கடன் பிரச்சனையால் தான் நடிக்க வந்தேன்.. நடிகர் சூர்யா வெளிப்படையாக கூறிய தகவல்!

சென்னை: தமிழ் சினிமாவில் நடிப்பின் நாயகனாக உள்ளார் நடிகர் சூர்யா

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாள மொழிகளிலும் சூர்யாவுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளதால் தமிழுக்கு இணையாக தெலுங்கிலும் இவரது படங்கள் மிகப்பெரிய வசூல் சாதனைகளை புரிந்து வருகிறது

இந்த நிலையில் தனியார் யூடியூப் சேனல் பேட்டியில் கடன் பிரச்சினையால் தான் நடிக்க வந்தேன் என்ற தகவலை நடிகர் சூர்யா பகிர்ந்துள்ளார்

 ஆஸ்கர் கதவுகளை தட்டியது

ஆஸ்கர் கதவுகளை தட்டியது

சூர்யாவின் நடிப்பில் வெளியாகும் ஒவ்வொரு திரைப்படம் ரசிகர்களை பிரமிக்க வைத்து வருகிறது. தனது ஒவ்வொரு படங்களுக்கும் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் சூர்யாவின் சூரரைப்போற்று மற்றும் ஜெய்பீம் உள்ளிட்ட திரைப்படங்கள் ஆஸ்கர் கதவுகளை தட்டியது. சூர்யாவின் நடிப்பில் வெளியான சூரரை போற்று திரைப்படம் ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டது அதைத்தொடர்ந்து முதல்முறையாக வக்கீல் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்த ஜெய்பீம் திரைப்படமும் ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டது

 நடிப்பின் நாயகனாக

நடிப்பின் நாயகனாக

இவ்வாறு நடிகர் சூர்யாவின் திரை படங்கள் ஒவ்வொன்றும் கமர்சியல் ரீதியாக மட்டுமல்லாமல் சமூகத்திற்கு தேவையான முக்கிய கருத்துக்களையும் உள்ளடக்கி வருகிறது. இப்பொழுது பிரம்மாண்ட வளர்ச்சியின் மூலம் தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக நடிப்பின் நாயகனாக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் சூர்யா தமிழ் சினிமாவிற்கு நேருக்கு நேர் படத்தின் மூலம் முதன்முறையாக அறிமுகமானார் இயக்குனர் வசந்த் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் சூர்யா மற்றும் விஜய் என இருவரும் இணைந்து நடித்திருப்பார்கள்.

 அவமானங்களை கண்டு

அவமானங்களை கண்டு

மிகப் பெரிய திரை குடும்பத்தில் இருந்து நடிக்க வந்தாலும் தனது சொந்த முயற்சியின் மூலம் இப்பொழுது எட்டாத உயரத்திற்கு உயர்ந்திருக்கும் சூர்யாவின் நடிப்பு வளர்ச்சி என்பது அசாதாரணமானது. நடிக்க வந்த புதிதில் பல அவமானங்களை கண்டு அதன் பிறகு நடிப்பில் தனக்கென தனி முத்திரையை தற்போதுள்ள சூர்யாவுக்கு தமிழில் எந்த அளவிற்கு ரசிகர்கள் பட்டாளம் உள்ளதோ அதேபோல மலையாளம் மற்றும் தெலுங்கு மொழியிலும் இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

 சில நிமிடங்களே தோன்றினார்

சில நிமிடங்களே தோன்றினார்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பிவிக்ரம் நடிப்பில் ல் சமீபத்தில் வெளியான விக்ரம் படத்தில் சில நிமிடங்களே தோன்றிய சூர்யாவின் கதாபாத்திரம் ரசிகர்களை ஆர்ப்பரிக்க வைத்துவிட்டது அடுத்த லோகேஷ் கனகராஜ் படத்தில் முழுநீள கதையில் சூர்யா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

 கடன் பிரச்சினையால் நடிக்க வந்ததேன்

கடன் பிரச்சினையால் நடிக்க வந்ததேன்

இந்த நிலையில் சமீபத்தில் தனியார் யூடியூப் சேனல் பேட்டியில் நடிகர் சூர்யா கடன் பிரச்சினையால் தான் நடிக்க வந்ததாக கூறியுள்ளார். மேலும் நடிக்க வந்த புதிதில் தான் பட்ட அவமானங்கள் குறித்தும் எனக்கு என்ன வராது என்று சொல்கிறார்களோ அதைச் செய்து காட்ட வேண்டும் என்ற வெறிதான் இப்பொழுது என்ன இந்த உயரத்திற்கு கொண்டு சென்றது என சூர்யா பேசியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X