செல்லம்மா பாட்டு உருவாக இப்படி ஒரு காரணம் சொல்லும் சிவகார்த்திகேயன்!

சென்னை : சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருக்கக்கூடியவர் நடிகர் சிவகார்த்திகேயன்.

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து வெற்றி பெற்று தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்துள்ளார்.

தற்போது நடிகராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும், பாடகராகவும் , பாடலாசிரியராகவும் உள்ளார். இவர் எழுதிய செல்லம்மா பாடல் மிகவும் பிரபலமானது. இது உருவான கதையை சுவாரசியமாக கூறியுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.

விஜய் டிவி டூ சினிமா

விஜய் டிவி டூ சினிமா

விஜய் டிவி பிரபல நிகழ்ச்சியான அது இது எது, சூப்பர் சிங்கர் போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார் சிவகார்த்திகேயன் . சிவகார்த்திகேயனின் எதார்த்தமான பேச்சும், இன்ஸ்டன்ட் காமெடியும் இவரை ஒரு முன்னணி நடிகராக உருவாக்கியது. மெரினா படத்தின் மூலம் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகம் ஆனார். தொகுப்பாளராக இருக்கும் போதே பல ரசிகர்களை பெற்றிருந்த நடிகர் சிவகார்த்திகேயன், இந்தப் படத்தின் மூலம் அனைவரின் மனதையும் வென்றார்.

வெற்றி வேட்டை

வெற்றி வேட்டை

3,கேடி பில்லா கில்லாடி ரங்கா, மனம் கொத்தி பறவை, எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே போன்ற பல படங்களில் நடித்து தொடர்ந்து ஹிட் கொடுத்து முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வந்தார். ரஜினி முருகன், ரெமோ, வேலைக்காரன் போன்ற பல படங்கள் தொடர்ந்து நடித்து வந்த சிவகார்த்திகேயன், கனா படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார். இவர் நடித்த டாக்டர் டான் போன்ற படங்களை சிவகார்த்திகேயன் தயாரித்தார்.

முன்னணி நடிகைகள்

முன்னணி நடிகைகள்

வாரிசு நடிகர்களாக இருந்தாலும் பலர் சாதிக்காத பல விஷயங்களை சிவகார்த்திகேயன் சாதித்துக்காட்டினார். நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரியங்கா மோகன், ஹன்சிகா, ராகுல் ப்ரீத் சிங் போன்ற பல முன்னணி நடிகைகளுடன் இணைந்து நடித்துள்ளார். நடிகர் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி அவர் ரசிகர்களுக்கு இன்ஸ்பிரேஷன் ஆகவே இருந்து வருகிறது.

பாடலாசிரியர் சிவா

பாடலாசிரியர் சிவா

கோலமாவு கோகிலா படத்தில் கல்யாண வயசு என்ற பாடலை எழுதி பாடல் ஆசிரியராக அறிமுகமானார், நம்ம வீட்டு பிள்ளை படத்தில் காந்த கண்ணழகி பாடலையும் எழுதியுள்ளார். சமீபத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் இவர் எழுதிய அரபிக்குத்து பாடலும், டான் படத்தில் பிரைவேட் பார்ட்டியும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது . டாக்டர் படத்தில் இவர் எழுதிய செல்லம்மா பாடல் உருவான கதையை சிவகார்த்திகேயன் கூறியுள்ளார். இதுகுறித்து சிவகார்த்திகேயன் கூறுகையில் முதலில் பெண்ணை வர்ணிக்க வேண்டும் என்பதனால் "மெழுகு டாலு நீ" என்று எழுதி விட்டேன், பிறகு நம்மை யாரு புகழ்வாங்க அவங்களா வருவாங்க, நம்மளை பத்தி நம்மை எழுதிக்க வேண்டியது தான் என்று "ஹேண்ட்சம் ஆளு நீ" என்று முதல் வரியை போட்டுக் கொண்டேன் , இந்த பாடல் ஹிட் ஆக இந்த இரண்டு வரிகளே முக்கியமான காரணம் என்று சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X