நான் அவரோட மிகப்பெரிய ரசிகன்.. ரியல் லைப் டாம் அண்ட் ஜெர்ரி.. பிரபுதேவா யார சொல்றாருன்னு தெரியுதா?

சென்னை : மௌன ராகம் படத்தில் நடன இயக்குனராக அறிமுகமானவர் பிரபுதேவா. நடன இயக்குனராக மட்டுமில்லாமல், நடிகனாகவும் சாதித்து காட்டியவர்.

இது என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான பிரபுதேவா, காதலன், ராசையா, லவ் பேர்ட்ஸ், மிஸ்டர் ரோமியோ, மின்சார கனவு, வி ஐ பி, என்று தொடர் ஹிட் படங்களை கொடுத்து வந்தார்.

காதலன் படத்தில் பிரபுதேவா மற்றும் வடிவேலு காம்போவுக்கு பல ரசிகர்கள் உள்ளனர். இது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் நடிகர் பிரபுதேவா.

 தவிர்க்க முடியாத ஹீரோ

தவிர்க்க முடியாத ஹீரோ

90களில் தொடங்கி இன்று வரை தவிர்க்க முடியாத ஒரு ஹீரோவாக இருந்து வருகிறார் நடிகர் பிரபுதேவா. நடன இயக்குனராக மட்டுமில்லாமல் நடிகனாகவும், டைரக்டராகவும் முன்னணியில் இருக்கிறார் என்று சொன்னால் அது மிகையாகாது. தமிழில் போக்கிரி படத்தின் மூலம் டைரக்டராக அறிமுகமானார். தமிழில் இவர் இயக்கிய முதல் படமே சூப்பர் ஹிட் ஆனதை தொடர்ந்து, வில்லு, எங்கேயும் காதல், வெடி போன்ற பல படங்களை இயக்கினார். ஹிந்தியில் பல படங்களை இயக்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 அனைத்தும் ஹிட் படங்கள்

அனைத்தும் ஹிட் படங்கள்

90களில் இவர் காதலன், ராசையா, மிஸ்டர் ரோமியோ, மின்சார கனவு, விஐபி, காதலா காதலா, சுயம்வரம், டைம், வானத்தைப்போல, பெண்ணின் மனதை தொட்டு, மனதை திருடி விட்டாய் போன்ற பல ஹிட் படங்கள் கொடுத்துள்ளார். இவரது நடனத்திற்கு பல ரசிகர்கள் இருந்தாலும் இவரது நடிப்புக்கென்று ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. பிரபுதேவா தமிழில் மட்டுமில்லாமல் கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என்று பல மொழிகளில் நடித்துள்ளார்.

 ஹிட் காம்போ

ஹிட் காம்போ

காதலன் படத்தில் வடிவேலு பிரபுதேவா காம்போ எந்த அளவுக்கு ஹிட் ஆனதோ, அதேபோல் மனதை திருடிவிட்டாய் படத்திலும் இவர்களின் காம்போ வேற லெவல் ஹிட் ஆனது. சிங் இன் தி ரைன் என்று வடிவேலு செய்யும் அலப்பறைக்கு அளவே இல்லை. இந்த படத்தில் உள்ள அனைத்து காமெடியும் சூப்பர் ஹிட் ஆனதும் குறிப்பிடத்தக்கது.

 டாம் அண்ட் ஜெர்ரி

டாம் அண்ட் ஜெர்ரி

தங்களது பிரண்ட்ஷிப் குறித்து பிரபுதேவா மனம் திறந்து பேசி உள்ளார். அவர் கூறுகையில், நாங்கள் இருவரும் ரியல் லைஃப் டாம் அண்ட் ஜெர்ரி போலத்தான்.. நான் ஷூட்டிங் ஸ்பாட்டில் அவரிடம் பேசிக்கொண்டே இருப்பேன், அவரும் கேட்டுக் கொண்டே இருப்பார். நாங்கள் இருவரும் மிகவும் ஜாலியாக இருப்போம். வடிவேலுவின் சிறந்த 10 ரசிகர்களில் நானும் ஒருவன். நான் வடிவேலுவின் ரசிகன் என்று சொல்வதில் சந்தோஷப்படுகிறேன் என்று கூறியுள்ளார். இதைக் கேட்ட வடிவேலு மற்றும் பிரபுதேவாவின் ரசிகர்கள் மீண்டும் இருவரும் இணையும் படத்திற்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

 செம வைரல்

செம வைரல்

சமீபத்தில் வடிவேலு மற்றும் பிரபுதேவா பார்த்துக் கொண்ட பொழுது அதே "சிங் இன் தி ரைன்" என்ற பாடலை வடிவேல் பாட, அது சமூக வலைதளத்தில் வைரலாகவும் பரவியது. தற்போது பிரபுதேவா நடிப்பில் பஹீரா திரைப்படம் வெளிவர உள்ளது. ஃப்ளாஷ் பேக், மை டியர் பூதம், பொய்க்கால் குதிரை போன்ற பல படங்களும் வரிசையாக வெளிவர உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X