ஹே ராம்... ஷாரூக்கிடம் கடன் பட்ட கமல்

சென்னை: ஹே ராம் படத்திற்காக ஷாரூக்கானிடம் கடன் பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் உலகநாயகன் கமல்.

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக நடிகர் ஷாரூக்கான் சென்னை வந்திருந்தார். அந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசனும் பங்கேற்றார்.

படத்தில் நடித்ததற்காக நடிகர் ஷாரூக்கானுக்கு இப்போது வரை கூட சம்பளமே வழங்கவில்லையாம் கமல். விழாவில் தான் ஷாரூக்கானிடம் தான் பட்ட கடன் பற்றி கமல் இப்படி பேசியுள்ளார்

ஹே ராம்...

ஹே ராம்...

கமல்ஹாசன் இயக்கத்தில், அவரே தயாரித்து, நடித்த படம் ஹேராம். இப்படம் இந்தி மற்றும் தமிழில் வெளிவந்தது.

நட்சத்திரப்பட்டாளம்...

நட்சத்திரப்பட்டாளம்...

படத்தில் கமல்ஹாசன் மற்றும் இந்தி நடிகர் ஷாரூக்கான், ராணி முகர்ஜி, வசுந்தரா தாஸ், அதுல் குல்கர்னி, நஸ்ருதீன் ஷா என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர்.

நான் ஒரு கடனாளி...

நான் ஒரு கடனாளி...

இது குறித்து கமல் விழாவில் பேசியதாவது, 'ஷாரூக்கானிடம் நான் கடனாளியாக உள்ளேன். ஹே ராம் படத்தில் நடித்த ஷாரூக்கிற்கு இதுநாள் வரை சம்பளம் வழங்கவில்லை. அதைப்பற்றி அவரும் இதுவரை கேட்டதில்லை.

ஆச்சர்யம் ஆனால் உண்மை...

ஆச்சர்யம் ஆனால் உண்மை...

ஒரு நடிகர் சம்பளமே வாங்காமல் நடித்து ‌கொடுத்து, அதைப்பற்றி அவர் கேட்காததும் உண்மையில் ஆச்சரியமான விஷயம் தான். உண்மையில் அவர் ஒரு அற்புதமான மனிதர். இருந்தாலும் அவரிடம் பட்ட கடனை சீக்கிரம் அடைத்துவிடுவேன்' என தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X