twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சிம்பு மேனரிஸம் பிரேம்ஜி அமரனுக்கு வந்ததிற்கு இதான் காரணமாம்!!!

    |

    சென்னை: பாடகர், இசையமைப்பாளர், நடிகர் என பன்முகங்களை கொண்டவர்தான் பிரேம்ஜி அமரன். தனது அண்ணன் வெங்கட் பிரபு படங்கள் மட்டுமின்றி ஏராளமான படங்களில் நடித்து வருகிறார்.

    இவரது இயற்பெயர் பிரேம் மட்டுமே. கங்கை அமரனை குறிக்கும் 'ஜி' என்ற ஆங்கில எழுத்தை சேர்த்து பிரேம்ஜி என்று அனைவராலும் அழைக்கப்படுகிறார்.

    "உங்கள் அண்ணன் வெங்கட் பிரபு உங்களை நடிக்க வைக்காமல் இருந்திருந்தால் என்னவாகி இருப்பீர்கள்" என்று சமீபத்திய பேட்டியில் இவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு இவர் கொடுத்த பதிலை பார்ப்போம்.

    வில்லன் அஜித்... ஹீரோ விஜய்... வெறித்தனமான ட்ரெயிலர்... மிரண்ட பிரேம்ஜி! வில்லன் அஜித்... ஹீரோ விஜய்... வெறித்தனமான ட்ரெயிலர்... மிரண்ட பிரேம்ஜி!

     ஹாரிஸ் முதல் மணிஷர்மா வரை

    ஹாரிஸ் முதல் மணிஷர்மா வரை

    வெளிநாட்டில் இசை படித்துவிட்டு இந்தியா திரும்பிய பிரேம்ஜி தனது சகோதரர் யுவன் சங்கர் ராஜா இசையில் மட்டுமின்றி இசையமைப்பாளர்கள் ஹாரிஸ் ஜெயராஜ், தேவி ஶ்ரீ பிரசாத், மணி ஷர்மா இசையிலும் பாடி வந்தார். அதன் பின்னரே மற்றொரு அண்ணன் கார்த்திக் ராஜா இசையில் பாடிய பிரேம்ஜி தொடர்சியாக யுவன் இசையமைத்த படங்களில் அவருக்கு உதவியாளராக பணியாற்றினார். திருப்பாச்சி திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த "கண்ணும் கண்ணும்தான்" பாடலில் வரும் இங்கிலீஷ் ராப் பகுதியை இவர்தான் பாடியிருப்பார்.

     இசையமைப்பாளர்

    இசையமைப்பாளர்

    நடித்துக் கொண்டே இதுவரை கன்னடம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொத்தம் 16 படங்களுக்கு பிரேம்ஜி இசையமைத்துள்ளார். வெங்கட் பிரபு இயக்கிய மன்மத லீலை மற்றும் பார்ட்டி படங்களுக்கு மெட்டுமே இசையமைத்துள்ள இவர் பெரும்பாலும் சென்னை 28 நடிகர்கள் தனித்தனியாக நடிக்கும் படங்களுக்கே இசையமைத்து வருகிறார்.

    ஹீரோ

    ஹீரோ

    தனது முதல் மகன் வெங்கட் பிரபுவை கதாநாயகனாக அறிமுகம் செய்து அதில் தோல்வியடைந்த கங்கை அமரன், இரண்டாவது மகன் பிரேம்ஜியையும் முதலில் கதாநாயகனாக்கத்தான் முயற்சித்தார். ஆனால் அந்த முயற்சியில் பின் வாங்கிய பின்னரே யுவன் படங்களில் வேலை செய்ய ஆரம்பித்தார் பிரேம்ஜி. மூன்று படங்களில் சிறு வேடங்களில் நடித்திருந்தாலும் முதன் முதலில் முழு நீள கதாப்பாத்திரத்தில் நடித்தது வல்லவன் படத்தில்தான்.

     சிம்பு மேனரிஸம்

    சிம்பு மேனரிஸம்

    மன்மதன் படத்தின் பின்னணி இசைப்பணிகள் நடந்து கொண்டிருந்தபோது, பிரேம்ஜியை கவனித்த சிம்பு,"அடுத்து நான் வல்லவன் என்கிற படத்தை இயக்க போகிறேன். அதில் நீ நயன்தாராவின் நண்பனாக நடிக்க வேண்டும்" என்று கூறி தனது முதல் வாய்ப்பை தந்தது சிம்புதான் என்று கூறியுள்ளார். முதன் முதலில் ஷூட்டிங் ஸ்பாட்டில் வசனங்களையும், நடிப்பையும் சொல்லிக் கொடுத்தது சிம்புதான். அதனால்தான் அவருடைய மேனரிஸத்தை என்னுடைய மற்ற படங்களிலும் பார்க்க முடிகிறது என பிரேம்ஜி கூறியுள்ளார். வல்லவன் திரைப்படத்திற்கு பின்னரே சென்னை 28 படம் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    பாடகர், இசையமைப்பாளர், நடிகர் என பன்முகங்களை கொண்டவர்தான் பிரேம்ஜி அமரன். தனது அண்ணன் வெங்கட் பிரபு படங்கள் மட்டுமின்றி ஏராளமான படங்களில் நடித்து வருகிறார். “உங்கள் அண்ணன் வெங்கட் பிரபு உங்களை நடிக்க வைக்காமல் இருந்திருந்தால் என்னவாகி இருப்பீர்கள்” என்று சமீபத்திய பேட்டியில் இவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு இவர் கொடுத்த பதிலை பார்ப்போம்.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X