உலகத்துல எவ்ளோ நடிகைகளை பார்த்துருக்கோம்.. ஆனா GVM பட ஹீரோயின்கள் போல அழகா பார்த்தது இல்லை!

சென்னை: அவ என் அஞ்சலடான்னு சூர்யாவை மட்டும் இல்லை ஒட்டுமொத்த தமிழ்நாட்டு இளைஞர்களையும் சொல்ல வைத்த கெளதம் மேனனின் 50வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

ஹீரோக்களை தன்னுடைய சாயல் போல உருவாக்கும் கெளதம் மேனன், ஹீரோயின்கள் விஷயத்தில் மட்டும் அப்படியே அழகியலை கையாண்டு விடுகிறார்.

சிம்பிளா ஒரு ப்ளூ கலர் ஸ்கூல் டீச்சர்கள் அணிந்து செல்லும் சேலையில், த்ரிஷா செல்லும் போது ப்ளூ சூட்ஸ் யூ என சொல்லி ரசிக்க வைத்து விடும் காதல் மன்னன் கெளதம் மேனனின் பிறந்தநாளில் அவர் தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்திய அழகான ஹீரோயின்கள் பற்றி இங்கே பார்ப்போம்..

அரை சதம் அடித்த கெளதம் மேனன்

அரை சதம் அடித்த கெளதம் மேனன்

1973ம் ஆண்டு பிப்ரவரி 25ம் தேதி கேரளாவின் ஒட்டப்பாலம் எனும் ஊரில் பிறந்து புதுக்கோட்டையில் உள்ள மூகாம்பிகை இன்ஜினியரிங் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்துக் கொண்டிருக்கும் போது, இது எல்லாம் நமக்கு செட் ஆகாது, என மணிரத்னம் படங்களை பார்த்து இன்ஸ்பிரேஷனான ஜிவிஎம் இயக்குநராக அறிமுகமானார். இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடி வரும் கெளதம் மேனனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

மின்னலே - ரீமா சென்

மின்னலே - ரீமா சென்

எப்படி மணிரத்னம் படங்களில் நாயகிகளை அழகாக காட்டுகின்றாரோ அதே போல கெளதம் மேனன் ஹீரோயின்களும் தமிழ் சினிமாவில் ஸ்பெஷல் தான். அழகாகவும், வித்தியாசமாகவும், போல்டாகவும் தனது திரைப்பட ஹீரோயின்களை காட்டி வருகிறார் கெளதம் மேனன். மின்னலே படத்தில் ரீனா ஜோஷப்பாக மீரா ஜாஸ்மின் நடித்து ரசிகர்களின் இதயங்களை பறித்திருப்பார்.

காக்க காக்க - ஜோதிகா

காக்க காக்க - ஜோதிகா

ஒன்றா இரண்டா ஆசைகள் என காக்க காக்க படத்தில் ஜோதிகா கண்களாலே பேசி நடித்து சூர்யாவை போலவே ரசிகர்களையும் காதல் கொள்ளச் செய்வார். தனியாக ஒரு வீடு இருக்கு, வீக்கெண்ட் ஆனால், இங்கே வருவோம் என கூட்டிச் சென்று பேச, "என்னை இங்கே வரச் செய்தாய்.. என்னென்னவோ பேசச் செய்தாய்.. குறுகுறு பார்வைக்குள்ள அர்த்தம் என்ன?" என்றே அந்த கதாபாத்திரத்தின் மீது அணிச்சையாய் ரசிகர்கள் பார்வை திரும்பும் படியாக மாயா கதாபாத்திரத்தை வடிவமைத்து இருப்பார்.

வேட்டையாடு விளையாடு - கமாலினி முகர்ஜி

வேட்டையாடு விளையாடு - கமாலினி முகர்ஜி

தமிழ் சினிமாவுக்கு புதிது புதிதாக ஹீரோயின்களை அறிமுகப்படுத்திய பெருமைக்கு சொந்தக்காரர் கெளதம் மேனன். வேட்டையாடு விளையாடு படத்தின் பிளாஷ்பேக் போர்ஷனில் கமல் மனைவியாக வரும் கமாலினி முகர்ஜியை பார்த்ததுமே பார்த்த முதல் நாளே என ரசிகர்களும் பாட ஆரம்பித்து விட்டனர். அழகாக காட்டும் அதே சமயத்தில் ஹீரோயின்களை கொடூரமாக போட்டுத் தள்ளி ரசிகர்களிடம் திட்டையும் வாங்கிக் கட்டிக் கொள்கிறார் கெளதம் மேனன்.

ஆண்ட்ரியா - ஜோதிகா

ஆண்ட்ரியா - ஜோதிகா

பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் ஆண்ட்ரியாவை தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் செய்து வைத்தார் கெளதம் மேனன். மறுபக்கம் அதுவரை பார்க்காத ஜோதிகாவின் கங்கா முகத்தை தமிழ் சினிமாவுக்கு காட்டி, இது போன்ற பெண்களும் சமூகத்தில் ஆண்களிடம் பணத்தை பறித்து வருகின்றனர் என யாருமே சொல்லத் தயங்காத கதையை வெளிப்படையாக சொல்லி மிரட்டி இருந்தார்.

அவ என் அஞ்சல மச்சான்

அவ என் அஞ்சல மச்சான்

சூர்யாவின் வாரணம் ஆயிரம் படத்தில் அஞ்சலையாக வந்து ஏகப்பட்ட ரசிகர்களின் ட்ரீம் கேர்ளாகவே மாறிவிட்டார் நடிகை சமீரா ரெட்டி. அடியே கொல்லுது.. அழகோ அள்ளுது என அவரை இந்த படத்தில் பார்த்து ரசித்தது போல அடுத்தடுத்த படங்களில் ரசிக்கவே முடியவில்லை. அனல் மேலே பனித்துளி பாடலில் திவ்யா செம ஸ்கோர் செய்திருப்பார்.

உலகத்துல எவ்ளோ பொண்ணு இருந்தும்

உலகத்துல எவ்ளோ பொண்ணு இருந்தும்

இப்படி ஒவ்வொரு படங்களிலும் ஹீரோயின் கதாபாத்திரங்களை ஸ்ட்ராங்காகவும் அழகாகவும் வடிவமைத்து வந்தாலும், அதை விட சூப்பரா ஒன்னு இறக்குறேன் பாருங்க என விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் அதுவரை பார்த்து வந்த த்ரிஷாவை டோட்டலாக ஜெஸ்ஸியாக மாற்றி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி இருந்தார் கெளதம் மேனன். கவர்ச்சிகரமான ஆடைகள் எல்லாம் இல்லாமல், சிம்பிளான உடையில், அதிக மேக்கப் இன்றி ரியல் மேக்கப் உடன் ஹீரோயின்களை கெளதம் மேனன் ப்ரொஜக்ட் பண்ணுகிற விதமே வேறலெவல். த்ரிஷா ஜெஸ்ஸியாகவே காதலித்தார். ஜெஸ்ஸியாகவே கோபப்பட்டார். எல்லாமே ஜிவிஎம்மின் மேஜிக்.

நீதானே என் பொன்வசந்தம் - சமந்தா

நீதானே என் பொன்வசந்தம் - சமந்தா

சமந்தாவை ஸ்கூல் பொண்ணாக அழகாக காட்டி இருப்பார் நீதானே என் பொன்வசந்தம் படத்தில், கன்ஃபியூஸ் நிலையில், இன்றைய கால பெண்கள் காதலிப்பதும், பிரேக்கப் செய்வதும், பின்னர் காதலனை நினைத்து வருந்துவது என பல மன நிலைகளில் எப்படி தவிக்கின்றனர் என்பதை சமந்தாவின் நடிப்பால் படு எதார்த்தமாக எடுத்துக் காட்டி இருப்பார்.

லாங் டிராவல் போக

லாங் டிராவல் போக

மலையாள நடிகைகளை தமிழ் சினிமாவுக்கு அடிக்கடி அறிமுகப்படுத்தி வைக்கும் இயக்குநராக மாறிய கெளதம் மேனன் அடுத்ததாக அச்சம் என்பது மடமையடா படத்தில் மஞ்சிமா மோகனை அறிமுகப்படுத்தி வைத்திருந்தார். இப்படி ஒரு கேர்ள் ஃபிரெண்ட் உடன் பைக்கில் லாங் டிராவல் செய்தால் எப்படி இருக்கும் என இளைஞர்கள் பலரும் ராயல் என்ஃபீல்டு வாங்க ஒரு காரணமாகவே மாறிவிட்டார் நம்ம புல்லட் பாண்டி கெளதம் மேனன்.

வெந்து தணிந்தது காடு - சித்தி இத்னானி

வெந்து தணிந்தது காடு - சித்தி இத்னானி

என்னை அறிந்தால் படத்தில் அனுஷ்கா, த்ரிஷாவை அழகாக காட்டியிருப்பார் கெளதம் மேனன். நவரசம் வெப்சீரிஸில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரக்யா மார்ட்டினை கொண்டு வந்திருப்பார். கடைசியாக சிம்பு நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான வெந்து தணிந்தது காடு படத்திற்காக சிரித்தால் கன்னத்தில் குழி விழும் சித்தி இத்னானியை ஹீரோயினாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தி உள்ளார். அடுத்த படத்தில் கெளதம் மேனன் ஹீரோயின் எப்படி இருக்கப் போகிறார்கள் என்பதை அவரது ரசிகராகவே காத்திருந்து பார்ப்போம்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X