நீடித்து வருகிறது. ஊதியத்தை உயர்த்த வேண்டும் அல்லது திரைப்படங்கள் மற்றும் டிவி நிகழ்ச்சிகளை டிவிடி மற்றும் இணையதளத்தில் வெளியிடும்போது அதுதொடர்பான காப்பிரைட் கட்டணத்தைக் கொடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரி வருகின்றனர்.

இதுதொடர்பாக திரைப்படம் மற்றும் டிவி நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும், அமெரிக்க கதாசிரியர்கள் மற்றும் எழுத்தாளர்கள் சங்கத்திற்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து வந்தது. பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடந்தும் கூட இதில் உடன்பாடு ஏற்படவில்லை.

இந்த நிலையில், இன்று இறுதிக் கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. கிட்டத்தட்ட 3 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தையின்போது திடீரென தயாரிப்பாளர்கள் சங்கப் பிரதிநிதிகள் வெளிநடப்புச் செய்து வெளியேறினார். இதனால் பேச்சுவார்த்தை முறிந்தது.

இதைத் தொடர்ந்து திட்டமிட்டபடி நள்ளிரவு 12 மணி முதல் கதாசிரியர்கள் மற்றும் எழுத்தாளர்கள் வேலை நிறுத்தத்தைத் தொடங்கினர்.

அமெரிக்காவில் கடந்த 20 ஆண்டுகளில் முதன் முறையாக நடக்கும் மிகப் பெரிய ஹாலிவுட் ஸ்டிரைக் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வேலைநிறுத்தம் காரணமாக ஹாலிவுட் ஸ்டுடியோக்களில் திரைப்படத் தயாரிப்பு வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தற்போது தயாரிப்பில் உள்ள படங்களுக்கான வசனங்கள், திரைக்கதை உள்ளிட்டவை ஏற்கனவே தயாராக இருப்பதால் இப்போதைக்கு ஹாலிவுட் தயாரிப்பாளர்ளுக்குப் பெரும் பாதிப்பு ஏற்படாது என்று தயாரிப்பாளர் தரப்பு கூறுகிறது. அதேசமயம், டிவி நிகழ்ச்சித் தயாரிப்பு ஸ்தம்பித்துள்ளது.

அமெரிக்க திரைக்கதாசிரியர்கள், எழுத்தாளர்கள் சங்கத்தில் 12 ஆயிரம் கதாசிரியர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் அனைவருமே பணியை நிறுத்தி விட்டனர்.

லாஸ் ஏஞ்சலெஸில் அனைவரும் கூடி போராட்டத்தை நடத்தத் தயாராகி வருகின்றனர். ஹாலிவுட்டில் உள்ள முக்கிய ஸ்டுடியோக்கள் ன்பு கூடி ஆர்ப்பாட்டம் செய்யத் திட்ட்மிட்டுள்ளனர்.

ஹாலிவுட்டில் கடைசியாக கடந்த 1998ம் ஆண்டு கதாசிரியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். இது 22 வாரங்களுக்கு நீடித்தது. இதன் காரணமாக டிவி நிகழ்ச்சிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. ஹாலிவுட்டுக்கு இதனால் 500 மில்லியன் டாலர் அளவுக்கு இழப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Read more about: hollywood

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil