twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    MBA படிக்க தான் சென்னைக்கு வந்தேன்... இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பகிர்ந்த முக்கிய தகவல்!

    |

    சென்னை : மாநகரம், கைதி,மாஸ்டர் என ஹாட்ரிக் வெற்றிகளை கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக உள்ளார்

    உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் படத்தை இப்பொழுது இயக்கியுள்ளார்

    இந்த நிலையில் MBA படிக்க சென்னை வந்து பின் இயக்குனர் ஆனது குறித்து தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பகிர்ந்துள்ளார்.

    இளையாராஜாவின் முக்கிய அறிவிப்பு.. அடுத்த இசை நிகழ்ச்சி எப்போ நடக்கப் போகுது தெரியுமா?இளையாராஜாவின் முக்கிய அறிவிப்பு.. அடுத்த இசை நிகழ்ச்சி எப்போ நடக்கப் போகுது தெரியுமா?

    கைதி

    கைதி

    சூழ்நிலைகள் சில சமயங்களில் நமக்கு என்ன தேவையோ அதை நோக்கி நம்மை கொண்டு செல்லும் அப்படித்தான் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இப்பொழுது தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக உள்ளார். மாநகரம் என்ற படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் அந்தப் படம் மிகப் பெரிய வெற்றி படமாக அமைந்தது மிகப் பெரிய நடிகர்கள் எதுவும் இல்லாமல் தெரிந்த முகங்களை மட்டுமே வைத்து எடுத்த மாநகரம் திரைப்படம் மிகப்பெரிய பாராட்டுக்களை பெற்ற நிலையில் அதை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி திரைப்படம் இந்திய அளவில் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.

    பக்காவான மாஸ்

    பக்காவான மாஸ்

    ஹீரோயின் மற்றும் குத்து பாடல்கள் என எதுவுமே இல்லாமல் ஒரு பக்காவான மாஸ் படத்தை கொடுக்க முடியும் என லோகேஷ் கனகராஜ் நிரூபித்து காட்டியிருப்பார். கார்த்தியின் அட்டகாசமான நடிப்பில் வெளியான கைதி மிகப்பெரிய வெற்றிபெற்ற நிலையில் தமிழ் சினிமாவில் அனைவரும் விரும்பும் மிக முக்கிய இயக்குனராக லோகேஷ் கனகராஜ் மாறினார் . மாஸ்,க்ளாஸ்,ஸ்டைல், டான்ஸ் என கலக்கிக் கொண்டிருந்த விஜய் முதல் முறையாக ப்ரொஃபசராக நடித்த திரைப்படம் மாஸ்டர்.

    கமல்ஹாசன் ஹீரோவாக

    கமல்ஹாசன் ஹீரோவாக

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் விஜய் மற்றும் வித்தியாசமான ரோலில் நடித்து பட்டையைக் கிளப்பி இருப்பார். மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி பவானி என்ற கதாபாத்திரத்தில் மிரட்டியிருப்பார். பெரும் எதிர்பார்ப்பில் பிரம்மாண்ட நட்சத்திர பட்டாளத்துடன் வெளியான மாஸ்டர் மிகப்பெரிய வெற்றி பெற்று வசூலை வாரி குவித்தது. மாஸ்டர் வெற்றியை தொடர்ந்து இப்பொழுது தனது கலையுலக குருவான கமல்ஹாசன் ஹீரோவாக நடிக்கும் விக்ரம் படத்தை இயக்கியுள்ளார் இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி ட்ரெண்டிங்கில் உள்ளது

    MBA படிக்க வந்தேன்

    MBA படிக்க வந்தேன்

    இந்த நிலையில் தான் திரைத்துறைக்கு வந்தது குறித்து சமீபத்தில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றில் பகிர்ந்துள்ளார் சென்னைக்கு MBA படிக்க வந்த லோகேஷ் கனகராஜ் ஒரு வங்கியில் பணியாற்றி உள்ளார். அப்பொழுது சக நண்பர் இடம் இருந்த கேமராவை பயன்படுத்தி குறும்படங்களை எடுக்க ஆரம்பித்த லோகேஷ்- க்கு அந்த குறும்படங்கள் மிகப் பெரிய அங்கீகாரத்தை பெற்றுத் தந்தன. இந்த நிலையில் மிகக்குறைந்த பட்ஜெட்டில் மாநகரம் என்ற படத்தை எடுத்து வெற்றி பெற்ற லோகேஷ் கனகராஜ் அதன்பிறகு முழுநேர இயக்குனராக மாறியதாக சமீபத்தில் அளித்த நேர்காணலில் ஒன்றில் லோகேஷ் கனகராஜ் இந்த தகவலை பகிர்ந்துள்ளார்.

    English summary
    I Came to Chennai to Study My MBA Course Says Director Lokesh Kanagaraj
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X