நான் முரட்டு சிங்கிளாகவே இருந்துக்குறேன்.. திருமணம் குறித்து எஸ்.ஜே சூர்யா கலகல பேச்சு!

சென்னை: வாலி குஷி போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் எஸ் ஜே சூர்யா, நடிகராகவும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார்.

துணை இயக்குநராக இருந்த காலத்தில் இவரது உழைப்பை பார்த்து, இயக்குநராகும் வாய்ப்பை அஜித் அளித்ததாக எஸ் ஜே சூர்யா பல மேடைகளில் கூறியுள்ளார்.

இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் இயக்குநர் மற்றும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா, அதற்கான காரணத்தையும் பகிர்ந்து உள்ளார்.

கஷ்டத்துடன் ஆரம்ப காலம்

கஷ்டத்துடன் ஆரம்ப காலம்

ஆரம்ப காலத்தில் துணை இயக்குநராக இருந்து வந்த எஸ்.ஜே.சூர்யா வாலி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். துணை இயக்குநராக வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது இவரது கடின உழைப்பை பார்த்த நடிகர் அஜித், தனது அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை இவருக்கு கொடுத்தார். அதுவே, இயக்குநராக எஸ்.ஜே சூர்யா அறிமுகமாகும் படமாகவும் அமைந்தது. வாலி படத்தில் அஜித் இரட்டை ரோலில் நடித்திருப்பார். இயக்குநராக முதல் படத்திலேயே வெற்றி பெற்றார் எஸ்.ஜே. சூர்யா.

தொடர் வெற்றி

தொடர் வெற்றி

இவர் இயக்கிய அடுத்த படம் தான் குஷி. விஜய் மற்றும் ஜோதிகா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த இந்த படத்திற்கு இன்றும் பல ரசிகர்கள் உள்ளனர் என்று சொன்னால் அது மிகையாகாது. இயக்குநராக மட்டும் இல்லாமல் ஆரம்ப காலத்தில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் எஸ். ஜே. சூர்யா. நியூ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இவரது நடிப்பை பார்த்து அடுத்தடுத்து நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. வியாபாரி, நண்பன், ஸ்பைடர், மெர்சல், மான்ஸ்டர், போன்ற பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான மாநாடு, டான் திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது.

நடிப்பில் பல தோல்விகள்

நடிப்பில் பல தோல்விகள்

ஹீரோவாக இவர் நடித்து வந்த பல படங்கள் வெற்றி பெறாத நிலையில், குணசித்திர கதாபாத்திரத்தில் நடிக்க துவங்கினார் எஸ்.ஜே. சூர்யா. குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வெற்றி பெற்ற இவர், அடுத்தடுத்து குணசித்திர கதாபாத்திரத்தில் நடிக்கும் பல வாய்ப்புகள் கிடைத்தது. அதன் பிறகு வில்லனாகவும் நடிக்கும் வாய்ப்பை பெற்றார் எஸ்.ஜே. சூர்யா, ஸ்பைடர் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டிய இவர் தொடர்ந்து பல வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

பல திறமைகள்

பல திறமைகள்

இயக்குநர் நடிகர் என்று பன்முகத் திறமைகளை கொண்டுள்ள எஸ்.ஜே. சூர்யா இன்றும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாகவே இருக்கிறார். திருமணம் பற்றி யோசிக்காமலேயே இருக்கும் எஸ் ஜே சூர்யாவிடம் எப்பொழுது திருமணம் செய்து கொள்வீர்கள் என்று கேட்ட கேள்விக்கு நான் இப்பொழுது சந்தோஷமாகத்தான் இருக்கிறேன். இன்னும் சாதிக்க பல விஷயங்கள் இருக்கின்றது. ஒரு இயக்குநராக நான் வெற்றி பெற்று விட்டேன். ஆனால், நான் ஒரு நடிகனாக இன்னும் வெற்றி பெறவில்லை, நான் எதிர்பார்க்கும் வெற்றி கிடைக்கும் வரை சிங்கிளாகத்தான் இருப்பேன்.

முரட்டு சிங்கள்

முரட்டு சிங்கள்

சிறுவயதில் நான் காதலித்தேன். ஆனால் அந்த காதல் சில வருடங்கள் கழித்து மறைந்து விட்டது. முடிந்த விஷயத்தை நான் என்றும் யோசிப்பதில்லை. அடுத்தடுத்து படங்களில் நடிக்கும் யோசனை மட்டுமே என்னுள் உள்ளது. முரட்டு சிங்கிளாக இருந்தால் மட்டுமே ஃப்ரீடமாக இருக்க முடியும். இப்பொழுது நான் ஃப்ரீடமாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார் நடிகர், இயக்குநர் எஸ்.ஜே சூர்யா. இவர் நடிப்பில் தற்போது பொம்மை, மார்க் ஆண்டனி, உயர்ந்த மனிதன் போன்ற பல படங்கள் வெளிவர தயாராக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X