»   »  ஹர்லியை கைபிடிக்கும் நாயர்

ஹர்லியை கைபிடிக்கும் நாயர்

Subscribe to Oneindia Tamil

பெரும் எதிர்பார்ப்புக்கு ஆளான ஹாலிட் கவர்ச்சிக் கன்னி லிஸ் ஹர்லிக்கும், இந்திய இளம் தொழிலதிபர் அருண்நாயருக்கும் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் மார்ச் மாதம் திருமணம் நடைபெறவுள்ளது.

ஹாலிவுட் நடிகையும், பிரபல மாடலுமான லிஸ் ஹர்லியும், அருண் நாயரும் சில காலமாக காதலித்து வந்தனர்.இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்தனர். ஹாலிவுட்டின் பெரும் எதிர்பார்ப்புக்குரிய செய்தியாக அவர்களதுதிருமணச் செய்தி உருவெடுத்தது.

இருவரும் இரண்டு முறைகளில் திருமணம் செய்யவுள்ளனர். முதல் திருமணம் இங்கிலாந்தில் மார்ச் 3ம் தேதிநடைபெறவுள்ளது. இதைத் தொடர்ந்து இந்தியாவில் இந்திய முறைப்படி திருமணம் நடைபெறவுள்ளது.

அவர்களது திருமணம், ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் உள்ள தேவிகர் அரண்மனை ஹோட்டலில்நடைபெறும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அரண்மனை லிஸுக்கு மிகவும் பிடித்தமானது என்பதுகுறிப்பிடத்தக்கது.

ஆனால் தற்போது திருமணத்தை சூரிய நகரம் என அழைக்கப்படும் ஜோத்பூருக்கு மாற்றி விட்டனர். ஜோத்பூரில்உள்ள பாரம்பரியம் மிக்க உமைத் பவன் அரண்மனையில் திருமணம் நடைபெறவுள்ளது.

தேவிகர் அரண்மனை ஹோட்டலில் விருந்தினர்கள் தங்க போதிய வசதி இல்லாததால்தான் திருமணத்தைஜோத்பூருக்கு மாற்றி விட்டனராம். தேவிகர் அரண்மனை ஹோட்டலில் 39 சிறப்பு அறைகள் மட்டுமே உள்ளன.ஆனால் இங்கிலாந்திலிருந்து 200க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் வரவுள்ளதால் கல்யாணத்தை ஜோத்பூருக்குக்கொண்டு போய் விட்டால் லிஸ்.

இருப்பினும் தேவிகர் அரண்மனை ஹோட்டலிலும் மார்ச் 4ம் தேதி முதல் 10ம் தேதி வரைக்கும் அறைகள் புக்செய்யப்பட்டுள்ளதாக ஹோட்டல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டயானாவை சிறப்பித்து பாடல் எழுதிய சர் எல்டன் ஜான், இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் டேவிட் பெக்காம்,அவரது மனைவி விக்டோரியா பெக்காம் உள்ளிட்டோர், லிஸ்-நாயர் கல்யாணத்திற்கு வரும் விருந்தினர்களில்குறிப்பிடத்தக்கவர்கள்.

கல்யாணத்திற்காக இந்திய பாரம்பரிய சேலைக்கும், மாப்பிள்ளை உடைக்கும் ஆர்டர் கொடுத்துள்ளாராம் லிஸ்.அவரது கல்யாணச் சேலையை பிரபல ஆடை வடிவமைப்பாளர் தருண் தஹிலியானி வடிவமைக்கிறார்.சேலையின் விலை ரொம்பக் கம்மிதான், ஜஸ்ட் 4000 பவுண்டுகள்!

திருமணத்திற்காக இந்தியாவுக்கு வரும் விருந்தினர்கள் இந்திய உடைகளை அணிய விரும்பினால் அவர்களுக்குவசதியாக இருக்கட்டுமே என்று மும்பையில் ஒரு கல்யாண ஆடை அணிகலன் கடையைத் திறக்கவும் லிஸ்திட்டமிட்டுள்ளாராம்.

இங்கு இந்தியக் கல்யாண நிகழ்ச்சிகளில் அணியப்படும் உடைகள், செருப்பு உள்ளிட்ட அனைத்துமேகிடைக்குமாம். இங்கிலாந்து உறவினர்கள் வேறு எங்கும் அலையாமல் இந்த இடத்திலேயே அனைத்தையும்பெற்றுக் காள்ளலாம் என்பதால் இந்தத் திட்டமாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil